ஆன்மீக வியாதி

Vinkmag ad

ஆன்மீக வியாதி

முட்டாள்கள் பிறப்பதில்லை : உருவாக்கப்படுகிறார்கள். அங்கீகரிக்கப்பட்ட அனைத்திற்கும் எதிரானவன். தேடுதலை நிறுத்துங்கள் தேடுவது கிடைக்கும். இப்படி அதிரடியாய் இந்த உலகத்தை திரும்பிப்பார்க்கச்செய்தவர். பகவான் என்று தன்னை அறிவித்து, ஆச்சாரியர் என்று தன் சீடர்களால் அடையாளப்படுத்தப்பட்டவர். தத்துவ இயலில் பதக்கம் பெற்ற மாணவர் – உலகில் உள்ள அனைத்து தத்துவங்களையும் மறுதளிக்கிறேன் என்றவர். விமர்சனம் செய்யாத மனிதர் இல்லை. விமர்சிக்கப்படாத தலைப்புகள் இல்லை. தர்க்கத்தில் துவங்கி, குதர்க்கத்தில் தொடர்ந்து, குழப்பத்தில் முடித்து மனமற்ற நிலைக்கு கொண்டு செல்கிறேன் என்றவர்.

 

பிறக்கவும் இல்லை இறக்கவும் இல்லை ; இந்த பூமி கிரகத்திற்கு வந்து சென்ற நாட்களை பதிவு செய்கிறேன் என்றவரிடம், அவரைப்பற்றிய எந்தத்  திறனாய்வும் செய்யாமல், சில கேள்விகளை மட்டுமே கேட்டு வைப்பது தான் இந்தக்  கட்டுரையின் நோக்கம்.

 

இந்திய துணைக்கண்டம் என்பது கடந்த பல்லாயிரம் வருடங்களாக பல சமூக கருத்தியலை விளைவித்த, தவிர்க்க முடியாத விளை நிலமாகவே இருந்து வந்துள்ளது. அந்த நெடிய வரலாற்றில் பல புரட்சிகள் நடந்துள்ளன. பல புரட்சிகள் ஒடுக்கப்பட்டுள்ளன. இதுவும் இந்த விளை நிலத்தில், களை எடுக்கப் படாமல் விடுபட்ட பார்த்தீனியம் செடிகளின் வேர் துளைத்த விழுதுகளின் விளைவே. ஆனாலும் பல மோசடி மனிதர்களும், ஒப்புமை இல்லாத மனித நேயர்களும் வாழ்ந்து சென்ற பண்பட்ட, புன்பட்ட நிலமே. இந்தப் பதிவுகளில் யாருக்குமே கிட்டாத, யாருமே தொடாத ஒரு புதிய பாதையில் நீங்கள் ஒருவர் மட்டுமே பயணப்பட்டவர்.நிறுவணமயமாக்கப்பட்ட மடாதிபதிகள், ஆதீனகர்த்தர்கள் தவிர புதிதாய் கால் பதிக்கும் எவருமே பல நூல் படித்த பெரும் பண்டிதராய் இருக்க வேண்டிய அவசிய சூழ் நிலை இந்த மண்ணிற்கு மட்டுமே மிக அவசியமான ஒன்று. அந்த கட்டாய விதிகளை மேலும் கடுமையாக்கியவர் நீங்கள் தான், என்றால் அது மிகை அல்ல என்றே நான் கருதுகிறேன்.

 

உங்கள் ஒவ்வொரு சொற்பொழிவும், கேட்பவர் வசியப்படுவது மிக இயல்பான ஒன்று. ஆம் உங்கள் இயல்பான சொல் வளம், அதன் பொருள் வளம், அல்லது தான் சொல்வதை நியாயப்படுத்தும் வார்த்தை வித்தகம், என்பது இந்த இரண்டு நூற்றாண்டுகளில் உங்கள் ஒருவருக்கு மட்டுமே அந்த எல்லையில்லாத பரம் பொருள் அருளிச்செய்தது என்பதும் மிகை அல்ல.

எல்லாம் சரி. உங்கள் பரிபூரணத்துவம் மிளிரும் உங்கள் சொற்பொழிவுகளின் வாயிலாக சிலர் மறந்த புதிர்கள் மட்டுமே இங்கு விவாதத்திற்கு உங்களிடம் சமர்ப்பிக்கப்படுகிறது. இதில் உள்ள சில குறைகளும் நிறைகளும் எனது சிற்றறிவின் எல்லைக்குட்பட்ட அறிவு நிலையே..!!!

 

 

ஐயா, மனித குலம் பிறப்பெடுத்த நாள் முதலாய், அவன் உண்டு உடுத்தி வாழ்வதற்கான முயற்சிகளை செய்து வாழ்கிறான். இந்த வாழ்க்கைப்பயணத்தில், என்று இந்த ஆன்மீகம் நுழைந்தது என்று தெரியவில்லை. ஆனால் அது கண்டுபிடித்த இந்த தியானம் என்பது மட்டும் மிக நல்ல விலை பொருளாய், புரியாமல் புரியும் அற்புதமாய் நிற்கும் கற்பகத் தளிர். இது தான் இன்றுவரை யாரும் வரையறை செய்யாத, குறுக்கு வினா எழுப்ப முடியாத வித்தை. இல்லை என்றால் யாரொருவர் நான் பரிபூரணத்துவம் அடைந்து விட்டேன் என்பதனை தொழில் நுட்பக்  கருவி கொண்டு ஆராயாமல், உள்ளது உள்ள படி ஏற்கும் நிலைதான் இன்றளவும் உண்மையன்றோ !!!

 

 

 

இந்த சரட்டு வித்தையின் நிரலில் இருந்து சில கேள்விகள் இங்கு பதிவு செய்யப்படுகிறது.

 

1. உங்கள் ” மறைக்கப்பட்ட உண்மைகள் ” என்ற நூலில் ஒரு இடத்தில் வாரணாசி எனப்படும் காசி திருத்தலத்தில் விசுவநாதர் ஆலயத்தில்காந்தியடிகளின் சீடர் திரு. வினோபாவே ஒடுக்கப்பட்ட மக்களை ( அதாகப்பட்டது உங்கள் மொழியில் சூத்திரர் ) கோவில் நுழைவு போராட்டம் செய்து, நுழைந்ததின் மூலம் ” காசி விசுவநாதர் ” அசுத்தம் ஆகிவிட்டார்என்று அந்த கோவில் குருக்கள் ( பண்டா ) வேறு ஒரு கோவில் கட்டி இனி அந்த காசி விசுவநாதர் தான் புனிதமானவர் என்று அறிவித்தார் என்பதும் அதனை நீங்களும், ஆம் சூத்திரர்கள் கோவில் செல்ல கூடாது, அந்த பண்டா செய்தது சரிதான் என்று வல்யுறுத்தியது உங்கள் ஆன்மீகத்தில் என்ன பொருள் ????

golden 

 

 

2. உங்கள் சுயவரலாறு புத்தகத்தில் ” Golden glimpses of Child hood ” என்ற நூலில், உங்களைப்போன்றே ஆன்மீகத்தில் தியான முறைகளை கற்றுத்தந்து, உங்கள் சம காலத்தில் வாழ்ந்த ‘” யோகி ராம்சூரத் குமார் ” என்ற ஆச்சாரியரிடமும், அவர் தன் சீடர்களிடமும் எந்த வித பேச்சு வார்த்தைகளும் வைத்துக்கொள்ளாதீர்கள் என்று கட்டளை இட்டதாக நீங்களே வாக்குமூலம் கொடுத்தீர்கள் அதற்கு காரணம் ‘‘” யோகி ராம்சூரத் குமார் “ என்ற வேதாந்தி,பிறப்பால் ஒரு சூத்திரர் எனவும் அவர் வேதாந்தங்களையும், தியான முறைகளையும் கற்று கொடுக்க பிறப்பிலேயே அருகதை இல்லாதவர்என்றும் திட்ட வட்டமாக உங்கள் சீடர்களிடம் விஷம் கக்கி அவர் சீடர்களிடம் பழ்கினாலே சூத்திர தீட்டு வந்து விடும் என்ற அளவிற்கு, போதனை செய்த உங்கள் ஆன்மீகத்தின் பொருள் தான் என்ன ???

 

 osho books

 

3. அதே ” Golden glimpses of Child hood ” என்ற நூலில், தாங்கள் ஒரு முறை தமிழகம் பயணப்பட்டு அங்கு உள்ள ஒரு விடுதியில் தங்கி இருந்ததாகவும், அந்த ஓரிரு நாட்கள், அங்கு அந்த மக்கள் பேசிய மொழி மிக அருவெறுப்பாகவும் சண்டையிடுவதாகவும் இருந்தது என்றும் அதன் பிறகு என் வாழ் நாளில் எப்போதுமே அங்கு சென்றதில்லை என்றும், அந்த ஊரில் தான் தத்துவ ஞானி ஜிட்டு.கிருஷ்ணமூர்த்தி இருந்தார். அவருக்கு தமிழ் பேசுவது மிகவும் பிடிக்கும், சண்டையிடுவதும் மிகவும் பிடிக்கும் என்று தர சான்றிதழ் கொடுத்துள்ளீர்களே..??? இதன் பொருள் என்ன என்று நான் கேட்கவில்லை. உங்கள் வக்கிரபுத்தியில் மனித நிலைக்கு சிறிதும் இடமில்லை என்பதனை மிக அழகாக எடுத்துரைத்த மாபெரும் பகவான் என்று தான் உங்களை நினைக்கின்றேன். ஆகவே இந்த மூன்றாவது கேள்வி உங்களுக்கு அல்ல இதனை உங்களுடன் இருந்து சேமித்து அச்சிட்டு வெளியிட்ட பக்த்தகே (டி) களின் வக்கிர நிலைக்கு யாரிடம் சென்று முறையிடுவது ?? அதனையும் தமிழில் மொழிபெயர்த்து புண்ணியம் தேடிய தமிழ் புவியரசுகளும், பரமாத்துமாக்களும் மனதை அடகு வைத்து புத்தி பேதலித்த நிலையில் தான் இருந்தனரா ???

 meditation

இன்னும் பல கேள்விகள் உண்டு. ஆனால் ஒரு வக்கரித்த கொடும்பாவியிடம் இதற்குமேல் கேட்க எனக்கே வெட்கமாக இருக்கிறது. ஆன்மீக லயத்தில் உள்ள நண்பர்கள் என் மீது கோபம் இருந்தால், எனது மின்னஞ்சலுக்கு தொடர்பு கொள்ளுங்கள். நன்றி.

 

அன்புடன்,
காசி விசுவநாதன்.
 ” வரலாற்றில் விழிப்பு ; எதிர் காலத்தின் மீட்பு “
akasi108@gmail.com
 

News

Read Previous

தேங்காய்ப் பால் ரசம்

Read Next

குடிகாரர்கள் யார்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *