உணவின் அருமை

Vinkmag ad

உணவின் அருமை தெரியாமலே உண்கிறோம்…. உடலின் அறிவை புரியாமலேல விரைவில் அழிகிறோம்.

உயிர் வாழ உடல் தேவை… உடல் வாழ உணவு தேவை… உணவை எப்படி ஆரோக்யமாக கையாள்வது ?

1. நல்ல எண்ணங்களுடன் சமைக்க வேண்டும்.

2. இன்டக்‌ஷன் ஸ்டவ் & ப்ரெஷர் குக்கர் உபயோகிக்க கூடாது.

3. பசி வந்தால் மட்டுமே சாப்பிட வேண்டும்.

4. அனைவரும் திருப்தியாக சாப்பிட்ட உணர்வுடன் தாய் உண்ணவேண்டும்.

5. சாப்பிடும் போது வேறு எவ்விதமான சிந்தனையும் செயலும் அறவே கூடாது.

6. சம்மணங்கால் போட்டு சாப்பிடனும்.

7. எப்பவும் வெறும் தரையில் உட்காரக்கூடாது.

8. வேறு எவ்வித உபகரணங்களின் உதவி இல்லாமல் வலது கையால் உணவை எடுத்து உண்ண வேண்டும்.

9. ஒவ்வொரு வாய் உணவிலும் நமது உமிழ் நீர் முழுமையாக கலந்து உண்ண வேண்டும்.

10. வாயை மூடி ஒவ்வொரு வாய் உணவையும் 24 முறை நன்றாக மென்று விழுங்க வேண்டும்.

11. உணவில் அறுசுவையும் இருப்பது நல்லது.

12. உணவை உண்பதற்கு முன் நெல்லிக்கனியுடன் பனங் கருப்பட்டி சிறிது உண்பது மிக நல்லது.

13. கொதிக்க வைத்து குடிக்கும் தண்ணீரிலும் ப்யூரிபைடு தண்ணீரிலும் இயற்கை சத்துக்கள் அழிக்கப் படுகின்றன.

14. அரை மணி நேரம் உணவுக்கு முன்பும்,பின்பும் உணவு உண்ணும் போதும் தண்ணீர் அறவே குடிக்கக்கூடாது.

15. காலை தவிர மற்ற நேரங்களில் தாகம் எடுத்தால் மட்டுமே தண்ணீர் குடிக்க வேண்டும்.

16. வேகமாக தண்ணீர் குடிக்க கூடாது. வாயில் நிறுத்தி தொண்டையை நனைத்து தண்ணீர் குடிக்க வேண்டும்.

17. சாப்பிடுவதற்கு 45 நிமிடங்களுக்கு முன்பு குளிப்பதும், சாப்பிட்டு 2 மணி நேரங்களுக்கு பின் குளிப்பதும் உடலுக்கு நன்மை தரும்.

18. வெள்ளை சர்க்கரை உடலுக்கு விஷம்.

எந்த உணவாக இருந்தாலும் அதில் மூன்று விஷயங்கள் மிக முக்கியமாக இருக்க வேண்டும்… அது
1. உயிர்சக்தி,
2. ஊட்டச்சத்து,
3. சுவை.
இவை ஒவ்வொன்றுக்கும் 100 மதிப்பெண்கள் என 300 மதிப்பெண்களை பெருவது…

மாமிசம்-100
சமைத்த உணவுகள்-150
முளைவிட்ட பயிறு வகைகள்-200
பழங்கள்-300.

தினமும் நீங்கள் மூன்று வேளை தரமான உணவை உண்கிறீர்கள் என்றால் உங்கள் வாழ்நாளில் ஒரு வாரம் கூடுகிறது.

உணவை உற்பத்தி செய்யும் விவசாய பெருமக்களே நம்மை வாழ வைக்கும் நிஜ கடவுள்கள். விவசாய கடவுள்கள் விவசாயத்திற்காகவா போராடுகிறார்கள்…. உண்மையில் நமக்காகவே போராடுகிறார்கள். இன்று இந்த உணவு தின நாளில் அவர்களின் வாழ்வாதார போராட்டங்களுக்கு நாம் ஒன்று சேர்ந்து துணை நிற்போம் என உறுதி ஏற்போம்.

நீங்கள் வீண் செய்யும் ஒரு அரிசியில் 20 எறும்புகள் வயிறாற உண்டு உயிர் வாழும் என்பதை நினைவில் வைத்து…

உணவை மதியுங்கள்…
உணவு உற்பத்தி செய்பவர்களை நலமுடன் வாழ வழி செய்யுங்கள்.
[10:07, 11/2/2016] +971 50 542 8827: ஒரு சின்ன கற்பனை.

ஒரு போட்டியில் உங்களுக்கு ஒரு பரிசு கிடைத்திருக்கிறது.
பரிசு என்னவென்றால் -ஒவ்வொரு நாள் காலையிலும்
உங்கள் வங்கிக் கணக்கில் 86,400. ரூபாய் உங்கள் சொந்த செலவுக்காக வரவு வைக்கப்படும்.

ஆனால் இந்தப் பரிசுக்கு சில கண்டிஷன்கள் உண்டு.

அவை –

1) அந்த நாளில் நீங்கள் செலவு செய்யாத
பணம் ” உங்கள்கணக்கி
லிருந்து எடுக்கப்பட்டுவிடும்.

2) உங்கள் பணத்தை நீங்கள் வேறு அக்கவுண்டிற்கு மாற்றமுடியாது.

3) அதை செலவு செய்யமட்டுமே உங்களுக்கு உரிமை உண்டு

4) ஒவ்வொரு நாளும் விடியும்போது உங்கள் வங்கிக்கணக்கில் அந்த நாளின் செலவிற்காக. 86400. ரூபாய்வரவு வைக்கப்படும்

5) எப்போது வேண்டுமானாலும் வங்கி இந்த ஆட்டத்தை முன்னறிவிப்பு இல்லாமல் நிறுத்திக்கொள்ளலாம்.

6) வங்கி –
“முடிந்தது கணக்கு” என்று சொன்னால் அவ்வளவு தான்.
வங்கிக் கணக்கு மூடப்படும்,மேற்கொண்டு பணம் வரவு வைக்கப்படமாட்டாது.

இப்படி இருக்கும் பட்சத்தில் நீங்கள் என்ன செய்வீர்கள்?

உங்களுக்கு பிடித்த எல்லாம் வாங்குவீர்கள் இல்லையா?

உங்களுக்கு மட்டுமல்லாமல் உங்கள்மனதுக்கு பிடித்தவர்களுக்கும் வாங்கித்தருவீர்கள்
இல்லையா?

உங்களுக்கு முன்பின் அறிமுகம் இல்லாதவர்களுக்காகவும் செலவு செய்வீர்கள். ஏனென்றால்
அவ்வளவு பணத்தையும் உங்களுக்காக
மட்டுமே செலவு செய்வது சாத்தியமில்லை என்பதால் -அப்படித்தானே?

முடிந்தவரை ஒவ்வொரு ரூபாயையும் எப்படியாவது செலவு செய்து உபயோகிப்பீர்கள்தானே?

உண்மையில் இது ஆட்டமில்லை-
நிதர்சனமான உண்மை😀😀

ஆம்நம்
ஒவ்வொருவருக்கும் இப்படியான ஒரு வங்கி க்கணக்கு இருக்கிறது. நாம் தான் அதை கவனிக்கவில்லை.

அந்த ஆச்சரிய வங்கிக்கணக்கின்பெயர் –
காலம்.

ஒவ்வொரு நாள் காலையும் நாம் எழுந்திருக்கும்போது வாழ்க்கையின்
அதியுன்னத பரிசாக
86400
வினாடிகள் நமக்கு வழங்கப்படுகிறது.

இரவு தூங்கப் போகும் போது நாம் மிச்சம் வைக்கும் நேரம்நமக்காக சேமித்து வைக்கப் படுவதில்லை.

அன்றைய பொழுது
நாம் வாழாத வினாடிகள்தொலைந்தது தொலைந்தது தான்.நேற்றைய பொழுது போனது போனது தான்.
ஒவ்வொரு நாள் காலையிலும்
புத்தம் புதிதாக நம்கணக்கில்86400நொடிகள்.

எச்சரிக்கையே இல்லாமல் எப்போது வேண்டுமானாலும்வங்கி உங்கள் கணக்கை
முடக்க முடியும்.
அப்படியிருக்கும் பட்சத்தில்நீங்கள் என்ன செய்வீர்கள்?

உண்மையில் 86400
வினாடிகள் என்பது அதற்கு சமமானஅல்லது அதற்கும் மேலான பணத்தை விடவும்மதிப்பு
வாய்ந்தது அல்லவா?

இதை ஞாபகம் வைத்துக்கொண்டால் வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியையும் நாம் கொண்டாடிக் கழிக்க மாட்டோமா? 🕛🕐🕑🕒🕓🕔🕕🕖🕗🕘🕙🕚

காலம் நாம் நினைப்பதை விட வேகமாக ஓடிவிடும்.🏃
சந்தோஷமாகஇருங்கள் –

சுற்றியுள்ளவர்களை ஆழமாக நேசியுங்கள் – 🌈

வாழ்க்கையைக் கொண்டாடுங்கள்.😀😀😀

News

Read Previous

தமிழ்நாடு 60

Read Next

மகிழ்ச்சி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *