அப்துல் கலாம்

Vinkmag ad

அப்துல் கலாம் தன்னுடைய சுய சரிதையில் ஒரு சம்பவத்தை சொல்லியிருப்பார்.

இந்தியா ஆரம்ப காலத்தில் விண்வெளியில் ராக்கெட் செலுத்த முயற்சித்துக்கொண்டிருக்கும்பொழுது தொடர்ந்து தோல்வியை சந்தித்துக் கொண்டிருந்தார்கள்.

அப்பொழுதெல்லாம் அவருடைய பாஸ் சதிஷ் தவான் ( இஸ்ரோவின் அப்பொழுதைய தலைவர் ) தான் முன்வந்து தோல்விக்கான பொறுப்பை ஏற்றுக்கொள்வாராம்.

முதன் முதலில் விண்வெளியில் ராக்கெட் ஏவும் சோதனை வெற்றியடைந்த பொழுது, அந்த project manager ஆன அப்துல் கலாம் அவர்களை பத்திரிக்கையாளர்களை சந்திக்கச் சொல்லியிருக்கிறார்.

அந்த சம்பவத்தை அப்துல்கலாம் அவர்கள் குறிப்பிட்டு, ஒரு நல்ல தலைவன் என்பவன் தோல்வியை தான் முன்வந்து பொறுப்பேற்றுக் கொண்டு வெற்றி கிடைக்கும்போது அதில் அடிமட்டத்தில் உழைத்தவர்களுக்கு சமர்பிப்பார்கள். அதுதான் நல்ல தலைவனுக்கு அழகு என்பார்.

இன்று இஸ்ரோ விஞ்ஞானிகள் விண்வெளியில் உள்ள செயற்கைக்கோளை சுட்டு வீழ்த்தும் சோதனையை செய்திருக்கிறார்கள். ( உலக அளவில் இது கெட்ட பெயரைத்தான் வாங்கித்தரும், இது விண்வெளிப்போருக்கு வித்திடும் என்பதால் இதை வெளிப்படையாக சொல்ல மாட்டார்கள்.)

சரி அப்படியே வெளி உலகத்திற்கு சொல்ல வேண்டும் என்றாலும், ஒன்று அந்த திட்டத்தில் வேலை செய்த விஞ்ஞானிகளை அறிவிக்கச் சொல்லியிருக்கலாம், இல்லை இஸ்ரோவின் தலைவர் பத்திரிக்கையாளர்களை சந்தித்திருக்கலாம்.

அதெல்லாம் விட்டுவிட்டு இந்தியாவின் பிரதமர் தொலைக்காட்சிகளில் வந்து இதை தனது சாதனை போல சொல்கிறார்.

நன்றாக இருந்த இந்தியாவின் பொருளாதாரத்தை வீணாக்கி டீமானிட்டைசேசன் படு தோல்வியடைந்த பொழுது கடைசி வரை இவர் தனது தோல்வியை ஒப்புக்கொள்ள வில்லை.

தான் செய்த தவறுகளுக்கு பொறுப்பேற்காமல் அடுத்தவர் செய்த சாதனைகளுக்கு சொந்தம் கொண்டாட ஓடோடி வருவது ஒரு நாட்டின் பிரதமருக்கு அழகல்ல.

News

Read Previous

இயக்கமும், உலமாக்களும்

Read Next

ஆங்கில – தமிழ்ச் சொற்கள்

Leave a Reply

Your email address will not be published.