டிமெண்ஸியாவுடன் வாழ்க்கை.

Vinkmag ad

டிமெண்ஸியாவுடன் வாழ்க்கை.
(Living with dementia)

சராசரியா எல்லோருக்கும் ஒரு லட்சியம் இருக்கும். அரசாங்க வேலை. , நல்ல இடத்துல கல்யாணம். ., அறிவான குழந்தைகள்.., வீடு., அதுக்கு முன்னாடி போர்டிக்கோ வுல வண்டி.,
குழந்தைங்க கல்யாணம்., பேரக்குழந்தைங்க.
ரிட்டையர்டு ஆயி பென்சன். அடுத்து நிம்மதியான வாழ்க்கை. இது தான் எல்லாரும் நினைக்கிறது. அதில் எல்லா பகுதியவும் திட்டம் போட்டு வெற்றி பெற்றாலும்… ரிட்டயர்ட் ஆன பிறகு வரும் வாழ்க்கையை …. “இனிமே என்ன இருக்கு” என்ன எண்ண ஓட்டத்துல சரியா திட்டம் போடாம., அல்லல் படுவது .., அந்த நிலைக்கு வரும் போது தான் உணரமுடியும். அப்போ வர்ற எண்ணங்களை பகிர்ந்து கொள்ளக்கூட யாரும் இருக்க மாட்டாங்க. இப்பலாம்., அடுத்தவங்க சொல்லுறத கவனிச்சு., கிரகிச்சு… பதில் சொல்லக்கூட பொறுமை இருக்காது. இதில் வயதானவர்கள் பேசுனாலே “வழவழன்னு பேசாதீர்கள். என்ன மேட்டர்னு சுருக்கமா சொல்லுங்கள்”., என்றும் , “பெருசு… சரியான அருவை”., என்றும் ஓடிவிடுவோம்.

ரிட்டயரட்மண்ட் வாழ்க்கை என்பது ஒரு தனி உலகம். “DIE BEFORE DISHONEST”. தமிழ்ல சொல்லனும்னா “ரோஷம்”… நம்மளோட மதிப்பும் ., மரியாதையும் குறையுறதுக்குள்ள இறந்துடனும். உலகத்துல சக்ரவர்த்தியா வாழ்ந்தவங்க கூட…, முதுமைல… மரியாதை இழந்து கூனிகுருகி .,….
உலகத்தையே கண்பார்வையில அடக்கி வைத்திருந்து வாழ்ந்தவர்கள்……
3 X 6 படுக்கையே உலகம்னு வீழ்ந்து மடிந்திருக்கிறார்கள்.
பயமுறுத்தவில்லை. இப்பலாம் 60 வயதுக்கு மேல உள்ளவங்க., பெரும்பாலும் தனியாக தான் வாழ்கிறார்கள். வார கடைசிக்கு ஏங்கி காத்திருப்பார்கள். பிள்ளைகள் ., பேரபிள்ளைகள் வருகையை எதிர்பார்த்து. …

இதில் பேரபிள்ளைகளை கவனிப்பதற்காக., வேலைக்கு செல்லும் பிள்ளைகளின் வீட்டில் இருப்பவர்கள் தனி இனம்.

இதில் பெரிய சவால் “DEMENTIA”.
நம்மூருல சராசரி ஆயுட்காலம்.., தோராயமாக 68 – 73
இங்கிலாந்தில் 79 – 82 .
அதிலும் 2000 ஆண்டுக்கு பிறகு 90வயதுடையோர் சதவீதம் உயர்ந்துள்ளது.
அதில் 89% பேர் DEMENTIA விற்குள் வந்து விடுகிறார்கள்.

ஒருவருக்கு dementia என்று கண்டறிந்த நாள் முதல்., ஒவ்வொரு நாளும் சவால் நிறைந்தது இறக்கும் வரை.
இங்கு நல்ல உடல்நிலையில் இருக்கும் ஒருவரின் உயில் இது தான். “எனக்கு dementia வந்தால்…, வீட்டிலேயே வைத்து பார்க்கவும்.., நர்ஸிங் ஹோம் க்கு அனுப்பி விடாதீர்கள்”..
ஆனால் அவர்களுக்கு இந்த கடைசி ஆசை … நிராசை தான்.
மேற்கு ஐரோப்பிய நாட்டு மக்களின் சாபக்கேடு “dementia”… நம்மூரிலும் அரிதாக இருந்தது ஆனால் அசுர வேகத்தில் ஆட்கொண்டு கொண்டிருக்கிறது.

அருள் நீதி தேவன்
தமிழ் குடிமகன்

முதுகுளத்தூர்.

News

Read Previous

மூன்று வைத்தியர்கள்

Read Next

மூன்றாவது ஐரோப்பியத் தமிழ் ஆய்வியல் மாநாடு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *