இளைஞர்களே நீங்களும் அறிந்துக் கொள்ளுங்கள் !

Vinkmag ad

இளைஞர்களே நீங்களும் அறிந்துக் கொள்ளுங்கள் !!!!!!!!!!!!
நாகூர் செய்யது பள்ளிக்கு எதிர்புறத்தில் பக்கீர் முஹம்மது காக்கா இல்லத்திற்கு பக்கத்தில் தற்போது கிரில் கேட்டுடன் கார் பார்க்காக இருக்கும் மனைதான் அந்தக் காலத்தில் தமிழ் இலக்கிய உலகிற்கு காலத்தால் அழியாத காவிய பொக்கிஷங்களைத் தந்த குலாம் காதர் நாவலர் அவர்கள் வாழ்ந்த வீடு இருந்த இடமாகும்..நினைவகமாய் திகழ வேண்டிய அந்த இடம் காலங்கள் மாறியதுபோல் கைகள் மாறி நிழல் தரா இடமாக காட்சி அளிக்கிறது …
புலமையின் புலர்கதிராய் விளங்கிய நாவலர் அவர்களின் ஆக்கங்களைக் கண்டு இலக்கிய உலகமே வியப்பின் உச்சியில் வியாபித்திருந்தத் தருணம்,,1901ம் ஆண்டு மதுரையை ஆண்ட பாஸ்கர சேதுபதியும்,பாண்டிதுரை தேவரும் நாவலரின் அருமை பெருமைகளை செவியுற்றும்,நேரில் கண்டும் நாகூருக்கு தனது அரசப் பரிவாரங்களுடன் வருகைப்புரிந்து நாவலரின் இல்லம் சென்று மரியாதைச் செய்து ”’அருந்தமிழ் புலவரே உமக்கு என்ன வேண்டும் என வினவ”’
தமிழ் வளர்க்கும் சஙகம் அமைப்பீராக என்று நாவலர் கூற அவ்வாண்டே பாஸ்கர சேதுபதி மன்னராலும் பாண்டிதுரை தேவராலும் ::நான்காம் தமிழ்ச்சஙகம் மதுரையில் ஆரம்பிக்கப்பட்டது,,அதன் தலைமைப் புலவராக குலாம் காதிர் நாவலர் அவர்கள் விளங்கினார்கள்,,கருத்து வளமிக்க தனது சொற்கூர்மையால் நான்காம் தமிழ் சங்க நக்கீரர் என நறுந்தமிழ் புலவர்களால் புகழப்பட்டார்கள்..அவரிடம் கல்விப் பயின்ற மாணவர்கள் பலர்,,சுவாமி வேதாசலம் எனகிற மறைமலையடிகள் நமது நாவலரிடம் தமிழ் கற்ற மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது ,,
இஸ்லாமிய புலவர்களின் வரலாற்று செய்திகளையும் தமிழ் பாடநூலில் சேர்க்க அரசாங்கம் முன் வர வேண்டும் ,,
நாவலரின் மகனார் ஆரிபு நாவலர்,,அவர்தம் மகனார் ஹுசைன் நாவலர் இப்படி தமிழால் நாகூருக்கு பெருமை சேர்த்த நாவலர் குடும்பம் வாழ்ந்த அந்த இடத்தைப் பார்க்கும் போதெல்லாம்
நெஞ்சில் நீங்காத நினைவுகள் பொங்கி வருகிறது ,,,,

கவிஞர் நாகூர் காதர்ஒலி..
20.5.2014

News

Read Previous

தமிழக முஸ்லிம்களே,உணர்ச்சிகளுக்கு இரையாகாமல் நடுநிலை சமுதாயமாக சிந்தியுங்கள்!

Read Next

இளையான்குடியில் ஒரு சப்- கலெக்டர் !

Leave a Reply

Your email address will not be published.