எண் ஏழின் சிறப்புக்கள்

Vinkmag ad

எண் ஏழின் சிறப்புக்கள்:
1. புதிய உலக அதிசயங்கள் மொத்தம் ஏழு, இது அறிவிக்கப்பட்ட தேதி 07/07/2007
2. எழு குன்றுகளின் நகரம் ரோம்
3. வாரத்திற்குமொத்தம் ஏழு நாட்கள்
4. மொத்தம் ஏழு பிறவி
5. ஏழு சொர்க்கம்(குரான்)
6. ஏழு கடல்கள்
‘கடுகைத் துளைத்தேழ் கடலைப் புகுத்தி குறுகத் தெரித்த குறள்’ – ஒளவையார்.
7. வானவில்லின் நிறங்கள் (VIBGYOR)
8. ஏழு வானங்கள். (Qur’an)
9. ஏழு முனிவர்கள் (Rishi)
10. ஏழு ஸ்வரங்கள் (ச,ரி,க,ம,ப,த,நி)
11. ஏழு கண்டங்கள் (Europe, Asia, Africa, North America, South America, Australia, and Antarctica)
12. ஆதி மனிதன் Adam மற்றும் Eve ஆகியோரின் பெயர்களில் உள்ள மொத்த எழுத்துக்களின் கூட்டுத்தொகையின்
எண்ணிக்கை ஏழு
13. ஒவ்வொரு திருகுறளிலும் உள்ள சீர்கள் ஏழு. அதுமட்டுமா, ஒன்றே முக்கால் அடிக் குறளைக் காற் காற் பகுதியாக வெட்டிப் பாருங்கள் அதுவும் ஏழுபகுதிகளாக வரும்.
14. கண்ணுக்கு புலப்படக் கூடிய கோள்களின் எண்ணிக்கை ஏழு (Sun, Moon, Mercury, Mars, Jupiter, Venus and Saturn)
15. திருக்குறளில் மொத்தம் 1330 குறட்கள், 133 அதிகாரங்கள் உள்ளன. அதனுடைய கூட்டுத்தொகையும் ஏழு.
16. மேலுலகம் ஏழு
17. கீழுலகம் ஏழு
நுண்ணறிவாய் உலகாய் உலகு ஏழுக்கும்
எண்ணறிவாய் நின்ற எந்தை பிரான் தன்னைப்
பண் அறிவாளனைப் பாவித்த மாந்தரை
விண் அறிவாளர் விரும்புகின்றாரே – திருமூலர் பாடல்
18. திருக்குறளில் “கோடி’ என்ற சொல் ஏழு இடங்களில் இடம்பெற்றுள்ளது
19. மொத்தம் ஏழு தாதுக்கள்
20. ஏழு செவ்விய போரியல் நூல்கள் – சீனா
21. ஏழானது மிகப்பெரிய ஓரிலக்கா பகா எண் (Prime Number) ஆகும்.
22. ஏழு புண்ணிய நதிகள்
23. இராமாயணத்திலுள்ள மொத்த காண்டங்களின் எண்ணிக்கை ஏழு
24. அகப்பொருள் திணைகள் ஏழு
25. புறப்பொருள் திணைகள் ஏழு
26. சூரிய பகவானின் ரதத்திலுள்ள குதிரைகளின் எண்ணிக்கை ஏழு
27. கடை ஏழு வள்ளல்கள்
28. சப்த நாடி (சமஸ்கிருதத்தில் சப்த என்றால் ஏழு)
29. “திருவள்ளுவர்” – எழுத்துக்களின் கூட்டுத்தொகையும் ஏழுதான்
30. ஏழு அதிர்ஷ்ட தெய்வங்கள் – ஜப்பான்
31. ஏழு மலையான் – திருப்பதி, ஆந்திரா
32. மனிதனுடைய தலையிலுள்ள ஓட்டைகளின் எண்ணிக்கை ஏழு
33. உடலை கட்டுப்படுதும் சக்கரங்கள் ஏழு.
34. பெண்களின் பல்வேறு பருவங்கள் ஏழு
(பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம் பெண்)

News

Read Previous

உலகத்தமிழ்

Read Next

மருந்தாகும் நாட்டுக் கோழி… நோய் தரும் பிராய்லர் கோழி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *