பனிப்பூக்கள் சிறுகதைப் போட்டி

Vinkmag ad

பனிப்பூக்கள் சிறுகதைப் போட்டி

பனிப்பூக்கள் இதழ்,  சில வாரங்களில் எட்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. 2012 ஆம் ஆண்டு, உலகத் தாய்மொழி நாளன்று. அமெரிக்க மாநிலமான மினசோட்டாவில் வாழும் தமிழர்களுக்குத், தனித்துவ முறையில் பண்பாட்டுப் பாலமாகச் செயல்படும் நோக்கத்துடன் தொடங்கிய இதழ் இன்று அகிலமெங்கும் பரவிப் பல்லாயிரக்கணக்கான வாசகர்களைக் கொண்டுள்ளது. இந்தப் பயணத்தில் பல தமிழ் எழுத்தாளர்களை அறிமுகம் செய்த பெருமையும் பனிப்பூக்களுக்கு உண்டு.
மகிழ்ச்சிகரமான இத்தருணத்தைப் படைப்பாளிகளுடன் சேர்ந்து கொண்டாட விழைந்து, 2020 ஆம் ஆண்டுக்கான பனிப்பூக்கள் சிறுகதைப் போட்டியை அறிவிக்கிறோம். உங்கள் கற்பனைச் சிறகை விரித்துச், சிறுகதை வடித்து போட்டியில் பங்கேற்க அழைக்கிறோம்.
போட்டிக்கான விதிமுறைகள்
  • சிறுகதைகள் தமிழில் மட்டுமே இருக்கவேண்டும்.
  • கதைகள் சொற்கோப்பு(MS Word) அல்லது எளிதில் திருத்தம் செய்யக் கூடிய செயலியில், சீருரு(யூனிகோடு) எழுத்துருவில் வடிக்கப்பட்டதாய் இருத்தல் வேண்டும்.
  • கையெழுத்துப் படிகள், ஒளிப்படப்படிகள்,  பொதி(PDF) வடிவிலான ஆவணங்கள் கண்டிப்பாகப் போட்டியில் ஏற்கப்படமாட்டா.
  • சிறுகதைகளை கீழ்க் குறிப்பிடும் முகவரிக்கு மின்னஞ்சல் இணைப்பாக அனுப்பவேண்டும்.
  • கதைகள் 1500 முதல் 2௦௦௦ சொற்களுக்கு மிகாமல் இருத்தல் அவசியம்.
  • மொழிபெயர்ப்புச் சிறுகதைகள் ஏற்கப்படமாட்டா.
  • உங்களது படைப்புகள் இதுவரை வேறெந்த இதழ்களில் (இணையத்தளம், அச்சிதழ், சமூக வலைத்தளங்கள் முதலான ஊடகங்கள்) வெளியிடப்படவில்லை என்பதற்கு அடையாளமாகவும், படைப்பின் உண்மைத்தன்மையை உறுதி செய்தும் இணைப்பில் காணப்படும் ஆவணத்தை நிரப்பிப் படைப்புடன் அளிக்கவும்.
  • படைப்பாளரின் இயற்பெயர்(Real name),  அஞ்சல் முகவரி, தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரிகளைத் தெளிவாகக் குறிப்பிடுங்கள்.
  • கானம்பாடி பதிப்பகம் நியமிக்கும் நடுவர் குழுவின் தீர்ப்பே இறுதியானது.
  • தேர்ந்தெடுக்கப்படும் கதைகள் பனிப்பூக்கள் இதழ் அல்லது கானம்பாடி பதிப்பகத்தார் (Loon Media Group LLC) மூலம் வெளியிடப்படும். தேர்ந்தெடுக்கப்படும் கதைகளின் காப்புரிமை கானம்பாடி பதிப்பகத்தைச் சேர்ந்தது.
  • கதைகள் தொடர்பாக நடுவர்களுடனோ போட்டியை நடத்துபவர்களுடனோ எந்த ஒரு கடிதப் போக்குவரத்தோ தொலைபேசி தொடர்புகளோ மேற்கொள்ளப்படமாட்டாது.
  • சிறுகதைப் போட்டிக்குத் தங்கள் படைப்புகள் வந்து சேரவேண்டிய கடைசி நாள் மார்ச்சு 15, 2020.
  • வெற்றி பெற்ற சிறுகதைகள் பற்றிய அறிவிப்பு ஏப்பிரல் இரண்டாம் வாரம் அறிவிக்கப்படும்.
.கதை குறித்த நிபந்தனைகள்:
  1. கதைகள் தமிழர் வாழ்வியலைச் சார்ந்ததாக இருக்க வேண்டும்.
  2. உண்மை நிகழ்வுகளை அப்படியே சித்தரிப்பதைத் தவிர்க்கவும்.
  3. கதைகள் குடும்பம், மருமம், நகைச்சுவை, காதல் என்று எந்தப் பகுப்பைச் சார்ந்தும் இருக்கலாம்.
பரிசு விவரம்:
முதற்பரிசு: $150
இரண்டாம் பரிசு: $100
மேலும் பிற பரிசுகளும் உண்டு

News

Read Previous

பூவே

Read Next

கூச்சல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *