தமிழ்த் தாத்தா உ. வே. சா

Vinkmag ad

தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாத ஐயரின் பிறந்தநாள் இன்று.

1. அழிந்து போகும் நிலையிலிருந்த பண்டைத் தமிழ் இலக்கியங்கள் பலவற்றைத் தேடி அச்சிட்டுப் பதிப்பித்தவர்.

2. 90 க்கும் மேற்பட்ட புத்தகங்களை அச்சுப்பதித்தது மட்டுமின்றி 3000 க்கும் அதிகமான ஏட்டுச்சுவடிகளையும் கையெழுத்தேடுகளையும் சேகரித்திருந்தார்.

3. 17 ஆம் வயதில் நாகப்பட்டினம் மாவட்டம் திருவாவடுதுறை சைவ ஆதீனத்தில் தமிழ் கற்பித்துக் கொண்டிருந்த புகழ் பெற்ற மகாவித்துவான் என அழைக்கப்பட்ட தமிழறிஞர் திருச்சிராப்பள்ளி மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களிடம் 5 ஆண்டு காலம் பயின்று தமிழறிஞர் ஆனார்.

4. தனது நண்பர் சேலம் ராமசாமி முதலியார் மூலம் கையால் எழுதப்பட்ட சீவக சிந்தாமணி நூலை பெற்று முதன் முதலாக அச்சில் ஏற்றினார். அது ஒரு சமண நூல் என்பதால் கும்பகோணத்தில் இருந்த சமண மத பெரியவர்களிடம் தனது சந்தேகத்தைக் கேட்டுத் தெளிந்தார். பின்னர் இந்த ஆர்வம் மற்ற தமிழ் இலக்கியங்களுக்கும் பரவியது. கிராமம் கிரமமாக குடிசைதோறும் சென்று ஓலைச்சுவடியில் இருந்த நூல்களை சேகரித்தார்.

5. உ.வே சாமிநாத ஐயர், உழைத்திராவிட்டால் தமிழுலகிற்கு சிலப்பதிகாரத்தைப் பற்றித் தெரியாமலே போயிருக்கு வாய்ப்பிருந்திருக்கும். அகநாநூற்றிற்கும் புறநாநூற்றிற்கும் வேறுபாடு தெரிந்திருக்காது. மணிமேகலை மண்ணோடு மறைந்திருக்கும் வாய்ப்பிருக்கும். இப்படி நூற்றுக்கணக்கான நூல்களை அழிவிலிருந்து காப்பாற்றி பதிப்பித்துத் தந்தவர் என்னும் பெருமை உடையவர். தனது சொத்துக்களை விற்று தமிழ் இலக்கியங்களை மீட்ட உ.வே.சா.வை தமிழ்ச் சமூகம் என்றைக்கும் தலையில் வைத்துக் கொண்டாட வேண்டும்.

6. உ.வே.சா.வின் அருந்தொண்டை பாராட்டும் விதமாக மஹாகவி சுப்பிரமணிய பாரதி அவரை அகஸ்திய முனிவருக்கும் ஒப்பானவர் என்று பொருள்படும்படி ‘கும்பமுனி’ என்று புகழ்ந்தார். ‘மகாமகோபாத்யாய’ என்று ‘சிறந்த ஆசிரியர்களுள் சிறந்தவர்’ பட்டம் பெற்றவர். இன்னும் பட்டங்களை கௌரவங்களையும் கொண்டிருந்தாலும் தமிழ் சமூகத்தால் “தமிழ்த் தாத்தா” என்று அன்போடு அழைக்கப்படுகிறார்.

7. தமிழ்த் தாத்தா உ. வே. சா அவர்கள் மட்டும் இல்லையெனில் அழியும் நிலையில் இருந்த அத்தனை இலக்கியங்களையும் தமிழர்கள் என்றுமே காணமுடிந்திருக்காது. இன்று தமிழர்களின் மிகப்பெரிய சொத்தாக இருக்கின்ற தமிழ் இலக்கியங்களையும் பழமையான ஓலைச்சுவடிகளையும் தேடி தேடி ஆவணப்படுத்தினார். தமிழ் மீது இவர் கொண்ட பற்றினால் நம் தமிழ் நூல்கள் ஓலைச்சுவடிகளில் இருந்து அழியாமல் புதுபிக்கப்பட்டன.

8. இவருக்கு உற்ற துணையாக இருந்தவர்கள் பல்லவர்களின் வழித்தோன்றல்களான உடையார்பாளையம் பாளையக்காரர்களே.

உடையார்பாளையம் மன்னர்களை தமிழ் காத்த பல்லவர்கள் என்று அழைப்பதுண்டு.

இதன் நினைவாக உடையார்பாளையம் நகரில் தமிழ்த்தாத்தா உ. வே. சா அவர்களுக்கு ஓர் சிலை அல்லது நினைவு மண்டபம் அமைக்கப்படவில்லை யே என்பது மிகவும் வருத்தமான செய்தியே..

9. தமிழ்த்தாத்தா உ.வே.சா ஊர் ஊராய் தேனீயாய் பறந்து ஓலைச்சுவடிகளை சேர்த்து அதை இவ் உலகம் அறியும்படி செய்தார்.. அந்த புனிதமான செயலுக்கு பெரும் உதவி செய்து ஆதரித்து வந்தனர் உடையார்பாளையம் பல்லவ மன்னர்கள் .

உடையார்பாளையம் பல்லவ சாம்ராஜ்யத்தின் மிக உயர்ந்த சொத்து தமிழ்த்தாத்தா உவேசா அவர்கள்.

அனைவருக்கும் தமிழ்த்தாத்தா உவேசா அவர்களின் பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!

News

Read Previous

உலக பெற்றோர் தினம்

Read Next

இனிய நண்பனே!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *