ஷவ்வால் மாதத்தின் ஆறு நோன்பின் சிறப்புகள்

Vinkmag ad
ஷவ்வால் மாதத்தின் ஆறு நோன்பின் சிறப்புகள்

”யார் ரமலான் மாதத்தின் நோன்பை நோற்று பின்னும் அதைத் தொடர்ந்து வரும் ஷவ்வால் மாதத்தின் ஆறு நோன்பையும் நோற்கின்றாரோ (அவர்) வருடமெல்லாம் நோன்பு நோற்றதற்குச் சமம்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: முஸ்லிம்)

 
விளக்கம்: ஒருவர் ரமலான் மாதம் முழுவதும் நோன்பு நோற்று அதை அடுத்து வரும் ஷவ்வால் மாதத்தின் ஆறு நோன்பையும் நோற்றால் அவர் வருடம் முழுவதும் நோன்பு நோற்றவராக அல்லாஹ்விடத்தில் கருதப்படுவார். அதாவது, அல்லாஹ்விடத்தில் ஒரு நற்செயலுக்கு குறைந்தது பத்து நன்மைகள் கிடைக்கும். இந்த அடிப்படையில் ரமலான் மாத முப்பது நோன்பிற்கு முன்னூறு நன்மைகளும் ஷவ்வால் மாத ஆறு நோன்பிற்கு அறுபது நன்மைகளும் கிடைக்கும். மொத்தம் முன்னூற்றி அறுபதாகும். இதுவே ஒரு வருட நாட்களின் கிட்டத்தட்ட எண்ணிக்கையாகும். அல்லாஹ் மிகவும் நன்கறிந்தவன்.

ரமலான் மாதத்தின் 30 நோன்பை நோற்ற நமக்கு இந்த ஆறு நோன்புகளை நோற்பது சிரமமான ஒன்றல்ல. இந்த ஆறு நோன்புகளையும் தொடர்ந்து நோற்க முடியாதவர்கள் விட்டு விட்டாவது நோற்கலாம். ஆனால் ஷவ்வால் மாதம் முடிவதற்கு முன் நோற்க வேண்டும். யார் ரமலான் மாத விடுபட்ட நோன்பை நோற்க இருக்கின்றார்களோ அவர்கள், அவர்களின் கடமையான ரமலான் மாதத்தின் நோன்பை நோற்ற பின்புதான் ஷவ்வால் மாதத்தின் ஆறு நோன்பை நோற்க வேண்டும்.

News

Read Previous

கணினியில் இலகுவாக தமிழில் Type செய்வது எப்படி?

Read Next

முன்னேறுவதற்கான வழி…!

Leave a Reply

Your email address will not be published.