இறைவா,என் தேசத்தை காப்பாற்று!

Vinkmag ad

இறைவா,என் தேசத்தை காப்பாற்று!

                                        (கீழை ஜஹாங்கீர் அரூஸி)
சகிப்புத்தன்மையின் மிகப்பெரிய அடையாளமாக இருந்த எனது இந்திய தேசம் இன்று வன்முறைக்களமாக மாறிவிட்டது.
ஆளத்தெரியாதவர்களிடம் என் தேசத்தின் ஆட்சி அதிகாரம் சிக்குண்டதால்…வாழத்தெரியாமல் விழி பிதுங்கி நிற்கிறது என் இந்திய தேசம்.
மனிதனை மதிக்க கற்று தந்த மாண்புகள் மாற்றப்பட்டு மாடுகளை மதிக்கும் வீம்புகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
பல்வேறு இனம்,மொழி,கலாச்சாரம் என்ற வேற்றுமையில் ஒற்றுமையே என் தேசத்தின் மிகப்பெரிய சாதனை.
மாட்டு கோமியம்(சிறுநீர்),சமஸ்கிருதம்,பகவத் கீதை,இந்தி மொழி,இந்துத்துவா இவைகளே தற்போதைய என் தேசத்தின் அடையாளமாக போகும்? வேதனை.
இறைவனின் பெயரால் மாடுகளை அறுத்து ஏழைகளுக்கு உணவளித்த காலம் மாறி மாடுகளின் பெயரால் மனிதனை அறுத்து மாக்கள் தேசமாய் மாறி கொண்டிருக்கிறது என் இந்திய தேசம்.
சகிப்புத்தன்மையின் அடையாளமாக வாழ்ந்து வரும் இந்து-முஸ்லிம்-கிருஸ்துவ மக்களை மதவெறி கொண்டு பிரித்து சகிப்பு தன்மையற்ற சங்பரிவாரத்தின் கொலைவெறி கூடாரமாய் காட்சி தருகிறது என் இந்திய தேசம்.
ஆடு,மாடுகளை உண்பதை தவிர்த்து மனித மாமிசம் உண்ண துடிக்கும் பாசிஸ பயங்கரவாதிகளிடமிருந்து இறைவா என் தேசத்தை காப்பாற்று.

News

Read Previous

உலகின் முன்னோடியாக கியூபா

Read Next

பொறுப்புணர்வும், பொதுநலமும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *