தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்

Vinkmag ad

தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்

தொகுப்பாசிரியர். புலவர்.செ.இராசு

பக்கங்கள் : 232

வெளியீடு : நேஷனல் பப்ளிஷர்ஸ்
2.வடக்கு உஸ்மான் சாலை, (கோடம்பாக்கம் மேம்பாலம் அருகில்)
தியாகராயர் நகர், சென்னை 600 017
தொலைப்பேசி :
044 -2834 3885
——————————–

இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள் என்னும் இந்த நூல் இந்திய முஸ்ஸிம்களின் குறிப்பாக
தமிழக முஸ்லிம்களின் வரலாற்றை

கல்வெட்டுகள், செப்பேடுகள், ஓலைப்பட்டயங்கள், நாணயங்கள், பதக்கங்கள் ,
வெளிநாட்டார் குறிப்புகள் , இலக்கியங்கள் மற்றும் அரசு ஆவணங்கள்
ஆகியவற்றிலிருந்து பல குறிப்புகளை திரட்டி ஆதாரப்பூர்வமாக தொகுக்கப்பட நூலாக அமைந்துள்ளது.

ஈரோட்டைச் சேர்ந்த புலவர்.செ.இராசு பெரிதும் முயற்சி எடுத்து, தன்னால் முடிந்த அளவுக்கு, தமக்கு கிடைத்த வரையிலான இஸ்லாமிய வரலாற்று ஆவணங்களை மிகவும் சிறப்பாக தொகுத்து தந்துள்ளார் ! இந்த மிகப்பெரும் பணியில்
அவருக்கு, கு.ஜமால் முகம்மது உதவியாக இருந்து பணிசெய்துள்ளார்.!
பல நூற்றாண்டுகளாக
தமிழக முஸ்லிம்கள் முஸ்லிமல்லாத மக்களுடன் எந்த அளவுக்கு நட்பு பாராட்டி, சமய நல்லிணக்கத்துடன் வாழ்ந்து வந்துள்ளனர்
என்பதை வெளிப்படுத்தும் வகையிலான வரலாற்று தகவல்களை ஆதாரப்பூர்வமாக பல கல்வெட்டு, செப்பேட்டு செய்திகள் மூலம் இந்நூலில் தொகுத்து தரப்பட்டுள்ளது..

மூவேந்தர்கள் எனப்போற்றப்படும் சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் ஆட்சி கால முதல் தற்காலம் வரையிலான ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தில் முஸ்லிம்கள் வாழ்ந்து சமய நல்லிணக்கத்துடன் வாழ்ந்து வருவதை வெளிப்படுத்தும் ஏராளமான ஆவணங்கள் இந்நூலில் தொகுத்துத் தரப்பட்டுள்ளன.

முருகன் கோயிலுக்கு தோப்பு அளித்த ராவுத்தர்கள்,

திப்பு சுல்தானின் கொடைப்பெற்ற கொங்கு நாட்டுக் கோயில்கள்

சங்கர மடத்திற்கு கொடை கொடுத்த சுல்தான்கள்,

பார்ப்பன பெண்ணை காப்பற்ற உயிர்துறந்த பக்கீர்சாயபு

தஞ்சை பெரிய கோயில் கல்வெட்டில் இடம்பெற்றுள்ள முஸ்லிம் பெயர்கள்,

இராமேஸ்வரம் கோவிலில் முஸ்லிம்களின் பங்கு

சேதுபதி மன்னர் முஸ்லிம்களுக்கு செய்த உதவிகள்

திருச்செந்தூர் செந்தில்ஆண்டவர் கோவில் திருப்பணிக்கு சீதாக்காதி செய்த உதவிகள்

எனப்
பலத் தலைப்புகளில் பல வரலாற்று சம்பவங்கள் ஆவணப் படுத்தப்பட்டுள்ளது.

சமய நல்லிணக்கத்தை விரும்பும்
அனைவரும் அவசியம்
படிக்க வேண்டிய மிக முக்கிய நூல் இது!.

News

Read Previous

தினமும் நடை பயிற்சி செய்வதால் கிடைக்கும் நன்மைகள்

Read Next

வெற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *