உலகின் மிகப்பெரிய தமிழ் கலைச்சொல் உருவாக்கும் இணையக் குழு

Vinkmag ad

 

படிவம் – http://evolutionoftamil.blogspot.in/p/blog-page_24.html

 

தமிழ் இணைய வரலாற்றில் முதல் முறையாக உலகத்   தமிழர்களை ஒன்றிணைத்து ஒரு கலைச்சொல் களஞ்சிய ஒருங்கிணைந்த அகராதியை உருவாக்க வேண்டும்  என்பது எனது வெகுநாளைய விருப்பம்.

 

பொதுவாக கலைசொற்களை ஒரு குழுவை வைத்து தீர்மானிப்பார்கள் , அந்த குழுவில் இடம்பெறும் அறிஞர்கள் தேர்வுமுறை பற்றி பலவேறான கருத்துக்கள் எப்போதும் உண்டு. இந்த முரண்பாடுதான் அனைவரும் ஏற்கும் சொற்களை தமிழில் ஏற்படுத்த முடியாமைக்கு ஒரு காரணமாகும்.

 

பல சங்கம் கண்டும், குழுக்கள் கண்டும் – அடுத்த தலைமுறையை தமிழ் தாண்டுமா என்று நாம் கேட்பது முட்டாள்தனம்.

 

இந்நிலை மாற்றப்பட வேண்டும்.

 

ஒரு ஒரு சொல்லாக இனி செதுக்கப்படும் , நீங்கள்தான் செதுக்கப் போகிரீர்கள் , உங்கள் கருத்துக்களை என்னிடம் அனுப்பி வையுங்கள்.

 

குழுக்கள் தடுமாறலாம் , நான் மாட்டேன் – நீங்கள் யாராக இறுப்பினும் உங்கள் கருத்தை மனதார ஏற்பேன்.

 

வாருங்கள் , உலகின் மிகப்பெரிய தமிழ் கலைச்சொல்  உருவாக்கும் இணைய குழுவை உருவாக்குவோம்.

 

உங்களுடைய கருத்து ஒரு காலப்பெட்டகமாக பாதுகாப்பாக எனது இணையதளத்தில் www.tamilarchives.org ஏற்றப்படும் , காலம் காலமாக அது அங்கு நின்று உங்கள் பணியை நினைவுகூரும்

 

இந்த அமைப்பில் ஒரு குறை உண்டு

 

உங்களுக்கு

ஆட்டோ செலவுக்கு பணம் (Conveyance)

சரவணபவன் போண்டா……..

சங்கீதா காப்பி …….

கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூர் பாக்கு…..

அகர்வால் ஸ்வீட்ஸ் கடையின் வறுத்த முந்திரிப்பருப்பு……

ஒருவரை ஒருவர் புகழும் புகழ் மாலைகள் …..

 

ஆகிய வகையறாக்களை என்னால் உங்களுக்கு இணையத்தில் கொடுக்க முடியாது ….

 

என்றாவது ஒருநாள் எனது இல்லத்துக்கு வாருங்கள் … எல்லாத்தையும் தருகிறேன் (பார்சல் கூட உண்டு)

 

டாக்டர்.மு.செம்மல் 

நிர்வாக இயக்குனர்

மணவை முஸ்தபா அறிவியல் தமிழ் அறக்கட்டளை

News

Read Previous

கறிவேப்பிலை

Read Next

துபாயில் ரஷ்ய பல்கலையில் கௌரவ டாக்டர் பட்டம் பெற்ற தமிழக மருத்துவருக்கு பாராட்டு நிகழ்ச்சி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *