குறிக்கோள் இல்லா வாழ்க்கை

Vinkmag ad

இன்றைய சிந்தனை.( 23.08.2019)
…………………………………….

”குறிக்கோள் இல்லா வாழ்க்கை”..
…………………………………….

“வாழ்க்கைன்னா லட்சியம், குறிக்கோள் வேணும்!” இப்படிச் சொல்வதில் உண்மை இருந்தாலும், நமது குறிக்கோள் எப்படி இருக்க வேண்டும் என்பது பலருக்கும் பிடிபடாத ஒன்றாகவே உள்ளது.

குறிக்கோள் வைப்பது என்றால் ஏதோ ஒன்றைப் பற்றி வெறுமனே கனவு காண்பதோ,ஏதோ ஒன்றுக்காக ஆசைப்படுவதோ அல்ல.

உண்மையான குறிக்கோள்,..திட்டமிடுவது, அதை அடைய கடினமாக வேலை செய்வது ஆகியவை உட்படுகின்றன.

மகாராஷ்டிரா மாநிலம் சோலாபுரை அடுத்த மஹாகாவூன் சேர்ந்த சேர்ந்த ரமேஷ் கோலப். அவர் கண்ட கனவுதான் அவரின் வெற்றிகான மைல் கல்லாக மாறியது.

அவரவரின் வாழ்க்கை சூழ்நிலைதான் போராட கற்றுத் தருகிறது. ஏழ்மை ஒருபக்கம். தந்தையின் குடிப் பழக்கம் மற்றொரு பக்கம், அதோடு பசி.

இவைதான் அந்த சிறுவனின் கண்களில் சிறு வயதிலேயே ஒரு கனவை உருவாக்கியது.

கையில் எதுவும் இல்லை. தலைக்கு மேல் ஒரு கூரை.. வெறும் பேனாவின் பலத்தால் கடின முயற்சி, நேர்மையான உழைப்பு.. இவை அவரின் தலை எழுத்தை பின்னாளில் மாற்றி எழுதியது.

முக்கியமான பத்தாம் வகுப்புத் தேர்வின் போது திடீரென நிகழ்ந்த தந்தையின் இறப்பு அவரை உலுக்கியது.

ஆனாலும், வாழ்க்கையில் இது போன்ற பல துன்பங்களை, இடையூறுகளை சந்தித்த ரமேஷ் தன்னுடைய உறுதியை விடவில்லை. தீவிர முயற்ச்சியாக தேர்வு எழுதி பத்தாம் வகுப்பில் 88.50 % மதிப்பெண் பெற்று அசத்தினார்.

எப்படியும் ஒரு தாசில்தார் ஆக வேண்டும் என்று முயற்சித்து அதற்கான தேர்வு எழுதி வெற்றி பெற்று தாசில்தார் ஆனார்.

தன் மேல்அதிகாரிகளை பார்த்த போது ஐ.ஏ.எஸ். பதவி மீது ஒரு காதல் பிறந்தது. எப்படியும் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆகிவிட வேண்டும் என்ற லட்சியத்தை மனதில் உருவாக்கி எனது லட்சிய பயணத்தை தொடங்கினார்.

முதல் தடவை தோல்வியை தழுவினார்,,2011 ஆம் ஆண்டு இரண்டாம் முயற்சியில் வெற்றி கிடைத்தது. அதற்கு அடுத்த ஆண்டே பயிற்சி முடித்து ஐ.ஏ. எஸ் அதிகாரியாகியானார். தற்போது, ரமேஷ் ஜார்கண்ட் மாநிலத்தில் எரிசக்தித் துறை இணை செயலாளராக உள்ளார்.

ஆம்.,நண்பர்களே..,

சின்னச் சின்னக் குறிக்கோள்களை வைத்து அவற்றை அடையும்போது கடினமான குறிக்கோள்களையும் அடைந்து விட முடியும் என்ற நம்பிக்கை உங்களுக்கு ஏற்படும்.

அந்தகுறிக்கோள்களை அடையும்போது உங்கள் தன்னம்பிக்கை அதிகமாகும்,

மகிழ்ச்சி பூத்துக் குலுங்கும்..❤

News

Read Previous

தனது மரணத்தின் அறிகுறியை பெற்றவளுக்கு உணர்த்திய 3 வயது சுவனப்பறவை ஃபர்ஸான்!

Read Next

காதல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *