தமிழ் கற்பித்தல்

Vinkmag ad

அன்பானவர்களே…,

உங்களுக்கு ஓர் வேண்டுகோள்.

உங்கள் அருகில் 5 -10 அகவையுடைய மாணவர்கள் இருந்தால் அவர்களிடம் தமிழ்ச் செய்தித்தாளைக் கொடுத்துப் படிக்கச் சொல்லுங்கள்.

1) பிழையில்லாமல் எத்தனை பேர் படிக்கிறார்கள் – கணக்கெடுங்கள்.

2) படித்தது என்ன என்று ஒவ்வொரு சொல்லாகக் கேளுங்கள். பாதி சொற்களுக்குப் பொருள் தெரியாது.

3) படித்ததிலிருந்து நீ என்ன புரிந்து கொண்டாய் என்று கேளுங்கள். அவர்கள் எந்த நிலையில் இருக்கிறார்கள் எனப் புரியும்.

இவர்கள் தான் அடுத்த தலைமுறைகள். ஆங்கில வழி பள்ளியில் படிக்கும் மாணவர்களில் 40 விழுக்காட்டினருக்குப் படிக்கத் தெரியவில்லை. அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களில் 20 விழுக்காடு மாணவர்கள் படிக்க தடுமாறுகிறார்கள். இந்த நிலை சரியா என ஒப்பு நோக்கவும்.

தமிழ் மொழியில் ஈடுபாடு உள்ளவர்கள் இதைச் சரி செய்ய முன் வரவேண்டும். இல்லையென்றால் அடுத்த தலைமுறை தமிழ்ப் படிக்கத் தெரியாத தலைமுறையாக இருக்கும்.

நான் உருவாக்கியுள்ள தமிழ் கற்பித்தல் கையேட்டைப் பயன்படுத்தி நம் மாணவர்களுக்குக் கற்பிக்க முன்வருமாறு ஈடுபாடுள்ள நண்பர்களை அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

அடுத்த தலைமுறையை வளர்த்தெடுப்போம்.

திண்ணை இருந்தால் போதும்,

5 பேர் உங்களால் படிக்கத் தெரிந்தவர்களாக – மாறினால் போதும். அருள்கூர்ந்து நெஞ்சில் பதிக்கவும். நான் உதவுகிறேன். WhatsApp … 8667421322

News

Read Previous

இல்லாதவர்க்கு உதவிகள்..

Read Next

கருணை அடிப்படை பணி நியமனம்

Leave a Reply

Your email address will not be published.