நீச்சல் போட்டி: முதுகுளத்தூர் பள்ளி மாணவர் மாநிலப் போட்டிக்கு தகுதி

Vinkmag ad

முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல் நிலைப்பள்ளி மாணவர் 19 வயதுக்குள்பட்ட மண்டல அளவிலான 1500மீ நீச்சல் போட்டியில் முதலிடம் பெற்று மாநிலப் போட்டிக்கு தகுதிபெற்றுள்ளார்.

ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை வருவாய் மாவட்ட அளவில் காரைக்குடி லீடர் மெட்ரிக்குலேசன் பள்ளியில் மண்டல அளவில் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இதில் முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல் நிலைப்பள்ளியில் 12 ஆம் வகுப்பு படிக்கும்  டி.சத்தியநாதன் என்ற மாணவர் 19 வயதிற்குள்பட்ட மண்டல அளவிலான 1500மீட்டர் நீச்சல் போட்டியில் முதலிடமும்,50 மீட்டர் நீச்சல் போட்டியில் மூன்றாம் இடமும் பெற்று மாநில போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

வெற்றி பெற்ற மாணவரை பள்ளித் தாளாளர் அன்வர், கல்விக்குழு தலைவர் முகம்மது மீரா, பள்ளித்தலைமை ஆசிரியர் முகம்மது சுலைமான், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் பிரசாத், பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் என்.கமால்பாட்ஷா உள்பட பள்ளிவாசல் ஜமாத்தார்களும், கல்விக்குழுத் தலைவர்களும், ஆசிரியர்களும் பாராட்டினர்.

News

Read Previous

ஸ்ரீ வரகதப் பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்

Read Next

சர்க்கரை நோய்

Leave a Reply

Your email address will not be published.