ஆசிரியர் தினம்

Vinkmag ad

ஆசிரியர் தினம்

 

 

முஹம்மது மஃரூப்

துபை.

050 4255256

 

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்பாளனுமாகிய அல்லாஹ்வின் திரு பெயரால் ஆரம்பிக்கிறேன்.

அன்புள்ள சகோதர சகோதரிகளுக்கு

உங்களின் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக!

உலகில் எத்தனையோ தினங்கள்  கொண்டாட ப்படுகின்றன வருடத்தின் ஆரம்பமுதல் இறுதிவரை குடியரசு தினம், சுதந்திர தினம், அன்னையர் தினம், என பல்வேறு தினங்கள் கொண்டாடப்பட்டு வந்தாலும் உண்மையில் அனைவராலும்  கொண்டாடப்பட வேண்டிய ஒரு  தினம் தான் ஆசிரியர் தினம் தான், ஏனெனில் நம் வாழ்வில் கல்வி எனும் ஒளியை உள்ளத்தில் ஏற்றி வைத்து இவ்வுலகில் நம்மை நடமடவைத்த அவர்களை நினைத்து பார்க்க ஒரு சந்தர்ப்பம் தான் இந்த இனிய நாள்,

உலகில் மிக சிறந்த படைப்பான நபி ஆதம் (அலை) அவர்களிடமும், இறுதி தூதரான முஹம்மது நபி (ஸல்) அவர்களிடமும் இறைவனே தன்னை ஒரு ஆசிரியனாக தான் அறிமுகப்படுத்தி கொள்கிறான், ஆதம் (அலை) அவர்களை படைத்தது உயிர் கொடுத்து எழுப்பிய பின் அனைத்து பெயர்களையும் அவனே கற்றுக் கொடுத்தான் (அவனே ஆதமுக்கு அனைத்து பெயர்களையும் கற்று கொடுத்தான் அல் குர்ஆன்) மேலும் இறுதி தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் ஹிரா குகையில் இறை தியானத்தில்  இருக்கும் பொழுது நபியே யாவற்றையும் படைத்த உன் இறைவனின் திருப்பெயரை கொண்டு ஓதுவீராக,, அவனே மனிதனை இரத்தகட்டியில் இருந்து படைதான் அல் குர்ஆன் அத்தியாயம்-96 வசனம் -1

இப்படி அனைத்து விடயங்களையும் கற்று கொடுத்த பின் அந்த நபிமார்களை நன்மை தீமைக்களை பிரித்தறிய கற்று கொடுக்கும் ஆசிரியர்களாக நமக்கு அறிமுக படுத்தினான், உதாரணமாக “ நமது வசனங்களை உங்களுக்கு ஒதிக் காட்டி உங்களை தூய்மைபடுதுவதர்க்காகவும் உங்களுக்கு வேதத்தையும் ஞானத்தையும் கர்பிப்பதர்க்காகவும் இன்னும் நீங்கள் அறியாதவற்றை உங்களுக்கு கற்று கொடுப்பதற்காகவும் உங்களில் இருந்தே ஒரு தூதரை உங்களிடம் அனுப்பியுள்ளோம். (அல் குர்ஆன் அத்தியாயம்-2 வசனம் -151)  மேற்கொண்ட வசனத்தின்மூலம் இறைவனே மூல ஆசிரியன் என்பது நம்மக்கு விளங்குகிறது

பெற்றோர்களுக்கு பின் ஒரு குழந்தையை செதுக்குவது ஆசிரியர் தான் ஒரு  குருவின் வழிகாட்டுதலின்றி எவரும் வெற்றி பெற முடியாது  எனவேதான் ஒரு இஸ்லாமிய கவிஞர் இப்படி பாடுகிறார்,

 

மாடில்லான் வாழ்வும்

மதியில்லான் வாணிபமும்,

நடில்லன் செங்கோல் நடத்துவதும் கூடும்.

குருவில்லான் வித்தையும்,

குணமில்லா பெண்ணும்

விருந்தில்லா வீடும் விழல்

 

மேற்கண்ட வரியில் குரு (ஆசிரியர்) இல்லாமல் எதை கற்றாலும் அது முழுமை பெறாது என்று விளக்குகிறார்

அனால் இன்றைய காலத்தில் ஆசிரியர்களுக்கு மாணவர்களை தொடுவதற்கு கூட அனுமதில்லை

ஆகவே  நமக்கு பாடம் கற்று கொடுத்த ஆசிரியர்களை இன்நன்நாளில் நினைவு கூறுவோமாக!.

 

 

News

Read Previous

கூட்டுறவு சங்கங்களுக்கு புனரமைப்பு நிதிவழங்கக் கோரி தீர்மானம்

Read Next

பூக்காமற் போகுமோ பூ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *