விடுதலைக் களத்தில் முஸ்லிம்கள் – கவிஞர் பாரதன்

Vinkmag ad

viduthalai1viduthalai2விடுதலைக் களத்தில் முஸ்லிம்கள் –  கவிஞர் பாரதன்

 

விடுதலைக் களத்தில் முஸ்லிம்கள் என்ற நூல் சென்னை நேஷனல் பப்ளிஷர்ஸ் மூலம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வெளிவர உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தர் கல்லூரியின் தமிழ்த்துறை பேராசிரியர் மு. அப்துல் சமது உறுதுணையாக இருந்துள்ளார்.

இதுபோன்ற நூல்கள் வெளிவருவது சமீப காலங்களில் அரிதாக இருந்து வருகிறது. அதிலும் சகோதர சமுதாயத்தைச் சேர்ந்த கவிஞர் பாரதன் இந்த நூலை ஆர்வத்துடன் வெளிக்கொணர்ந்திருப்பது மிகவும் பாராட்டுக்குரியது. வரவேற்புக்குரியது.

அவர் தனது முன்னுரையில் வழக்கமாக தனது நூல்களை வெளியிட்டு வரும் பிரபல நூல் வெளியீட்டு நிறுவனம், இந்த நூலை வெளியிட தயங்கியதையும், ஏன் இந்த வீண் வேலை? என்றும் கூறி அவரது முயற்சிக்கும், ஆர்வத்திற்கும் தடையாக இருந்துள்ளது.

இதன் மூலம் இஸ்லாமியர்கள் இந்த நாட்டுக்கு செய்த அளப்பரிய தியாகத்தை மறைக்க முற்போக்கு எண்ணம் கொண்ட சிலர் கூட துணையாக இருப்பது வருந்தத்தக்கது. மிகவும் வேதனைக்குரியது.

தேனி மாவட்டம் கம்பம் நகரைச் சேர்ந்த கவிஞர் பாரதன். இவரது தந்தை நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் இந்திய தேசிய இராணுவத்தில் பணியாற்றியவர். எனவே தேசியம் இவரது உயிரில் கலந்த உணர்வாக மிளிவதோடு இவரது படைப்புகளிலும் பரிணமிக்கிறது.

பட்டிமன்றம், கவியரங்கம், இலக்கிய பொழிவு என நூற்றுக்கணக்கான மேடைகளைக் கண்ட  இவர் இஸ்லாமியர்கள் தேச விடுதலைக்கு ஆற்றிய பங்களிப்பை சிறப்பாக பேசக்கூடியவர்.

இதுபோன்றவர்களை நாம் ஊக்கப்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம் ஆகும். எனவே அவரது நூலை வாங்கி ஆதரிப்பதுடன், அவரை நமது ஊர்களில் நடக்கும் கூட்டங்களில் பேசுவதற்குரிய வாய்ப்பை ஏற்படுத்தி கொடுப்பதன் மூலம் இஸ்லாமியர்களின் தேசப்பற்றை இளைய தலைமுறையினரும் தெரிந்து கொள்ளக்கூடிய வாய்ப்பு ஏற்படும்.

 

தொடர்பு முகவரி :

கவிஞர் சோ. பாரதன்

எண் 9/4 மாலையம்மாள்புரம்

கம்பம்,

தேனி மாவட்டம்

அலைபேசி : 93626 50100

 

நூல் விபரம் : விடுதலைக் களத்தில் முஸ்லிம்கள்

கவிஞர் பாரதன்

முதற் பதிப்பு : 2017

வெளியீடு :

நேஷனல் பப்ளிஷர்ஸ்

எண் 2 வடக்கு உஸ்மான் சாலை

(கோடம்பாக்கம் மேம்பாலம் அருகில்)

முதல் மாடி

தியாகராயர் நகர்

சென்னை – 600 017

பக்கங்கள் : 160

விலை : ரூ 140/-

viduthalai1

News

Read Previous

எகேலுவின் கதை

Read Next

தெருவோர உணவுக் கடைகளுக்கு மினிஃப்ரிட்ஜ்

Leave a Reply

Your email address will not be published.