அறிவியல் தமிழ் கலைச்சொல் இணைய களஞ்சியம்

Vinkmag ad

தமிழ் நமது தாய் மொழி.

உலகின் மிக மூத்த மொழி என்று உலக மொழி அறிஞர்களால் பரவலாக ஏற்கப்படும் மொழி நம் தாய்மொழி, இருப்பினும், இன்றைய அறிவியல் யுகத்தில் தமிழ்மொழியின் நிலை சற்று தொய்வானதாக உள்ளது நமக்கு மிகுந்த கவலை அளிப்பதாக உள்ளது.

அதிக உணர்வுடன் வெறுமனே தமிழ் மொழியின் சீர் இளமை கண்டு செயல் மறந்து உணர்வுப்பூர்வமாக கவலை கொள்வதால் மட்டும் பயன் ஏதும் ஏற்படப் போவதில்லை.

உலகில் உள்ள அனைத்து தமிழர்களாலும் ஏற்கப்படும், நித்தமும் பழக்க வழக்கத்தில் பின்பற்றப்படும், பயன்படுத்தப்படும் அறிவியல் கலைச்சொற்கள் தமிழில் நிலை நிறுத்தப்பட வேண்டும்.

மொழி வளர்ச்சி மட்டும் போதாது.

மொழியுடன் கூடிய ஒரு இனத்தின் வளர்ச்சியும் அமைதல் வேண்டும்.

எப்படி அதனை செய்வது, என்ற சிந்தனையின் வெளிப்பாடே இந்த புதிய கல்வி முறைமை.

அறிவியல் தமிழ் அறக்கட்டளையின் நிறுவனர் அறிவியல் தமிழ் தந்தை மணவை முஸ்தபா ஐயா அவர்களின் விருப்பப்படி அவரது நூல்களில் காணப்படும் ஐந்தரை லட்சம் கலைச்சொற்களையும் மேலும் அச்சில் ஏறாமல் உள்ள ஒன்றரை லட்சம் கலைச்சொற்களையும் எனது தமிழ் பயணத்தில் நான் வடிவமைக்க விழையும் சில முதல் பல சொற்களையும் பயன்படுத்தி ஒரு வித்தியாசமான மாற்றத்தை தமிழ் கூறும் நல் உலகினில் உருவாக்கிடும் முயற்சி இது.

தமிழ் உலகினில் குழுக்களுக்கு என்றுமே பஞ்சம் இல்லை, இந்த கடிதம் உருவாகும் இந்த நேரத்தில்கூட உலகின் எங்காவது ஒரு பகுதியில் ஒரு குழுவினர் (முக்கிய பொறுப்பில் உள்ளவர்களின் ஆசியை பெற்ற)  (எதாவது ஒரு பல்கலைக்கழகத்தில் துணை வேந்தராக உள்ளவரின் அன்பை பெற்ற) (அரசியல் வியாதிகளின் வீடுகளுக்கு பலமுறை சென்று இனிப்பு வழங்கி அவர்களை கவர்ந்து மெய் மறக்க வைத்த) கலைச்சொல் உருவாக்க குழு இயங்கிக்கொண்டுதான் இருக்கும்.

இளைஞர்களை இணைத்து செயல்பட விரும்பாத குழுக்களால் தமிழுக்கு முழுமையான நன்மை கிட்டாது.

தமிழ் என்று வரும்பொழுது தமிழை விட சில தமிழ் மொழி அறிஞர்கள் முக்கியமல்ல.

மக்களின் வரிப்பணத்தில் கோடி கொடியாக விழுங்கும் தமிழ் வளர்ச்சியை முன்னிறுத்தும் பணியை செய்ய வேண்டிய பல நிறுவனங்களின் செயல்பாடுகளில் அதிருப்தி அடைந்துள்ள தமிழர்களின் வரிசை  நீள்கிறது என்பது உண்மை.

மணவை முஸ்தபா அறிவியல் தமிழ் அறக்கட்டளையும் சென்னை அடையாரில் உள்ள டாக்டர். எம் .ஜி.ஆர். ஜானகி கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ் துறையும் இணைந்து நடத்தும் பட்டயப் படிப்பின் மூலமாக புதிய கல்வி முறைமை இந்த இழையின் மூலமாக இன்று முதல் இணையத்தில் துவங்குகிறது.

தமிழ் ஆவணங்கள் என்னும் இணைய தளம் இந்த கல்வி முறைமையை தாங்கி நிற்கும்.

 

மணவை முஸ்தபா அறிவியல் தமிழ் அறக்கட்டளையும் சென்னை அடையாரில் உள்ள டாக்டர். எம் .ஜி.ஆர். ஜானகி கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ் துறையும் இணைந்து நடத்தும் பட்டயப் படிப்பின் மூலமாக புதிய கல்வி முறைமை இந்த இழையின் மூலமாக இன்று முதல் இணையத்தில் துவங்குகிறது.

News

Read Previous

முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி ஆசிரியருக்கு மாநில நல்லாசிரியர் விருது

Read Next

நாட்டுப்புறச் சிறுவர் விளையாட்டில் உளவியல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *