குடிகாரர்கள் யார்?

Vinkmag ad

தமிழ்நாடே டாஸ்மாக் போதையில் மிதந்து வருவதாக தோன்றினாலும் அதில் பாதிக்கபடுவது ஏழைகளும், படிக்காதவர்களும் தானே ஒழிய படித்தவர்கள் அல்ல என கூறுகிறது ஒரு ஆய்வு

திருவள்ளூர் மாவட்டத்தில் நிகழ்த்தபட்ட இந்த ஆய்வில் கிராமத்து ஆண்கள் மட்டுமே பங்கேற்றார்கள். இதில் 36% பேர் குடிகாரர்கள் என்பது தெரியவந்தது. குடிகாரர்களில் 38% பேர் மதுவால் உடல்நலம் கடுமையாக பாதிக்கபட்டதாக கூறீனார்கள். ஆனால் வெறும் 4.5% மட்டுமே வியாதிக்கு சிகிச்சை பெறுகிறார்கள். மீதம் பேர் குடும்ப பிரச்சனை…யால் வியாதிக்கு மருத்துவம் எதுவும் பார்க்கவில்லையாம்

படிப்பும், சமூக அந்தஸ்தும் உயர, உயர குடிபோதை குறைகிறது. மும்பையில் நிகழ்ந்த ஆய்வில் படிக்காதவர்களில் 25.6% பேர் குடிகாரர்களாக இருப்பதும், பள்ளி இறுதியை முடிப்பவர்களில் இது 27% ஆக இருப்பதும், கல்லூரி டிகிரி இருப்பவர்கலிடம் 18% ஆக மட்டுமே இருப்பதும் தெரியவந்தது.

இந்த ஆய்வில் ஏழைகளில் 46% குடிகாரர்கள்
நடுத்தர வர்க்கத்தில் 31% பேர் குடிகாரர்கள்
படிக்காதவர்களில் 39% குடிகாரர்கள்
படித்தவர்களில் 28% பேர் குடிகாரர்கள்

வயது ரீதியாக ஆராய்ந்ததில்

30 வயதுக்கு கீழே இருப்பவர்களில் சரிபாதி, 51.43% குடிக்கிறார்கள்
30 வயதுக்கு மேல் இருப்பவர்களில் 30% மட்டுமே குடிக்கிறார்கள்

மதரீதியாக பிரித்து ஆராய்ந்ததில்

கிறிஸ்துவர்களில் 56% பேர் மது அருந்துகிறார்கள்
இந்துக்களில் 25% குடிகாரர்கள்
முஸ்லிம்கள் தான் இருப்பதிலேயே குறைவு 8%

ஆக இளவயது, ஏழைகள், குறைந்த வருமானமுள்ள, குறைந்த படிப்பறிவுள்ளவர்களே குடியால் பெருமளவில் பாதிக்கபடுகிறார்கள். படித்தவர்கள், உயர் வருமானமுள்ளவர்கள் ஓரளவு தப்பிவிடுகிறார்கள்..ஆக தமிழ்நாட்டில் குடி என்பது ஏழ்மை மற்றும் கல்லாமையின் ஒரு விளைவு போல் தோன்றுகிறது

www.ncbi.nlm.nih.gov

News

Read Previous

ஆன்மீக வியாதி

Read Next

ஜெயலலிதா விடுதலையாக வேண்டி விஷேச யாகம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *