கண்ணதாசன் நகரத்தார் சமுகம் பற்றி

Vinkmag ad

கண்ணதாசன்

கண்ணதாசன் நகரத்தார் சமுகம் பற்றி 40 ஆண்டுகளுக்கு முன் பாடிய அருமையான கவிதை .

ஆன்ற தமிழர் அருங்குணத்திலே மிதந்து
தோன்று திசை எல்லாம் தொழில் புரிந்த கால முதல் ஈன்ற மனைஅரசு இல்லத்தாள் பெற்றபிள்ளை யாவும்மறந்து அயலகத்தே தமிழ் வளர்த்தோம்

வண்ண கலைவளர்த்தோம்
வரலாறே நாம் சமைத்தோம்
எண்ணத் தொலையாத எத்தனையோ கோயில்களை (க்)கண்ணில் இருத்தி கலையோடு காத்து வந்தோம்

காசி நகரத்துக் கடவுளரை பேச வைத்தால்
காவிரி பூம் பட்டினத்தார்
கலை உணர்ச்சி தோன்ற வரும்

மாசற்ற பொன்னும் மணிவயிரம் ரத்தினமும்
தூசென்று எண்ணி தூக்கி கொடுத்துவந்தோம்

பண்டை தமிழ் மரபைப் பண்போடு காத்து வந்தோம் அண்டை நிலங்களில் நம் ஆண்டவனை ஊன்றி வைத்தோம்

காசி விசாலாட்சி கவி மதுரை மீனாட்சி
கட்டியுள்ள ஆடைகளும் கழுத்தில் உள்ள பொன் நகையும்
சுற்றியுள்ள மண்டபமும் தூக்கிவரும் வாகனமும்
முற்றும் அழியாத மொட்டை கோபுரத்து அழகும் அண்ணாமலையில் அமர்ந்து இருக்கும் பேரழகும்
ஆக்கி கொடுத்தவர்கள் அமர்ந்து இருந்து காத்தவர்கள் நாட்டுகோட்டை வளர்த்த நகரத்தார் அல்லேமோ

பக்திக்குதானா பணத்தை செலவளித்தோம்
பகுத்தறிவு கோயில்களாம் பள்ளிகளும் நாம் சமைத்தோம்
பல்கலையும் ஆற்றிவரும் அண்ணாமலை கழகம் செல்வம் வளர்த்துவரும் செட்டிமார் வண்ணம் அன்றோ …………………………

அன்று பிற கலைகள் அறியாது இருந்தவர்கள்
இன்று புவி முழுதும் எத்துணையோ தொழில் புரிவார்

பழந்தமிழின் இலக்கியமும் பண்புமிகு நூலினமும் இழந்து விடாது இருக்க எத்துணையோ நூல்நிலையம் நாமே நடத்துகிறோம் நாட்டறிவை ஏற்றுகின்றோம்

……………………………..

பர்மா நிலத்தினிலே பச்சரிசி சிரித்து இருக்க அத்தனையும் பொன்னாக ஆக்கி படைத்தவர்கள் நம்மவரே என்றால் நாட்டோர் மறுப்பதில்லை

…………………………..

ஒன்று சமுதாயம் என்று வரும் நாள் வரைக்கும்
தத்தமது சாதியினைச் சாதியினர் போற்றுமட்டும் சபையிலே முழங்கிடுவார் சாதிக்கே வாழுமட்டும் நாமும் நமது குலம் நலம் காண போரிடுவோம்

கண்ணதாசன் —1963ல்

கண்ணதாசன் நகரத்தார் குடி பிறந்த ஒரு தமிழ் மகன் .வரலாற்றை சொல்லிய பாங்கும் தமிழ் சுவையும் தேடி பிடித்து என்னை இந்த கவிதையை பதிய வைக்கிறது

News

Read Previous

காற்றினிலே வரும் கீதம்

Read Next

வி.கே. டி பாலன்

Leave a Reply

Your email address will not be published.