ஹஜ்ஜின் சிறப்பு தகவல்கள்!

Vinkmag ad

ஹஜ்ஜின் சிறப்பு தகவல்கள்! 

ஏ.பீ.முகமது அலி, ஐ.பீ.எஸ்(ஓ)

மக்கமா நகர் அல்ஹரத்திலும் மதினா நகர் மஸ்ஜிதே நவாபியிலும் ஹாஜிகள் வசதிக்காக நாலாவது கட்டிட விஸ்தரிப்பு என்ற பணி முழுமூச்சில் நடந்து கொண்டுள்ளது. அது மட்டுமல்ல மதினாவில் பள்ளியில் வெளிப் புறத்திலும் வசதியாக தொழுவதிற்காக வண்ண விளக்குகள் கொண்ட குளிர் தண்ணீரை தெளிக்கின்ற விரிகொடைகள்  வசதி செய்யப் பட்டுள்ளது. ஆனால் அந்த வசதி மக்கா ஹரத்தின் வெளியே இல்லை. அதனை சரி செய்வதிற்காக 53 அகலம் மற்றும் 53 மீட்டர் நீளம் கொண்ட கொடைகளை அமைக்க திட்டமிட்டுள்ளார்கள் ஹாஜிகள் வசதிக்காக.

 

இந்த வருடம் வருகை தந்த ஹாஜிகளுக்கு ஒரு புதிய நடைமுறை விமான தளங்களில் பார்த்திருப்பார்கள். ஹாஜிகள் வருகை அவர்களின் நம்பகத்தன்மை அறிய பயோமெட்ரிக்ஸ் என்ற கைவிரல் ரேகை மற்றும் கண் அமைப்பு பதிவுகள் செய்யப் பட்டன.

 

நான் மக்காவில் இருந்தபோது என்னை ஒருவர் சந்தித்தார். ‘சார் நீங்கள் இங்கிருந்து வீணாக ஜம், ஜம் தண்ணீர் மற்றும் பேரித்தம் பழங்களை சுமக்க வேண்டாம். நீங்கள் ஆர்டர் கொடுத்தால் நீங்கள் சென்னை திரும்புமுன் உங்களுக்குக் கிடைக்க வழிவகை செய்வேன் என்றார். நானும் அவரிடம் ஜம் ஜம் தண்ணீர் அனுப்ப எவ்வளவு செலவாகும் என்றேன். அவர் 10 லிட்டர் கேன் 300ரியால் ஆகும் என்றார். நான் நாகரிகமாக மறுத்து விட்டேன். இது போன்று சிலர் ஜம் ஜம் தண்ணீருடன் சாதாரண தண்ணீரைக் கலந்து சீல் வைத்து விற்பனை செய்வதாக சென்னை வந்ததும் கேள்விப்பட்டேன்.புனித தண்ணீரிலும் மோசடி வேலையா என்று எண்ணத் தோன்றுகிறது.

 

இந்த நேரத்தில் போலியாக உயர் ஜாதி பாதாம் பருப்புடன் கூடிய பேரித்தம் பழ பாக்கெட்டுகளைத் தயார் செய்ததை  ரியாத் காவல் துறையினர் கண்டு பிடித்திருக்கின்றார்கள் என்ற செய்தி வெளிவந்தது. ‘சியாக்காரி டேட்ஸ் லேபிள்’ தலைப்புடன் போலியான பேரித்தம் பழ பாக்கட்டுகளை ஒரு சௌதி அரேபியர் கம்பனி பெயரில் தயார் செய்யும் போது கண்டு பிடித்து, 180 அட்டைப் பெட்டியில் வைத்திருந்த பாதாம் பருப்புகளையும், 45 ஏற்கனவே தயார் செய்யப்பட அட்டைப் பெட்டிகளையும், 1,50,000 போலி லேபிள்களையும் கைப்பற்றியுள்ளார்களாம் அதன் உத்தேச மதிப்பு 6 மில்லியன் ரியால் ஆகும் என்ற செய்தி அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ரசூலுல்லாஹ் வியாபாரத்தில் நேர்மை காட்டுங்கள் என்று சொன்னதாக பல்வேறு உதாரணங்களுடன் பல ஹதீஸுகள் உள்ளன. இருந்தாலும் இப்படியும் காசு சம்பாதிக்கும் கும்பலும் உள்ளன என்று நினைக்கும் போது ஏமாறுபவர்கள் இருக்கும்போது ஏமாற்றுபவர்கள் காட்டில் மழைப் பொழியத்தானே செய்யும்!

 

ஈகை குணம் கொண்ட சௌதி மன்னர் சல்மான் வரலாற்று சிறப்புமிக்க செயல் இந்த ஹஜ்ஜில் காண முடிந்தது.

1) இஸ்ரேல் மக்களால் கொடுமைக்கு மேல் கொடுமை அனுபவித்து வரும் பாலஸ்தீன மக்கள் ஹஜ் செய்ய முடியாமல் இருந்தது. அதனை நிவர்த்தி செய்ய 2640 பாலஸ்தீன மக்களை தன் விருந்தாளியாக பாவித்து அவர்கள் ஹஜ் செய்ய அத்தனை வசதிகளையும் செய்து கொடுத்தார். அதில் 1000 பாலஸ்தீனர்கள் இஸ்ரேயல் ராணுவத்தால் கொல்லப் பட்ட 1000 பாலஸ்தீனர்களின் குடும்ப உறுப்பினர்களும் ஆவர்.

 

2) மினாவில் தங்கி இருந்த 5 நாட்களினை மன்னர் விருந்தாளியாக்கி அவர்கள் காலை மலை தேநீரிலிருந்து மூன்று வேலை உணவும் ஹாஜிகளுக்கு பரிமாறப்பட்டது.

 

3) புனித நகர்களுக்கு வருகை தரும் ஹாஜிகள் வசதிக்காக அவர்கள் போக்குவரத்தில் இலகுவாக செல்வத்திற்காக அதிவிரைவு மெட்ரோ ரயில் அமைக்கப் பட்டு வருகிறது.

News

Read Previous

கண்ணதாசன்

Read Next

மரண வாயிலிருந்து தப்பித்த வங்க சிங்கமும்-முஸ்லிம்கள் துணையும்!

Leave a Reply

Your email address will not be published.