இன்று 72 வது குடியரசு தினம்

Vinkmag ad

இன்று 72 வது குடியரசு தினம்.
======================

இந்தியக் குடியரசு தினம். கொண்டாடப்படுவதற்கான காரணம்

1929 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் லாகூரில் கூடிய அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டில், அனைத்துத் தலைவர்களாலும் “பூரண சுயராஜ்யம்” (முழுமையான சுதந்திரம் என்பது பொருள்) என்பதே நமது நாட்டின் உடனடியான லட்சியம், என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் பிறகு, காந்தியால் இந்தியத் தன்னாட்சிக்கான சாற்றல் உருவாக்கப்பட்டது. அதன் அடிப்படையில் 1930 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் நாள் முதற்கட்டமாக “சுதந்திர நாளாகக்” கொண்டாடப்பட வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டது.

இந்தியக் குடியரசு தினம்

1946 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 9 ஆம் நாள் காங்கிரஸ் கட்சியால் இந்திய அரசியல் நிர்ணய சபை கூட்டப்பட்டு, அதன் தற்காலிகத் தலைவராக சச்சிதானந்த சின்கா என்பவரை நியமித்தது. ஆகஸ்ட் 15 1947 இந்திய விடுதலைக்குப் பிறகு, இந்திய அரசியல் நிர்ணய சபைத் தலைவராக டாக்டர் ராஜேந்திரப் பிரசாத் நியமிக்கப்பட்டார். அவரே விடுதலை இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவராகவும் பொறுப்பேற்றார். அதன் பிறகு, இந்திய அரசியலமைப்பு வரைவுக்குழு அமைக்கப்பட்டு, டாக்டர் பி. ஆர். அம்பேத்கர் தலைமையில் இந்திய அரசியல் அமைப்பு சாசன் எழுதப்பட்டது. முகவுரை, விதிகள், அட்டவணைகள், பிற்சேர்க்கை, திருத்த மசோதாக்கள் போன்ற சிறப்பு அம்சங்களைக் கொண்டு நீண்ட ஆவணமாக எழுதப்பட்ட இந்த சாசனம், இந்திய அரசியல் நிர்ணய சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, மக்களாட்சியைக் குறிக்கோளாகக் கொண்டு நிறைவேற்றப்பட்டதால், 1930 ஜனவரி 26 ஆம் நாளை நினைவுகூரும் வகையில் 1950 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் ஜனவரி 26 ஆம் நாளை இந்திய தேசிய குடியரசு தினமாக நடைமுறைப்படுத்தப்பட்டது.

குடியரசு என்பதன் பொருள்

குடியரசு என்பதன் பொருள் “மக்களாட்சி” ஆகும். அதாவது, தேர்தல் மூலம் மக்கள் விரும்பிய ஆட்சியாளர்களைத் தேர்தேடுத்துகொள்ளும் முறைக்கு குடியாட்சி எனப்படுகிறது. “மக்களுக்காக, மக்களுடைய மக்கள் அரசு” என மிகச்சரியாக குடியரசு என்ற வார்த்தைக்கு இலக்கணம் வகுத்துத் தந்தவர், அமெரிக்க ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன். அத்தகைய மக்களுக்கான அரசை இந்தியாவில் ஏற்படுத்தினால்தான், இந்தியா முழு சுதந்திரம் பெற்ற நாடாக ஏற்றுக்கொள்ளப்படும் எனக் கருதி உருவாக்கப்பட்டது தான் இந்திய அரசியல் அமைப்புச் சட்டம்.

குடியரசு என்பதற்கு நேரடிப் பொருள் குடிமக்களின் அரசு.

அதாவது மக்களாட்சி.
மக்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப தேர்தல் மூலம் தங்களுடைய தலைவனைத் தேர்ந்தெடுத்து அவர்கள் ஆட்சி நடத்தும் நாடுதான் குடியரசுநாடு. மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள் எப்படி ஆட்சி செய்ய வேண்டும் என்பதை நிர்ணயிப்பது தான் அரசியல் அமைப்புச் சட்டம். மேதைகள் பலர் சேர்ந்து உருவாக்கிய நமது அரசியல் சட்டத்தை ஏற்றுக் கொண்ட நாள் 1950 ஜனவரி 26.

சுதந்திர தினத்தை விட, குடியரசு தினம்தான் முக்கியமானது. ஏனென்றால் மக்களின் விருப்பதற்கு ஏற்ப தங்கள் தலைவரைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். சரியான ஆட்சி இல்லையெனில் தேர்ந்தெடுத்தவரை நீக்கிவிட்டு வேறொரு நல்ல தலைவரை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

https://m.facebook.com/story.php?story_fbid=634764503318564&id=268274013300950.

இன்று நாம் கொண்டாடும் குடியரசு தினம் பற்றி ஓரிரு செய்திகள்…

1) குடியரசு தினம் என்றால் என்ன?
நாம் உருவாக்கிய இந்திய அரசியல் சட்டம் அமலுக்கு வந்த நாள்…(அதுவரை 1935 ல் பிரிட்டிஷாரால் உருவாக்கப்பட்ட இந்திய அரசியல் சட்டங்கள் அமலில் இருந்து வந்தது)..

2) இந்திய அரசியல் சட்டங்களை வடிவமைத்தவர்
டாகடர் அம்பேத்கார் அவர்களாவார்…

3) ஏன் ஜனவரி-26 ஆம் தேதி தேர்ந்தெடுக்கப்பட்டது?…
1930 ஆம் ஆண்டு இதே நாளில் இந்திய தேசிய காங்கிரஸ் இந்தியாவை சுதந்திர நாடாக பிரகடனம் செய்திருந்தது…

4) இந்திய தேசிய விடுமுறை
தினங்கள் 3..
அதில் ஒன்று “குடியரசு தினம்”

5) 1950 ல் நடைபெற்ற முதல் குடியரசு தின விழா அணிவகுப்பில் கலந்துகொள்ள நமது முதல் குடியரசு தலைவர் ராஜேந்திரா பிரசாத் குதிரை சாரட்டில் அமர்ந்து வந்தார்.

6) இன்று நாட்டின் தலைநகரில் குடியரசு தலைவரும்
மாநில தலை நகரங்களில் ஆளுநர்களும்..மாவட்ட தலைநகரங்களில் மாவட்ட ஆட்சியரும் கொடி ஏற்றுவார்கள்..

7) ஒவ்வொரு ஆண்டும் இவ்விழாவில் பங்கேற்க வேறு நாட்டின் தலைவர்களை சிறப்பு அழைப்பாளர்களாக (விருந்தாளிகளாக ) அழைத்து கவுரவ படுத்துவது வழக்கம்..1950 ல் முதலில் பங்கேற்றவர் இந்தோனிஷியா அதிபர் சுகர்னோ..
அமெரிக்க அதிபர் ஒபாமா கலந்து கொண்டுள்ளார்.

8) இதுவரை 37 நாடுகளில் தலைவர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றுள்ளனர்….பாகிஸ்தான் 2 முறை அழைக்கப்பட்டுள்ளது…
அமெரிக்காவும் கலந்துகொண்டுள்ளது.

9)பிரான்ஸ், பூட்டான் நாடுகள்
அதிக முறை
அழைப்பட்டுள்ள நாடுகள்..
இவை 4 முறை அழைக்கப்பட்டுள்ளன…

ஹாபிழ்
M,S, முஹம்மது ரபீக், மிஸ்பாஹி.

News

Read Previous

கல்லீரல்

Read Next

குடியரசு 2021

Leave a Reply

Your email address will not be published.