வெற்றி

Vinkmag ad

வெற்றியை
அறுவடை செய்ய
உழைப்பை
விதைக்க வேண்டும்.

உழைத்து
வாழ நினையுங்கள்.

அடுத்தவை அழித்து
வாழ நினைக்காதீர்.

முழுநேரமும் உழையுங்கள்
முடிந்தவரை உறங்குங்கள்.

உழைப்பை நேசியுங்கள்
உயர்வை யோசியுங்கள்
வயது மறந்திடும்
வளம் பெருகிடும்.

வியர்வையின் உப்பே
உழைப்பின் மதிப்பு.

வறுமைக்கு வயதில்லை.
உழைப்பதற்கு எந்த
தடையும் இல்லை.

வயிறு இல்லையென்றால்
உழைப்பை என்றோ
மறந்திருப்பான் மனிதன்.

உலகில் தானாக
முன்னேறியவர்கள்
யாரும் இல்லை.

நீங்கள் உழைக்க
தயாராக இருத்தால்
சிலர் உங்களுக்கு
உதவ முன்வருவார்கள்.*

கற்பனையை விட
உழைப்பே பிரதானம்!

கருங்கல்லை உன்னத
சிலையாக்கும் சிற்பிக்கு!!

வெற்றிக்கான தகுதியை தக்கவைத்துக்கொள்வதற்கே
இங்கு அரும்பெரும் பயணம் மேற்கொள்ளவேண்டியிருக்கிறது!

ஓடுகிறவனுக்கு
பல வழி உண்டு..

துரத்துறவனுக்கு
ஒரே வழி தான்..!

அவன் பின்னால தான்
ஓடியாகனும்..!

நீங்கள் எப்படிப்பட்ட
ஓட்டக்காரன் என்பதை..

நீங்கள் எடுக்கும்
முடிவுகளை பொறுத்தே
வெற்றி தீர்மானிக்கப்படுகிறது..!!

கருத்துக்களும், எண்ணங்களும்
உங்கள் முன்னேற்றத்துக்கு தேவை..!

ஆனால்,

வெறும் கருத்துக்கள் மட்டுமே
வாழ்க்கை ஆகிவிடாது..

பூக்களை தொடுத்து மாலை ஆக்குவதற்கு நார் தேவை..!

ஆனால்,

நார் மட்டுமே
மாலை ஆகிவிடாது..

செயலுடன்
‘”இணையாத எண்ணங்கள், முன்னேற்றத்திற்கு ஏணி ஆகாது..!!

News

Read Previous

தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்

Read Next

பெரியார் புத்தகங்களின் PDF

Leave a Reply

Your email address will not be published.