சோம்பல்

Vinkmag ad

”சோம்பல் உங்களைத் தழுவாமல்…!”
……………………………………………………………………………………………………………….சோம்பல் என்றால் என்ன? எந்த வேலையும் செய்ய மனமில்லாமல் உடலுக்கு மட்டும் சுகம் கொடுக்கும் ஒரு உனுபவம்தான் சோம்பல். ( LAZINESS) சோம்பல் ஒருதரம் மனதிற்குள் நுழைந்து விட்டால் பிறகு அதன் அரசாட்சிதான்..
சோம்பல் இப்போது நாகரிகமாக மாறி விட்டது. ‘நான் பெரிய சோம்பேறி! எந்த வேலையும் செய்ய மாட்டேன்.!’ என்று சொல்வது இன்று பழகக்கமாகப் போய் விட்டது…

ஆனால்!, சோம்பல் அத்தனை இனிமையானதல்ல. இந்த சோம்பல் நம் வாழ்க்கை முன்னேற்றத்தை தடுப்பதோடு மட்டுமல்லாமல், பலவகையான நோய்களையும் கொண்டு வந்து சேர்ந்து விடுகிறது…

புற்றுநோயை கைப்பிடித்து கூட்டிவந்து நம் உடலில் சேர்ப்பது மது, புகைப்பான், புகையிலை என்ற மூன்றுதான் இது ஓரளவு மருத்துவம் அறிவு உள்ள அனைவரும் அறிவார்கள்…

இந்தப் பட்டியலில் தற்போது புதிதாக சேர்ந்திருப்பது சோம்பல்…

சோம்பலால் வறுமையில் வாடிய ஒருவன் ஒரு அறிஞரை சந்தித்து, தனது வறுமையைப் போக்கும்படி வேண்டினான். அவனது சோம்பலை உணர்ந்த அவர் அவனுக்கு அதை உணர்த்த ஒரு கதையைக் கூறினார்…

ஒரு மரங்கொத்திப் பறவை, தன் கூரிய அலகால் டொக் டொக்கென்று மரத்தைக் கொத்திக் கொண்டே அந்த மரத்தின் மேல் தாவித் தாவி ஏறியது…

அதைப் பார்த்த ஒரு மனிதன், “மூடப் பறவையே, எதற்காக மரம் முழுவதையும் கொத்திக் கொண்டு இருக்கிறாய்.? இது வீண் வேலை அல்லவா…?” என்று கேட்டான்…

அதற்கு அந்தப் பறவை, மனிதனே!, நான் என் உணவைத் தேடுகிறேன். சோம்பேறியாக இருந்தால் எதுவும் கிடைக்காது…! என்றது…

அவன் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, தொடர்ந்து மரத்தைக் கொத்தி, மரத்தில் ஓட்டை போட்டு, அதற்குள் பதுங்கியிருந்த புழுக்களை எடுத்து உண்ண ஆரம்பித்தது…

தனது உணவைச் சாப்பிட்டு முடித்த பிறகு, அந்த மனிதனைப் பார்த்து, மனிதனே!, நீயும் தேடு. மரத்திலும், மண்ணிலும், நீரிலும் ஏன் எல்லா இடங்களிலும் தேடு. உனக்கும் ஏதாவது கிடைக்கும்…” என்றது…

கதையைச் சொல்லி முடித்த அறிஞர், அந்த மனிதனைப் பார்த்து, நீயும் இந்தப் பரந்த உலகத்தில் தேடு, உனக்கும் ஏதாவது கிடைக்கும். சோம்பேறியாக இருந்தால் வறுமையும், நோயும்தான் உனக்கு கிட்டும்” என்றார்…

ஆம் நண்பர்களே…!

🟡 நீங்கள் சோம்பலாக காலத்தைக் கழித்துக் கொண்டு இருக்கும்போது அடுத்தவனோ!, தானே வாய்ப்புகளை உருவாக்கிக் கொண்டு, உழைத்துக்கொண்டே சென்று உங்கள் கண்முன்னால் வெற்றி பெற்று விடுகிறான்…!

🔴 எனவே!, சோம்பலுக்கு விடை கொடுத்து விடுங்கள். இனியும் காலம் இருக்கிறது, ‘இன்று மட்டும் ஓய்வு எடுக்கலாம்’ என்று சோம்பல்கொண்டால் அந்த காலம் வரவே வராது. இன்று மட்டும், இன்று மட்டும் என்று காலம் பறந்து விடும். பின்பு வெற்றி அடைவது எங்கே…? நம்மைப் பார்த்து பிறர் கேலி செய்வார்கள்…!!

⚫ எனவே!, சோம்பலை விட்டுத் தள்ளுங்கள்…! உயிரோடு உள்ள மனிதனுக்கு கட்டப்படும் கல்லறையே சோம்பல். சோம்பல் உங்களை ஏமாற்றாமல் காத்துக் கொள்ளுங்கள், ஓய்வு என்பது சோம்பலின் நண்பன். ஓய்வை உள்ளே நுழைய விட்டால், சோம்பலும் வரும். உழைப்பவருக்கு எந்த வேலையும் இழிவல்ல. சோம்பல்தான் இழிவு…!!!

– உடுமலை சு. தண்டபாணி✒️
( 94429-28401)

News

Read Previous

வஃபாத் அறிவிப்பு

Read Next

போலி மனிதர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *