ஆற்றங்கரை

Vinkmag ad

ஆற்றங்கரை:

 

ஆற்றங்கரையில் தான் நாகரிகம் பிறந்தது, அந்த ஆற்றங்கரைகளில் தான் உழவுப் பண்பாடு படைக்கப்பட்டது, அங்கு வோளாண்மை வளர்ச்சி பெற்றது. அங்கு ஆற்று நீர் கிடைக்கும் வரைதான் வேளாண்மை தொடரும், அந்த வோளண்மை தொடரும் வரைதான் அங்கு வாழும் இனம் அந்த மண்ணில் நிலையான வாழ்வை தொடரும், ஒரு இனம் ஒர் இடத்தில் நிலைபெற்று வாழும் போதுதான் தனக்கான தற்சார்பு வாழ்வியலை நிறுவுகிறது, பொருளியலை பெருக்குகின்றது, அதன் சூழலில் தன் பண்பாட்டை நிறுவுகிறது, அப்போது தான் அதன் கலாச்சாரமும், மொழியும் செழிக்கின்றன, அதன் தொடர்ச்சியாக அவ் இனம் வரலாறு படைக்கின்றது.

 

ஆனால் அங்கு ஆற்று நீர் அவ்விடத்திலிருந்து பறிக்கப்படும் போது, அல்லது நீர் நிலை குறையும் போது அந்த வரலாற்று படைத்து செழித்து வாழ்ந்த இனம் அங்கு வாழ வழியில்லாமல், அவ்விடத்திலிருந்து புலம்பெயர்ந்து செல்கிறது அதன் வாழ்வுக்காக. நீரற்றுப் போவது நிலையான வாழ்க்கைக்கு மிக அச்சுறுத்தலை தருகின்றது.

 

நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்

வான்இன்று அமையாது ஒழுக்கு”

 

ஒர் இனம் தன் தாயகத்தில் நிலைத்து வாழும் போது தான் அதன் இன அடையாளத்தையும் பண்பாட்டையும் அதன் மொழியையும் காக்க முடியும். புலம்பெயர்ந்து சென்றால், பண்பாட்டை இழக்க நேரிடும், அதன் மொழி காணாமல் போகும், அந்த இன அடையாளம் அழிந்து போகும். அதன் வரலாறும் மறந்து போகும்.

 

இவைதான் இங்கு; தமிழகத்தில் காவேரிபடுகையில் ஆற்று நீர் உள்ளவரைதான் வேளாண் செழிக்கும், அதன் உழவு தொழில் தொடரும் வரைதான், அந்த இனம் தன் வாழ்விடத்தை விட்டு புலம்பெயராது, பண்பாடு சிதையாது, கலாச்சாரம் காக்கப்படும், அதன் சொந்த மண்னை விட்டு வெளியேறாத வரை அதன் அடையாளங்கள் காக்கப்படும், அதன் மொழியும், வரலாறும் அழியாது.

 

ஆனால் இங்கு காவிரி நீரை தர மறுப்பதும், காவேரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் 48 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட இரண்டு அணைகளைக் கட்ட இருக்கும் கர்நாடக அரசின் முயற்சிகளை மறைமுகமாக ஊக்குவிக்கிறது இந்திய அரசு, மேலும் காவேரிபடுகை முழுவதும் மீத்தேன், ஷேல் மீத்தேன், நிலக்கரி எடுப்பது என பல மக்கள் விரோத திட்டங்களை செயல்படுத்தி, தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமான காவிரிப்படுகையை சுவடு தெரியாமல் அழித்தொழிப்பதே, இந்தியாவை ஆளும் பார்பாணிய பணியா முதலாளித்துவ அரசின் நோக்கம்.

 

இங்கு தான் நாம் நம் அரசியலை முன்னெடுக்க வேண்டும், ஓரு நுட்பமான புரிதல் வேண்டும், தமிழக மக்களைப் பிரித்திட சாதிகளும், மதங்களும், இவற்றோடு இணைத்து அரசியல் கட்சிகள் இருக்கின்றன. இவற்றை ஒதுக்கி வைத்துவிட்டு, இந்த மண்ணின் மக்கள் என்ற உணர்வோடு போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும், இல்லையென்றால், பன்னாட்டு பெறும் முதலாளிக்கு ஏலம் விட்டு விடுவார்கள் காவரிபடுகை முழுவதும். நாளை சுதந்திரமாக காவிரிபடுகையில் உழுதுண்டு வாழ்வோமா? அல்லது புலம்பெயர்து செல்வோமா!! காலம் தான் பதில் சொல்லும்

 

நூர் முகம்மது

News

Read Previous

அம்புக்கூடு

Read Next

பிளாஸ்டிக் கழிவுகள் மறுசுழற்சி வெற்றிபெற…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *