கைபேசிகளின் நன்மை, தீமைகள்!

Vinkmag ad

கைபேசிகளின் நன்மை, தீமைகள்!

AP,Mohamed Ali

 

1 ) அமெரிக்காவில் பதினோரு வருட ஆய்வில், எமெர்சென்சி அவசர எண் (911 ) அழைப்புகளில் கைபேசி அழைப்புகளால் வந்த செய்திகள் மூலம் 137 உயிர்கள் காப்பாற்றப் பட்டுள்ளன. சமீபத்திய ஒரு செய்தி என்னவென்றால், அராபிய பத்திரிகையாளரும், அமெரிக்காவில் தஞ்சம் புகுந்தவரும்,  அராபிய தற்போதைய இளவரசரின் கொள்கைகளை விமரிசத்தவருமான, ‘கசோகி’ துருக்கி வந்திருந்தபோது அவரை சமாதானமாக பேச வேண்டும் என்று அராபிய தூதரக அதிகாரிகள் அழைத்துள்ளனர். அவர்களின் கோரிக்கையேற்று நல்லெண்ணத்துடன் அங்கு சென்றுள்ளார். ஆனால் அவர் திரும்பி வரவில்லை. துருக்கி அரசு அவரை அராபிய தூதகரத்தில் வைத்து கொன்றிருக்கிறார்கள் என்று குற்றம் சாட்டியுள்ளது. அது எப்படி தெரிந்தது என்றால் பத்திரிக்கையாளர் கசோகி கையில் கட்டியிருந்த ஸ்மார்ட் கடிகாரத்தினை தனது காரில் வைத்துவிட்டுச் சென்ற கைபேசியுடன் இணைத்திருந்தாராம். அராபிய தூதரகத்தில் நடந்ததினை அவர் கையில் கட்டியிருந்த  கடிகாரத்தில் பதிவான உரையாடல் செல் போனில் பதிவாகி யிருந்ததின் அடிப்படையில் துருக்கி அரசு குற்றம் சுமத்தியுள்ளது. இதுபோன்ற எண்ணற்ற சமபாவங்கள் தெரிந்து கொள்ள மிகவும் ஏதுவாக கைபேசி அமைந்துள்ளது.

2) அதிக எடை உள்ளவர்கள் தங்கள் எடையினைக் குறைக்க தாங்கள் சாப்பிடும் உணவு அளவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர தங்களின் ஸ்மார்ட் போன் அப்பிளிக்கேஷன் முறைப் படி சாப்பிட்டு உடம்பின் எடையினை கட்டுப் பாட்டில் வைத்துக் கொள்ளலாம். அதேபோன்று விளையாட்டு வீரர்கள் தங்களுடைய விளையாட்டின் வேகத்தினையும், நடை பயிற்சியில் ஈடுபடுபவர்கள் தங்கள் நடையில் எத்தனை கலோரி செலவழித்துள்ளோம் என்றும் தெரிந்து கொள்ள ஏதுவாகும்.

3) இடத்தினை தெரிந்து கொள்ளும் நேவிகேஷன் மூலம் நாம் செல்லும் இடத்தினை துல்லிதமாக தெரிந்து கொள்ளலாம். வயது முதியோரின் பயன்பாட்டிற்கு இது இன்றியமையாக உள்ளது. ஏனென்றால் அவர்களுக்கு ஞாபக மறதி அதிகம்.

4) மாணவர்கள் அறிந்து கொள்ள வேண்டிய மொழிபெயர்ப்புகள், கணிதம், வரைபடம், மாடல் வினாத்தாள் ஆகியவற்றினை காப்பி செய்து கொள்ளலாம். அது மட்டுமல்லாமல் சிறுவர்கள் வீடியோ கேம்ஸ் விளையாடுவது மூலம் அவர்களுடைய மூளை செயல் சிறப்பாக இயங்க வழி வகுக்கும்.

5) செல் போனில் படமெடுப்பது சில சமயங்களில் குற்ற சம்பவங்களை தெரிந்து கொள்ளலாம். சமீபத்தில் தமிழ் நாட்டில் நடந்த ஒரு உண்மை சம்பவம். பெங்களூரில் வேலை பார்க்கும் ஒரு தட்சர் தனது சொந்த ஊருக்கு வந்துள்ளார். அவருடைய மூன்று நண்பர்களுக்கு மது விருந்து ஒரு தோட்டத்தில் கொடுத்துள்ளார். உட்சாக மிகுதியில் அவருடைய நண்பர்கள் அருகில் உள்ள சுவர் இல்லா கிணற்றில் குளிக்கலாம் எனக் கூறியுள்ளனர். ஆனால் தட்சர் தனக்கு நீந்த தெரியாது என்று மறுத்துள்ளார். ஆனால் மது அருந்திய அவரின் நண்பர்கள் அவரை விடவில்லை. இருவர் அவரை தூக்கியும், மற்றொருவர் அவரின் செல் போனில் வீடியோ எடுத்தும் தூக்கி கிணற்றில் விளையாட்டாக போட்டுள்ளார்கள். மற்ற மூவரும் குளித்து, கும்மாளம் போட்டு கரையேறி வீட்டுக்கு சென்றபோது தான் தங்களது பெங்களூர் நண்பர் வர வில்லை  உடனே ஊர்காரர்களுடன் சேர்ந்து அவர்களும் கிணற்றுக்குள் தேடிய போது அவர் பிணம் கிடைத்தது. இந்த செயல் அத்தனையும் இறந்தவர் செல் போனில் பதிவாகியிருப்பதினை வைத்து அந்த மூவரையும் காவல் துறையினர் கைது செய்திருக்கின்றார்கள்.

6) கைபேசியின் குறைந்த அலைஅளவு, பிரகாசமான நீல நிற விளக்கு உங்கள் கண்ணை பகல் நேரத்தில் மயக்கும், இரவு நேரத்தில் அதனை உபயோகிப்பதால் தூக்கமின்மை ஏற்படும். அதற்காக தூங்குவதற்கு அரை மணித்துளிகள் முன்பு செல் உபயோகிப்பதினை நிறுத்தி விடவேண்டும்.இரவில் கைபேசி அழைப்புகளால் குடும்பத்தில் விரிசல் ஏற்படும்.

7) கைபேசிகள் தற்போது எல்லையில்லா இணைப்புகளுடன் வழங்கப் படுவதால் இந்தியர் ஒரு நாளைக்கு 200 மணித்துளிகள் செலவழிப்பதாக சொல்லப் படுகிறது. அஹமதாபாத் நகர் எஸ்.பி.பி. பிசியோதெரபி நிறுவனம் நடத்திய ஆய்வின் படி அதிக நேரம் செல் போனில் தகவல் நடவடிக்கையில் ஈடுபட்டால் கழுத்து வழி ஏற்படும். அத்துடன் பெரு விரல் மற்றும் ஆள் காட்டி விரல் அசைவு பாதிக்கும்.

8) அமரிக்கா அரிசோனா மாநில பல்கலைக் கழக மைக்ரோ பயாலஜி டிபார்ட்மெண்ட் அடத்திய ஆய்வில் நம் கழிவறையில் உள்ள கிரிமிகளைவிட செல்போனில் 10 மடங்கு அதிகமான கிருமிகள் இருக்கின்றன என்று கூறுகின்றது. ஆகவே செல் போனை பாத் ரூம், கழிவறை ஆகியவற்றில் உபயோகிப்பதினை விட்டு விடவும். அத்துடன் பாக்டீரியா எதிர்ப்பு காகிதங்களை, துணிகளை வைத்து துடைத்து உபயோகிக்க வேண்டும்.

9) செல் போன் உபயோகித்து பேசும் போது போனை காதருகில் வைத்து பேசும் போது கதிர் அலைகள் தாக்கி மூளையை பாதிக்கும். ஆகவே போனை தள்ளி வைத்தோ அல்லது ஸ்பீக்கரிலோ பேசவும்.

10) சென்னை மெடிக்கல் மற்றும் திருச்சி மெடிக்கல் காலேஜ் ஆராய்ச்சி நிறுவனம் மூலம் நடத்திய ஆய்வில் கண் எடுக்காமல் தொடர்ந்து செல் போன் திரையினை நோக்கினால் கானுக்கு தொந்தரவு ஏற்படும். அதற்காக செல் போனை விட்டு சிறிது கண்ணை வேறு பக்கம் திருப்பியோ அல்லது கண்ணை சில நேரம் சிமிட்டியோ சமிக்கை செய்தால் அல்லது திரை நீலத்தினை அதிக படுத்தினால் கண்ணை போது காக்கலாம்.

11) வைத்த கண் எடுக்காமல் செல் போனை பார்த்தோ அல்லது வாகனத்தினை ஓட்டும்போது பேசிக் கொண்டோ செல்லும்போது சாலைகளின் பள்ளங்கள் மூலம் ஆபத்து, மற்றும் சாலை விபத்து ஏற்படும். சில சமயங்களில் உங்களுக்கு அதிர்ஷ்டம் தரும் பணமோ அல்லது பொருளோ கீழே கிடந்தாலும் நீங்கள் செல்போனில் மூழ்கி இருக்கும் போது உங்களுக்கு கிடைக்காமல் போய்விடும். உங்கள் குழந்தைகளை நீங்கள் தொடர்ந்து கூட்டத்தில், மார்க்கெட்டில் கைபேசியில் பேசிக்கொண்டே இருப்பது மூலம் அவர்கள் தொலைந்து போவதற்கு வழி வகுக்கும்.ஆகவே செல் போன் உபயோகிக்கும் அனைவரும் நல்லது, கெட்டது எது என்று அறிந்து நடப்பதுடன், தங்கள் குடும்பத்தினருக்கும் அறிவுரை வழங்க வேண்டும்.

News

Read Previous

மாநிலங்கள் அவையில், கன்னி உரையில் வைகோ

Read Next

தொடு நல் வாடை

Leave a Reply

Your email address will not be published.