அரபு மொழிப் பாடம்

Vinkmag ad

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வின்றி தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துக்கள்

தமிழ்நாடு பள்ளிக்கல்வி மேல்நிலை வகுப்பில் அரபு மொழிப் பாடம் பயில அரியதோர் வாய்ப்பு.

11 ஆம் வகுப்பில் குரூப் தேர்வு செய்து படிப்பது போல் அரபு மொழிப் பாடத்தையும் தமிழுக்கு பகரமாக தேர்வு செய்யலாம்.

புதிதாக தமிழக அரசு அரபு மொழிப்பாடநூல் தயாரித்து வெளியிட்டுள்ளது.

முஸ்லிம் கல்வி நிறுவனங்களே உங்களது மேலான கல்வி நிறுவனத்தில் பத்து பிள்ளைகளையேனும் அரபு மொழி கற்க ஏற்பாடு செய்யுங்கள்.

11மற்றும் 12ஆம் வகுப்பில் உங்களது மேலான பள்ளி மாணவர்கள் அரபு மொழிப்பாட பொதுத் தேர்வு எழுத ஆவணம் செய்யுங்கள்.

சிறு வகுப்பில் கற்றுக்கொடுக்கும் அரபு பாடநூல்கள் உங்கள் பள்ளிவாசல் மதரஸாவில் நடைபெறும் அரபு பயிற்சி அரசின் கவனத்திற்கு வராது.

பள்ளிகளில் பொதுத்தேர்வில் அரபு மொழி எடுத்து எழுதும் போதுதான் இத்தனை நபர்கள் அரபி பயில்கிறார்கள் என்பது அரசின் கவனத்திற்கு வரும்

நமக்கென்ன நாம்தான் பள்ளிவாசல் மதரஸாவில் ஓதுகிறோமே….? பிறகு ஏன் பள்ளியிலும் படிக்கவேண்டும் ? என் நினைத்தால் மேல்நிலை வகுப்பில் அரபு மொழி படிக்க யாரும் இல்லை என அரசு முடிவெடுத்திடும்.

இஸ்லாமியர்கள் நடத்தும் பள்ளிகள்தான் இதை செய்யமுடியும். 10-20 பிள்ளைகளாவது… ஒவ்வொரு முஸ்லிம் மேல்நிலைப்பள்ளிகளிலும் அரபு மொழி கற்க ஏற்பாடு செய்யுங்கள்.

செய்வீர்களா?
செய்வீர்களா?

மாநில அரசு பாடத்திட்டம்
CBSE பாடத்திட்டம்
IGCSE & ICSE பாடத்திட்டம்
என அனைத்து வகை பள்ளிகளிலும் அரபு மொழி கற்கும் வாய்ப்புள்ளது.

தகவல்:-
மெளலவி.
K. அப்துல் சுக்கூர் ரியாஜி,
செயற்குழு உறுப்பினர்,
தமிழ்நாடு அரபுச் சங்கம்.சென்னை.
9488142358.

News

Read Previous

இளமை எண்ணம்

Read Next

சுவனத் தென்றலின் சுவை!

Leave a Reply

Your email address will not be published.