இளையான்குடியில் ஒரு சப்- கலெக்டர் !

Vinkmag ad

இளையான்குடியில் ஒரு சப்- கலெக்டர் !

இலஞ்சம் தவிர்! நெஞ்சம் நிமிர்!
என வாழ்ந்து காட்டிய நேர்மையாளர்!

HONEST !… SINCERE !… NON CORRUPTION !…

மிசாஃபணன் H.முஹம்மது அபுதாஹிர்!

எம்.பி. ஹமீது – வருசை பாத்து ஆகியோரின் மகனாக 1916-ஆம் ஆண்டு இளையான்குடியில் பிறந்தார்.

இளம் வயதிலேயே தனது தந்தையை இழந்து, தன் ஒன்றுவிட்ட சச்சா T.R சிக்கந்தர் அவர்களின் அரவணைப்பில் வளர்ந்தார்.

தனது பள்ளிப் படிப்பை பரமக்குடி ராஜா சேதுபதி உயர் நிலைப்பள்ளியில் முடித்தார்.

மதுரை அமெரிக்கன் கல்லூரியில் படித்து B.A .பட்டம் பெற்றார். படித்துக் கொண்டே, வேலை செய்து சம்பாதித்து அதை படிப்புச் செலவுக்கு பயன்படுத்திக் கொண்டவர்.

Revenue Inspector (RI)- ஆக அரசு பணியில் அமர்ந்து, தனது கடும் உழைப்பால், இராமநாதபுரத்தில் தாசில்தாராக பதவி உயர்வு பெற்று பணியாற்றினார்.

தம்முடைய பணி காலத்தில் நீதி, நேர்மை, திறமையால் அப்பதவிக்கு தனியொரு மரியாதையை ஏற்படுத்தியவர்.

மீண்டும் பதவி உயர்வு பெற்று சப்-கலெக்டராக (RDO – Revenue Divisional Officer) தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய இரண்டு மண்டலங்களையும் இவர் ஒருவரே கவனித்துக் கொண்டார்.

ஒரு கையெழுத்து போட்டிருந்தால், ”நான் எவ்வளவோ உயரத்திற்கு போயிருப்பேனே” என்று சிலர் அங்கலாய்த்து கொள்ளும் அளவிற்கு கடமையில் கறாராக இருந்த சத்தியசீலர்.

1972-ஆம் ஆண்டு பணி நிறைவு பெற்றார்.

இளையான்குடி Dr.ZAKIR HUSAIN கல்லூரி உருவாக ,அல்லும் பகலும் பாடுபட்டவர்களில் இவரும் ஒருவராவார்.

அதன் வளர்ச்சியில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டவர்.

இளையான்குடி அலங்கார தோப்பின் அருகே இருந்த காவலர் குடியிருப்பு இடிக்கப்பட்ட பின் தமிழக அரசின் ஊரக விளையாட்டுத்துறை சார்பாக பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன, அவற்றை காண ஆங்கிலேய சுற்றுலா பயணிகளை அரசு சிறப்பு விருந்தினர்களாக வரவழைத்திருந்தது. ஜனாப். அபுதாஹிர் அவர்கள் அவ்விழாவிற்கு தலைமையேற்று, ஆங்கிலேயரின் சொற்பொழிவை தமிழில் சரளமாக மொழி பெயர்த்து கூறியது, நாமும் இது போல English-ல் பேச வேண்டும் என்ற உத்வேகத்தை அன்றைய இளைஞர்களின் மனங்களில் விதைத்தவர்.

இளையான்குடி மேல்நிலைப் பள்ளியின் தாளாலராக17/04/1972-ஆம் ஆண்டு முதல் பொறுப்பேற்று 19 வருடங்களாக, பணியாற்றி, பள்ளியின் வளர்ச்சிக்கு அரும்பாடுபட்டார்!

1979 ஆம் ஆண்டு முதல் 1991 – ஆம் ஆண்டு வரை இளையான்குடி மேலப்பள்ளிவாசல் மானேஜிங் டிரஸ்டியாக பொறுப்பேற்று, முகத்தாட்சண்யம் பாராது, வேண்டல்- வேண்டாமை நோக்காது எல்லோருக்கும் நடுநாயகமாக இருந்து சிறப்புர கடமையாற்றினார்.

பள்ளிவாசல் சொத்துக்கு பட்டா மாறுதலுக்காக இ.குடி தாசில்தார் அலுவலகம்100 ௹பாய் லஞ்சமாக கேட்டதை கொடுக்க மறுத்து விட்டார். பின்னர் வந்த நிர்வாகத்தினர் பட்டாவை மாற்றிக் கொண்டனர்.

ஒரு அதிகாரி, ஒரு நிர்வாகி எவ்வாறு செயலாற்ற வேண்டும் என்பதற்கு இலக்கணமாக, இலக்கியமாக வாழ்ந்து காட்டிய சத்தியசீலர் ! 08/03/1993- அன்று வபாஃதானார் !

“இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன்”

குலப்பெருமை குடிப் பெருமை இல்லாமல் கல்வியால் மட்டுமே உயர்ந்து காட்டிய கைகாட்டி மரம்!

வாழ்ந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் !
இவர்போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்!

மன்னனுக்கு தன் தேசத்தில் மட்டுமே மதிப்பு ! கற்றவருக்கோ சென்ற இடமெல்லாம் சிறப்பு !
கல்வி கரையில ….!

News

Read Previous

இளைஞர்களே நீங்களும் அறிந்துக் கொள்ளுங்கள் !

Read Next

வணிகச் சமூகம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *