இலக்கணம் : புணர்ச்சியின் வகைகள்

Vinkmag ad

புணர்ச்சிவிளக்கம்: (1)

புணர்ச்சியின் வகைகள்:

புணர்ச்சியானது, ‘இயல்புபுணர்ச்சி’ விகாரப்புணர்ச்சி’ என இருவகைப்படும்.

மரம் + விழுந்தது = மரம்விழுந்தது

இது இயல்புபுணர்ச்சி. இதில் நிலைமொழியின் ஈற்றெழுத்திலும் வருமொழியின் முதலெழுத்திலும் எந்தமாற்றமுமில்லை. அவற்றில் மாற்றமேற்படுமானால், அது விகாரப்புணர்ச்சியாகும்.

பலா + கொட்டை = பலாக்கொட்டை

நிலைமொழியிலோ வருமொழியிலோ மாற்றமில்லாமற்போனாலும், ஓர் எழுத்து ( ‘க்’ )இதில் புதிதாக தோன்றியிருக்கிறதன்றோ? இதுவும்விகாரப்புணர்ச்சிதான். இதற்கு ‘தோன்றல்விகாரம்’ எனப்பெயர்.

புல் + தரை = புற்றரை (ல் த் ஆகிய இரண்டுமே ற் எனத்திரிந்தன)

நிலைமொழியின் ஈற்றெழுத்தோடு வருமொழியின் முதலெழுத்திலுமாற்றமுண்டானது.

பால் + கடல் = பாற்கடல் (ல் என்பது ற் என திரிந்தது)

இதில், மாற்றமானது நிலைமொழியின் ஈற்றெழுத்தில்மட்டும்வந்தது

பொன் + நாள் = பொன்னாள் (நகரம் நகரமாகத்திரிந்தது)

மாற்றமானது வருமொழிமுதலில்மட்டும்வந்தது

இவை யாவும் ‘திரிதல்விகாரம்’ எனப்படுவன.

விகாரமானது, தோன்றல் திரிதல் கெடுதல் என மூவகைப்படும். இதுவரை தோன்றலும் திரிதலுமாகிய இரண்டுவிகாரங்களைப்பற்றிப்பார்த்தோம்.

 

கெடுதல்விகாரம்:

 

மகரமெய்யீற்றுப்புணர்ச்சி:

தமிழில், மகரவீற்றுச்சொற்கள் நிலைமொழியாயிருந்து வருமொழியோடு புணரும்போது, தன்னுடைய மகரத்தை சிலவிடங்களில் விட்டுவிடும். இவ்வாறு மகரம் மறைவது கெடுதல்விகாரமெனப்படும்.

குளம் + கரை = குளக்கரை ‘குளத்தினதுகரை’
பழம் + கடை = பழக்கடை ‘பழத்துக்குக்கடை’

(இவற்றில் பெயரோடு பெயரேபுணர்ந்தது – வேற்றுமைத்தொகைநிலைத்தொடர்)

இதை மகரவீறு கெட்டுப்புணர்தலென்கிறோம்.

மகரவீறானது கெடாமற்புணருமிடமும் உண்டு.
1.)
பழம் + யாருடையது = பழம்யாருடையது
(பெயருடன் வினாச்சுட்டுபுணர்ந்தது)
(இயல்பானது)
2.
குடம் + வந்தது= குடம்வந்தது
(இயல்பானது)
குடம் + உருண்டது = குடமுருண்டது
பழம் + இருந்தது = பழமிருந்தது
(மெய்யும் உயிரும் உயிமெய்யாயின)

(இவற்றில் பெயரோடு தெரிநிலைவினைமுற்றுபுணர்ந்தது – ‘எழுவாய்த்தொடர்’)
3.)
பழம் + உண்டு = பழமுண்டு
பழம் + இல்லை = பழமில்லை

(இவற்றில் பெயருடன் குறிப்புவினைமுற்றுபுணர்ந்தது – ‘எழுவாய்த்தொடர்’)
4.)
வரும் + காலம் = வருங்காலம்
வெல்லும் + திறன் = வெல்லுந்திறன்
(மகரவொற்றானது தன்னையடுத்துவரும் வல்லினத்திற்கேற்ப அவ்வதற்கினமான மெல்லினமாய்மாறியது. இதை ‘இனமாதல்’ என்போம்)

(இவற்றில் பெயரெச்சத்துடன் பெயர்புணர்ந்தது – ‘பெயரெச்சத்தொடர்’)
5.)
பழம் + தந்தான் = பழந்தந்தான்
பழம் + கேட்டான் = பழங்கேட்டான்
(இனமானது)
நிலம் + வென்றான் = நிலம்வென்றான்
(இயல்பானது)
(இவை, பெயருடன் வினைபுணர்ந்த வேற்றுமைத்தொகைநிலைத்தொடர் -‘இரண்டாம்வேற்றுமைத்தொகை’ – ‘நிலத்தைவென்றான்’ எனவும்’பழத்தைத்தந்தான்’ எனவும் ‘பழத்தைக்கேட்டான்’ எனவும்விரியும்)

ஆக, பெயரும்பெயரும்புணர்வதான வேற்றுமைப்புணர்ச்சியில் மகரவீறு கெட்டுப்புணர்கிறதென்றும் இரண்டாம்வேற்றுமையில்மட்டும் மகரவீறானது வல்லினத்துக்கு இனமாகிறதென்பதும், பிறவாகிய அல்வழியில் வலிமிகுதலென்பதுமட்டும் இல்லை, வல்லினங்களோடு இனமாவதும் உயிரோடுசேர்ந்து உயிர்மெய்யாவதும் வகரயகரங்களின்முன் இயல்பாவதும் உண்டு.

 

பொன் + நாள் = பொன்னாள் (நகரம் நகரமாகத்திரிந்தது)

பொன் + நாள் = பொன்னாள் (நகரம் கரமாகத்திரிந்தது)

 

News

Read Previous

துபை ஈடிஏ மெல்கோ செய்யதுக்கு ஆண் குழந்தை

Read Next

இந்திய சுதந்திர போராட்டத்தில் இஸ்லாமியர்கள் பங்கு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *