ஓமன் மறுமலர்ச்சி தின வரலாறு…

Vinkmag ad
ஓமன் மறுமலர்ச்சி தின வரலாறு…
தற்போதைய ஓமன் மன்னர் மேதகு  சுல்தான் காபூஸ் சேட் அல் சேட் அவர்கள் ஓமன் நாட்டில் முதன் முதலாக 1970 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 23 ஆம் தேதி ஆட்சி பொறுப்பை 
 
ஏற்றுக்கொண்டார். இது ஒரு சாதரண நிகழ்வாக நடந்துவிடவில்லை. இதற்கு பின்னால் சுவாரசியமான வரலாறும் உள்ளது. ஓமன் மன்னர் மேதகு  சுல்தான் காபூஸ் சேட் அல் சேட் 1940 ஆம் 
 
ஆண்டு நவம்பர் மாதம் 18 ஆம் தேதி மன்னர் சுல்தான் சயித் பின் தைமூருக்கும் ராணி ஷேக்கா மசூன் அல் மஸானிக்கும் சலாலா பகுதியில் பிறந்தவர். தனது பள்ளி படிப்பை ஓமன் நாட்டின் 
 
சலாலாவிலும் இந்தியாவில் புனே விலும் பயின்றவர். இவர் இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மாவின் மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது. பிறகு தன்ன்னுடைய 20 வயதில் 
 
ராணுவ பயிற்சியை முடித்து பிரிட்டிஷ் ராணுவத்தில் பணியாற்றி வந்தார். அதன்பிறகு ராணுவ பணியை நிறைவு செய்துகொண்டு இங்கிலாந்தின் அரசியல் பாடத்தை படித்து பட்டம் பெற்றார். 
 
அதன்பின் 1966 ஆம் ஆண்டு நாடு திரும்பிய அவர் தன் தந்தையின் அரச அதிகாரங்களில் தலையிட்டார். இதனை விரும்பாத மன்னர் தைமூர் தன் மகனை சலாலா பகுதியில் அரண்மனை 
 
சிறையில் அடைத்தார்.
 
தந்தையின் ஆட்சி கவிழ்ப்பு…
இவருக்கு ஆட்சி அதிகாரத்திலோ அரசு விவகாரத்திலோ எந்த பங்களிப்பும் தரப்படாமல் தனிமைப்படுத்தப்பட்டார். அதன் பிறகு மன்னர் தைமூரின் ஆலோசகர்களின் மகன்களுடன் ரகசிய 
 
பேச்சுவார்த்தைகளை நடத்தினார். இதன்மூலம் நாட்டில் உள்ள சட்ட திட்டங்கள் மற்றும் மக்கள் உள்ள சூழ்நிலைகளை அறிந்து கொண்டார். இதன்கூடவே இஸ்லாமை முழுவதுமாக கற்றுத் 
 
தேர்ந்தார். அதன்பிறகு தனது ஆதரவாளர்கள் மூலம் தந்தையின் அரச விவகாரங்களில் மறுபடி தலையிட்டு அதில் உள்ள குளறுபடிகளை அகற்ற தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். ஆனால் 
 
அவரின் தந்தை சிறிது கூட இதற்கு அனுமதிக்கவில்லை. இதனால் தன் ஆதரவாளர்களுடன் தந்தையின் ஆட்சியை 1970 ஆம் ஆண்டு கலைத்தார். பிறகு அதே ஆண்டு ஜூலை மாதம் 23 ஆம் 
 
தேதி ஓமன் மன்னராக மேதகு  சுல்தான் காபூஸ் சேட் அல் சேட் முடிசூட்டப்பட்டார். தனது ஆட்சிப்பகுதியை மஸ்கட் மற்றும் ஓமன் என அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். ஓமன் மன்னர் தான் 
 
ஆட்சி பொறுப்பேற்ற நாள் முதல் நாட்டின் எண்ணெய் வளத்தை பெருக்கினார். மேலும் அந்த நாட்டில் நிலவி வந்த கம்யூனிச புரட்சிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். தற்போது 75 வயதாகும் 
 
இவர் நாட்டின் வளர்ச்சி மற்றும் மக்கள் நலனில் முழு கவனம் செலுத்தி இன்று வரை நல்லாட்சி புரிந்து வருகிறார். சொந்த நாட்டில் சொந்த தந்தையால் சிறைவைக்கப்பட்டு பிறகு நாட்டின் 
 
நலனுக்காக தான் பொறுப்பேற்ற இந்த ஜூலை மாதத்தில் ஒருநாள் மறுமலர்ச்சி தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. 
 
.

News

Read Previous

மஸ்னவி ஷரீப் ஒரு சிறு அறிமுகம்

Read Next

வாழ்த்துவம் யாமே வாழிய வையகம்!!

Leave a Reply

Your email address will not be published.