டொனால்ட் டிரம்ப் – வெறுப்புணர்ச்சியின் அசிங்கமுகம்

Vinkmag ad

டொனால்ட் டிரம்ப் – வெறுப்புணர்ச்சியின் அசிங்கமுகம்

–    திருச்சி A.M.அப்துல் காதிர் ஹசனி

அமெரிக்காவை பொறுத்தவரை அதிபர் தேர்தலுக்கு வேட்பாளாராய் அறிவிக்கப்பட்டபின், பன்முகம் கொண்ட, பல இனங்கள் கொண்ட அமெரிக்காவில் ஓட்டுபெற்று வெல்வதற்காக எல்லோரையும் அரவணைக்கும் விதமாகதான் அதிபர் வேட்பாளர் பேசுவார். அமெரிக்காவின் வளர்ச்சி பற்றி பேசுவார். சமீபகாலங்களில் தீவிர வாதத்தை கட்டுபடுத்துவதை பற்றி பேசுவார். குறிப்பாக அமெரிக்க முஸ்லிம்களை அரவணைக்கும் வகையில் கூட பேச்சு அமைந்திருக்கும். ஆனால் அதிபரானப்பின் வழக்கம் போல் முஸ்லிம்களுக்கெதிரான நடவடிக்கைகள் முடுக்கிவிடப்படும். சமீபத்திய அரை நூற்றாண்டு அமெரிக்க வரலாற்றில் இதுதான் நடந்து வந்துள்ளது. ஆனால்  வேட்பாளாராய் அறிவிக்கப்பட்ட பின்பிருந்தே தன் இனவெறி பிரசாரத்தை தொடங்கிவிட்டார் டொனால்ட்.

வோக்ஸ் என்ற அமெரிக்க செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தி இது.

Donald Trump wants to ban Muslims from immigrating to or visiting the US. He wants to close down some American mosques and monitor the rest. He’s flirted with the idea of requiring all American Muslims to register in a database..

“முஸ்லிம்கள் அமெரிக்காவில் குடியேறு வதையும்,வருகை புரிவதையும் தடை செய்ய விரும்புகிறார். அமெரிக்காவின் சில பள்ளிவாசல்களை மூட வேண்டும் என்றும் மற்ற ஏனைய பள்ளிவாசல்களை கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டுவரவேண்டும் என்றும் விரும்புகிறார். எல்லா அமெரிக்க முஸ்லிம்களைபற்றியான தகவல்கள் பதிவு செய்ய வேண்டிய அவசியம் இருக்கிறது என்ற கருத்தையும் வலியுறுத்தி இருக்கிறார்”.

CNN தொலைகாட்சிக்கு பேட்டியளிக்கும் போது அமெரிக்க முஸ்லிம்கள் மீதான கட்டுபாட்டை வலுபடுத்த வேண்டும் என்றார். முஸ்லிம்களின் தகவல் தொகுப்புகளை சேமிக்கவேண்டும். அவர்களுக்கென தனி அடையாளத்தை ஏற்படுத்த வேண்டும் கொக்கரித்தார்.

NBC நிருபர் குறுக்கிட்டு, ஹிட்லரின் நாசிச முடியாட்சியின் போது எப்படி  யூதர்களை தனிமைபடுத்தி அடையாளம் காண தாவூதின் தங்க நட்சத்திர அடையாளத்தை கண்டிப்பாக யூதர்கள் தங்களின் ஆடைகளில் பதித்திருக்க வேண்டும் என்று கட்டளை போட்டிருந்தார்களோ அதேபோல்தான் இதுவுமா ? என்று கிடுக்குபிடி போட்ட போது பதில் சொல்லமுடியாமல் பசப்பினார்..

இஸ்லாமிய எதிரிகள் அரசியல் ரீதியாக முஸ்லிம்களை ஒடுக்க செய்துவரும் அடுக்கடுக்கான முயற்சிகளின் தொடர்ச்சிதான் இதுவும்.

ஆரம்பத்தில் முஸ்லிம்களுக்கெதிராக தீவிரவாததிற்கு எதிரானப்போர் என்று முழங்கினார்கள்.

பிறகு இஸ்லாமிய தீவிரவாததிற்கு எதிரானப்போர் என்று மாற்றி முழங்கினார்கள்.

இன்று முஸ்லிம்களுக்கு எதிரானப்போர் என்று முழங்க தொடங்கிவிட்டார்கள்.

இதை என் கருத்தாக முன்வைக்கவில்லை இதே இந்த டொனால்ட் பற்றி வோக்ஸ் செய்தி நிறுவனம் 9/12/2015 அன்று வெளியிட்டுள்ள செய்தி தலைப்பு இதுதான்  “Donald Trump’s war on Muslims, explained”  (டொனால்ட் டிரம்பின் முஸ்லிம்களுக்கு எதிரானப்போர், விளக்கமளித்தார்).

இவரது பேச்சிற்கு அமெரிக்க முஸ்லிம்களிடையே கடும் கண்டனம் எழுந்துள்ளது. இவரது அலுவலகத்திற்கு எதிராய் பெரும் முற்றுகை போராட்டம் முஸ்லிம்களால் நடத்தப்பட்டிருக்கிறது

எங்களை முடிந்தால் வெளியேற்று என்று முஸ்லிம்கள் ஆவேச முழக்கமிட்டு இருக்கிறார்கள். இவனுக்கு எதிரான போராட்டம் தொடரும் என்றும் கூறியிருக்கிறார்கள்.

2006 ஆம் ஆண்டு பதினாறாம் போப் பெனிடிக்ட் ஒரு சமயம் பேசும் போது,

பைசாந்திய மன்னன் முஹம்மது நபியவரின் வழிமுறைகள் படி நடந்தவன். இஸ்லாமிய நிறுவனரான  முஹமமதுவோ தீயவர் இன்னும் மனிதாபிமான மற்றவர்”  என்று பேசி வாங்கி கட்டிகொண்டார். பிறகு உலகம் முழுவதிலிருந்து கடும் கண்டனங்கள் எழவே  மிகவும் கேவலம் அடைந்தவராக  I am deeply sorry என்று கேட்கும் நிலைக்கு தள்ளப்பட்டு அசிங்கபட்டார்.

இஸ்லாத்தை விமர்சிக்கும் ஒவ்வொருவனும் அசிங்கபட்டே ஆகவேண்டும்.

இது போன்றவர்கள் இஸ்லாத்தின் மீதும் முஸ்லிம்கள் மீதும் சேற்றை அள்ளிவீசுவது நேற்று,இன்று நடக்கும் விஷயமல்ல.மேலும் இவ்வாறு பேசுவது முஸ்லிம்கள் எதிரி எனவே அவர்களை ஒடுக்க வேண்டும் என்ற பொத்தாம் பொதுவான நோக்கமல்ல.

இது இஸ்லாத்தின் வளர்ச்சியின் மீதுள்ள கடும் எரிச்சலின் வெளிபாடு. முஸ்லிம்கள் மீதான பொறாமையின் உச்சம்.

இஸ்லாத்தில் குழப்பத்தை விளைவிக்க என்னவெல்லாம் முயற்சிகளும் பிரயத்தனங்களும்  செய்தார்களோ அவையெல்லாம் நீர்த்து போனதால் ஏற்பட்ட கடும்கோபம்.

முஸ்லிம்கள் அமெரிக்காவிற்குள் நுழையக்கூடாது என்று ஊளையிடும் இந்த  நரி நாளை ஒருவேளை அமெரிக்காவின் சட்டாம் பிள்ளையாய் ஆகிவிட்டால் கொஞ்சம் கூட வெட்கம் இல்லாமல் அரபு நாடுகளுக்கு சுற்று பயணம் வருவான். வர்த்தக ரீதியில் சுரண்டுவதற்காக இஸ்லாமிய நாடுகளின் அரசியல் தலைவர்களை கட்டியணைத்து போஸ் கொடுப்பான்.

ஆனால் இவர்களுக்குள் இருக்கும் இஸ்லாமிய வெறுப்புணர்ச்சி இவர்களை இஸ்லாத்திற்கு எதிராய் இழுத்துக்கொண்டே இருக்கும்.

முஸ்லிம்களின் வளர்ச்சியை உலகம் முழுவதிலும் ஒடுக்கும் ஒருபொது மனோநிலையை உருவாக்குவதற்கு இந்தபேச்செல்லாம் மிக சிறப்பாக உதவும்.

இந்த உத்தி அவர்களுக்கு கடந்த காலங்களிலும் உதவி இருக்கிறது.

முஸ்லிம்களை அமெரிக்காவிற்குள் வரக்கூடாது என்று கூறுவதை கொண்டோ, முஸ்லிம்கள் தீவிரவாதிகள் என்று பொய்யான பரப்புரை செய்வதை கொண்டோ இஸ்லாத்தை ஒருபோதும் அழிக்க முடியாது என்பது நம்மை விட இவர்களுக்கு நன்றாகவே தெரியும். இருந்தாலும் காலமெல்லாம் முஸ்லிம்களை மனோரீதியில் துன்புறுத்துவதும், சர்வதேச சமூகத்திடமிருந்து தனிமை படுத்துவதும்தான் இவர்களின் நோக்கம்.

உலக அரசியல் வரலாற்றில் உண்மையான முஸ்லிம்களின் போர் மட்டுமல்ல முஸ்லிம்களின் போராட்டங்கள் கூட  எப்போதுமே அநீதங்களுக்கு எதிராகவும், உரிமைகளை பெறுவதற்காகவும் தான் இருந்திருக்கிறது,இருந்துகொண்டுமிருக்கிறது. குறிப்பிட்ட மதங்களுக்கும்,இனங்களுக்கும் எதிராக நடந்ததில்லை என்பதும் கூட இந்த பாதகர்களுக்கு தெரியும். இன்று நடக்கும் பயங்கரவாத செயல்களுக்கான விதைகளும்,வேர்களும் அரசியல்வாதிகள் தான்.

முஸ்லிம்களாகிய நாம் எதற்கும் தயங்க கூடாது. அறவழியில் வாய்மையோடு அசத்தியங்களுக்கு எதிராக போராடிக்கொண்டே இருக்கவேண்டும்.

குரானில் அல்லாஹ் கூறுகின்றான்

எனவே நீங்கள் தைரியத்தை இழக்காதீர்கள்; கவலையும் கொள்ளாதீர்கள்; நீங்கள் முஃமின்களாக இருந்தால் நீங்கள் தாம் உன்னதமானவர்களாக இருப்பீர்கள். (அல்குர்ஆன் 3:139)

News

Read Previous

பேரழிவல்ல, பெரும் வாய்ப்பு!

Read Next

மு‌து​கு​ள‌த்​தூ‌ர் க‌ல்​லூ​ரி​யி‌ல் ​கிறி‌ஸ்​‌து​ம‌ஸ் ‌கொ‌ண்​டாட்​ட‌ம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *