பொறுப்புணர்வும், பொதுநலமும்

Vinkmag ad

பொறுப்புணர்வும், பொதுநலமும்

lptyasir@gmail.com

 

ஒரு சமூகம், சீரானபாதையில்  பயணிக்க செயல்ரீதியாக, ஒரு தலைமைகளை கட்டமைத்தல், அந்த சமூகத்திற்கு அவசியமாகும்.தலைமைத்துவ,மேளான்மைத்துறை சார்ந்த பண்புகள் கொண்டவரை, இனங்கண்டு அவரை சமூகம் தலைமைக்கு தேர்ந்தெடுப்பதில், கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

 

இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு பிறகு இஸ்லாத்தையும், இஸ்லாமிய கலாச்சாரம், நாகரீகம், சமூககட்டமைப்பு,   என்பவற்றை பேணிக்காக்க ஒரு வழுவான தலைமையின் இருப்பு குறித்த விழிப்பனர்வு,  இஸ்லாமிய சமூகத்திற்கு தேவையான ஒன்றாக உள்ளது .

 

ஒரு சமூகம், தனக்கு குறிப்பாகப்பட்ட தலைவர் ஒருவரிடமிருந்து நிராதரவாக விடப்படுவது, ஆரோக்கியமான விடயமல்ல . ஏனெனில் அது சமூகத்தின் மத்தியில் பிளவையும், குழப்பத்தையும், ஏற்படுத்தும் வகையில் அமைந்துவிடும் .

 

சரியான தலைமை என்பது  சமூகத்தின் அச்சானியாகும், அதனைவைத்துதான் அந்த சமூகம் வெற்றிநடை போடமுடியும். .தலைமையில்லா சமூகம்  அச்சானியில்லா வாகனம் போன்று. அதில் இலக்கை அடைவதற்கான சாத்தியக்கூறுகள் குறைவாகத்தான் தென்படுகின்றது.

 

” தலைவன் மக்களின் சேவகன்”அரபிய பழமொழி. அதன்படி

மக்களுக்காக தன்னை தியாகம் செய்யும் பண்பு , அனைத்து நிலையிலும் மக்களை சத்தியப்பாதையில் கொண்டு செல்வது , சுயநலமானமில்லா சேவைகள் போன்ற பண்புகள் தலைவனிடம் இருக்க வேண்டிய  முக்கிய பண்பாகும். இவைகள் இல்லாதவனிடம் தலைமைத்துவம் ஒப்படைக்கப்பட்டால் சமூகம் மறுமலர்ச்சியை காண்பதற்கு அதுவே தடையாக அமைந்துவிடும்.

 

தகுதியில்லாதவனுக்கு பொருப்புகளை ஒப்படைப்பது மறுமையின் அடையாளமாகும்…

 

நபி(ஸல்)அவர்கள் அமானிதங்கள் வீனடிக்கப்பட்டால் மறுமையை எதிர்பாருங்கள் என்று கூறினார்கள். அதற்கு எப்படி என்ற வினா அருகில் உள்ளவரகள் எழுப்ப  நபி(ஸல்) அவர்கள் “தகுதியில்லாதவனுக்கு”  பொருப்புகள் ஒப்படைக்கப்பட்டால் மறுமையை எதிர்பாருங்கள் என்றார்கள்..

 

தலைவர்கள்தான், சமூகத்தின் பொருப்புதாரிகள்,அவர்களுக்குள் தங்கள் பொருப்புகளைபற்றி நாளை மறுமையில் கேள்வி கேட்க்கப்படுவோம் என்ற எண்ணம் ஏற்படுதல் நல்ல தலைவனை மக்களுக்கு அடையாளப்படுத்தும். நபி(ஸல்) அவர்கள் ஆரம்பித்து வைத்த நடைமுறைகளை பூரணப்படுத்துவது ஒரு தலைவனின் நல்லபண்பின் வெளிப்பாடாகும்.

 

பதவிக்காகவும், தன் சுயநலத்திற்காகவும், உள்ளவர்களை புறம்தள்ளிவிட்டு “பொருப்புணர்வும், பொதுநலமும்” உள்ளவர்களுக்கு தலைமைத்துவத்தை நாம் ஒப்படைக்க வேண்டும். இந்த இரண்டு பண்புகள்  இருக்க, அவருக்கு இறையச்சம் இருப்பது இன்றியமையாத  ஒன்றாகும். இதை போன்ற, பண்புள்ளவர்களால் மட்டுமே சரியான தலைமைத்துவத்தை, கொடுக்க முடியும் என்பது திண்ணம் .

 

A.H.யாசிர் ஹசனி, லால்பேட்டை

அபுதாபி

0556258851

News

Read Previous

இறைவா,என் தேசத்தை காப்பாற்று!

Read Next

சமூக நல்லிணக்கத்துக்கு அடையாளம் நத்ஹர்வலி தர்கா !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *