விஞ்ஞானிகளுக்கு அழைப்பு!

Vinkmag ad

அறிவியல் ஆசிரியர் லிங்கவேலு தான் நடத்திக் கொண்டிருந்த பாடத்தை நிறுத்திவிட்டு வகுப்பறையை நோட்டமிட்டார்.

முன் பெஞ்சில் முரளியும் ராமுவும் எதைப்பற்றியோ மிக ஆழமாகப் பேசிக் கொண்டிருந்தார்கள். தாங்கள் வகுப்பறையில் இருப்பதையே மறந்துவிட்ட நிலை அவர்கள் பேச்சில் தென்பட்டது!

பத்து நிமிடங்கள் அமைதியானது. அனைத்து மாணவர்களும் அவர்களை நோக்கியபடியே இருந்தனர்.

பத்து நிமிடங்கள் வகுப்பறையே அமைதியானது. அனைத்து மாணவர்களும் அவர்களை நோக்கியபடியே இருந்தனர்.

சலசலப்பாக இருந்த வகுப்பறை, வெகு அமைதியானதை உணர்ந்த இருவரும் சட்டென இயல்பு நிலைக்குத் திரும்பினர். ஆசிரியர் உட்பட அனைவரும் தங்களைப் பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டதும் சற்றே குற்ற உணர்வில் தலைகவிழ்ந்தனர்.

“”என்னப்பா அங்கே! ரொம்ப நேரமா சுவாரசியமா ஏதோ பேசிக்கிட்டுருந்தீங்களே…,நான் நடத்தின பாடத்தைக் கூட கவனிக்கலே…,பாடத்தை விட அவசியமானதா அது?”

இருவரும் மெüனம் காத்தனர்.

“”என்னப்பா பேச்சையே காணோம்?”

“”ஸாரி சார்” என்றான் ராமு மெதுவாக.

“”எதுக்கு?”

“”இல்லை சார்…,நம்ம முரளி நேத்தைக்கு ஒரு செய்தியைப் படிச்சானாம். அது எனக்கு பிரமிப்பா இருந்தது. அதப்பத்தித்தான் பேசிக்கிட்டிருந்தோம்.”

“”அப்படி என்ன செய்தியைப் படிச்ச முரளி?” எனக் கேட்டார் ஆசிரியர்.

“”நம்ம முன்னாள் ஜனாதிபதி மறைந்த அப்துல் கலாம் ஒரு செய்தி சொல்லியிருக்காரு சார்…,அதப்பத்தித்தான் முரளிகிட்டே பேசிக்கிட்டு இருந்தேன்”

“”அப்துல் கலாம் செய்தியா? அது என்ன செய்தி?”

“”விண்வெளியில் கிடைக்கும் சூரிய ஒளி எரிபொருளை லேசர் தொழில்நுட்பத்தின் மூலமாக பூமிக்குக் கொண்டு வந்து பயன்படுத்த முடியும்னு சொல்லியிருக்கார் சார்…,அதப்பத்தித்தான் பேசிக்கிட்டு இருந்தோம்”

“”அட! ஆமா அந்த செய்தியை நான் கூடப் படிச்சேன். அது நல்ல செய்திதான். நம்ம அறிவியல்ல எல்லாம் சாத்தியப்படுத்த வழி இருக்கு. சரி, நேற்றைக்கு நீ படிச்சதை அப்படியே சொல்லு முரளி..,அது மற்றவர்களுக்கும் பயனாக இருக்கட்டும்!” என்றார் லிங்கவேலு.

“”சார், உலகம் முழுவதும் எரிபொருளுக்குத் தட்டுப்பாடு அதிகரிச்சுக்கிட்டே வருதாம். அதுக்கு மாற்றுப் பொருளாத்தான் நம்ம கலாம் ஐயா சூரிய சக்தியைப் பயன்படுத்த முடியும்னு சொல்றாரு. அது மட்டுமல்ல, உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும் எரிபொருளைக்காட்டிலும் 10 லட்சம் கோடி மடங்கு எரிபொருளை சூரிய ஒளி மூலம் கிடைக்குமாம் சார்”

“”நாம இப்பவே சோலார் பேனல்கள் மூலம் சூரிய சக்தியை பெற முடியுதே இதுல என்ன புது செய்தி இருக்கு?” என இடை மறித்தாள் கவிதா.

“”கவிதா! நீ சொல்றது சரிதான். சோலார் பேனல்கள் மூலம் சூரிய சக்தியை பெற்று வருவது உண்மைதான். ஆனால் அந்த சக்தியை நாம பகல்ல மட்டும்தான் பெற முடியும். ஆனா விண்வெளியின் மூலம் கிடைச்சா…,அதை நாம 24மணி நேரமும் பயன் படுத்தலாமே!”

“”அப்படின்னா அதை எப்படி நாம பூமிக்கு கொண்டு வர முடியும்?” என கவிதா மீண்டும் கேட்க வகுப்பில் எல்லோரும் ஆர்வமாயினர்!

“”எரிபொருளுக்கு மாற்றாக சூரிய சக்தியை நாம விண்வெளியிலிருந்து பெறணும்னா லேசர் மற்றும் நானோ தொழில் நுட்பம் மூலமாக பூமிக்கு கொண்டு வந்து பயன்படுத்த முடியும். இதற்கான ஆராய்ச்சியில் ஈடுபடணும்னுதான் விஞ்ஞானிகளுக்கு அழைப்பு விடுக்கிறார் நம்ம அப்துல் கலாம் ஐயா.”

“”அப்படி பூமிக்கு வந்துட்டா எரிபொருளுக்கு பிரச்னையே வராதுல்ல” என்று கேட்டாள் கவிதா.

“”ஆமா, விஞ்ஞானிங்க அதைக் கண்டுபிடிச்சுட்டாங்கன்னா, எரிபொருள் தட்டுப்பாடற்ற ஒரு சமுதாயத்தை ஏற்படுத்தமுடியும்னு மிகவும் உறுதியா சொல்றாரு” என்றான் முரளி.

“”இது சாத்தியப்படுமா சார்?” என்று தன் ஐயத்தைக் கேட்டான் ராமு.

“”ஏன் முடியாது. எல்லாமே முடியும்”…தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன் மெய் வருத்தக் கூலி தரும்….அப்படீன்னு வள்ளுவரே சொல்றாரே, அதனால விஞ்ஞானிங்க முயற்சி பண்ணாங்கன்னா இதுல சுலபமா வெற்றி பெற்றிடலாம்” என்று ஆசிரியரை முந்திக்கொண்டு பதிலளித்தான் முரளி.

“”முரளி சொல்றது சரிதான். முயற்சியும், பயிற்சியும் இருந்தா வெற்றி சுலபம்தான்…,2020இல் இந்தாயா வல்லரசாயிடும்னு அப்துல் கலாம் ஐயா சொல்லியிருக்காரு” என்றார் ஆசிரியர்.

“”ஆமாம் சார்” என்றான் முரளி.

“”அதுமட்டுமல்ல…,உங்களைப் போன்ற மாணவர்களிடம் ஆற்றல் மிக்க சக்திகள் இருக்கு!

அது வீணாப் போகக்கூடாதுன்னுதான் சுவாமி விவேகானந்தர் அப்துல் கலாம் போன்றவங்க சொல்லிக்கிட்டே வர்றாங்க.. முதல் முயற்சி தோல்வியடைஞ்சுட்டா அதை நினைச்சு சோர்வடைஞ்சுடக்கூடாது. தோல்விதான் நமக்கு பல அனுபவங்களை சொல்லித்தரும்…,ஆனா…”என்று ஆசிரியர் சொல்ல வந்ததை நிறுத்தினார்.

எல்லோரும் ஆசிரியர் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தனர்.

“”நம்ம முரளியும் ராமுவும் நல்ல செய்தியைப் பகிர்ந்துக்கிட்டாங்க…,ஆனா…,பாடம் நடத்தறப்போ இந்த மாதிரி அவங்களுக்குள்ளே பேசிக்கிட்டு இருந்தா மற்றவங்களுக்கு இடைஞ்சலா இருக்குமே…,அப்படிங்கறதை மறந்துட்டாங்க. நாம படிச்ச செய்தியில ஏதேனும் சந்தேகம் இருந்தா ஆசிரியர்கிட்ட கேட்கறதுல தப்பே இல்லே. அத விட்டுட்டு இப்படி வகுப்பு நடக்கறப்ப இடைஞ்சல் பண்றது தப்பில்லையா?”

“”ஸாரி சார்” என்றனர் இருவரும்.

“”இருந்தாலும் இந்த செய்தியை எல்லோருக்கும் தெரியப்படுத்தின இருவருக்காகவும் நாள்தோறும் செய்தித்தாள் படிக்கிற பழக்கத்திற்காகவும் உங்க பாராட்டை இவங்களுக்கு கரவொலி மூலமா தெரிவியுங்க” என்றார் ஆசிரியர்.

மாணவர்களின் கரவொலியில் வகுப்பறையே அதிர்ந்தது!

News

Read Previous

சிறிய மழைக்குகூட சகதிக்காடாக மாறும் வாரச்சந்தை முதுகுளத்தூரில் வியாபாரிகள், மக்கள் அவதி

Read Next

சர்க்கரை நோயா ? இனி கவலை வேண்டாம் ! –

Leave a Reply

Your email address will not be published.