என்ன உலகம்? என்ன மனிதர்கள்?

Vinkmag ad
என்ன உலகம்? என்ன மனிதர்கள்?
அழிந்து பட்டு போகும் மனித வாழ்க்கையின் அர்த்தம் புரியாமலேயே பெரும்பாலான மனிதர்களின் அன்றாட வாழ்க்கை நகர்ந்து போகிறது.
நல்லாதானே இருந்தார்?இப்படி பொசுக்குனு போய்ட்டாரேனு ஒருவரின் மரண செய்தி கேள்வி பட்டு வார்த்தைகளை உதிர்க்கும் பிற மனிதர்கள், தங்களின் மரணத்தை நினைத்து பார்ப்பதில்லை.
இஸ்லாம் வலியுறுத்தும் ஹலால் – ஹராம் அதாவது நேர்மையான – நேர்மையற்ற உழைப்பும் அதன் வருமானமும் தான் ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையின் அளவீடாக உள்ளது.
தானாக உழைக்காமல் பிறரை ஏமாற்றி வாழ நினைப்பவனை மனித தோற்றம் கொண்ட மிருகம் என்றே கருதலாம்.
மிருகங்களுக்குள் கூட சில நேரத்தில் இன புரிதல் இருக்கலாம்?ஆனால் இந்த கேடு கெட்ட மனிதருக்குள் மட்டும் இன புரிதல் இல்லாமல் போனது ஏன் என்பதே எனக்கான கேள்வி?
தன்னை போல் தானே மற்றவரும் என்ற சிந்தனை இல்லாததால் தான், ஒவ்வொரு நாளும் கொலை,கொள்ளை,கற்பழிப்பு,சொத்து அபகரிப்பு,ஏல சீட்டு மோசடி,கொடுக்கல் வாங்கல் மோசடி,நம்பிக்கை துரோகம்,நன்றி மறத்தல், என பக்கம் பக்கமாய் ஊடகங்களில் செய்தி வரிந்து கட்டி நிற்கிறது.
பல தலைமுறை மரணித்து மண்ணுக்குள் புதையுண்டும் கூட இந்த கேடுகெட்ட ஈனச்செயல்கள் மட்டும் நிற்கவில்லையே?
கோடி,கோடியாய் சொத்து சேர்ததவனும் மாண்டு தான் போகிறான்.கால் வயிற்று கஞ்சிக்காக தன் உயிரையே பணயம் வைத்து நேர்மையாய் உழைப்பவனும் மறைந்து தான் போகிறான்.
மரணத்துக்கு பின்னரும் ஒருவனை இந்த சமூகம் அயோக்கியன் என்று சொல்லுமேயானால்…அவனை மனித உருவில் வாழ்ந்து மறைந்த மிருகம் என்று சொல்லலாம்.
மரணத்துக்கு பின்னரும் ஒருவனை நல்லவன் என்று இந்த சமூகம் சொல்லுமேயானால்…மனிதனாக பிறந்து மனிதனாக வாழ்ந்து மனிதனாகவே மறைந்து போன மாமனிதன் என்று நாம் சொல்லலாம்.
தனக்கு எது நன்மை தரும் என்று ஒருவன் நினைக்கிறானோ?அதையே தனது சக மனிதருக்கும் அவன் நினைக்கட்டும் என்று முகம்மது நபி(ஸல்)அவர்கள் அழகிய முறையில் குறிப்பிட்டுள்ளார்கள்.
கடந்த கால கசப்பான அனுபவங்களை மறந்து விட்டு எஞ்சியிருக்கும் வாழ் நாளையாவது நல்லோர்களாய் வாழ முயற்சி செய்வோம்.இறைவன் அதற்கு அருள் புரியட்டும்.
-கீழை ஜஹாங்கீர் அரூஸி.

News

Read Previous

முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் நிர்வாகிகள்

Read Next

வாயடைக்கப்பட்ட வானொலி நிலையம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *