சீறாபுராணத்துக்கு தொடரடைவு

Vinkmag ad

இசுலாமியக் கம்பர் என்று போற்றப்படும் உமறுப்புலவர் எழுதிய சீறாப்புராணம் என்பது 5029 பாடல்களைக் கொண்ட ஒரு பெருங்காப்பியமாகும். இந்நூல் மூன்று காண்டங்களாகப் பிரிக்கப்பட்டு மொத்தம் 92 படலங்களைக் கொண்டது. இறைத்தூதர் முகம்மது நபி அவர்களின் வாழ்க்கை வரலாற்றைக் கூறுகிறது இந்நூல். என்ன காரணத்தினாலோ, நபி அவர்களின் முழு வாழ்க்கை வரலாறும் இந்நூலுள் அடங்கவில்லை. எனவே இந்நூல் முழுமை பெறாத ஒரு நூல் எனலாம்.

இப்பொழுது இந்நூலுக்கு தொடரடைவு (Concordance) உருவாக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே வீரமாமுனிவர் எழுதிய தேம்பாவணி என்ற கிறித்தவக் காப்பியத்துக்குத் தொடரடைவு உருவாக்கப்பட்டுள்ளது.

சீறாப்புராணத்துக்குரிய தொடரடைவுடன். சீறாப்புராணம் நூல் முழுவதும் சொற்பிரிப்பு முறையில் கொடுக்கப்பட்டுள்ளது.

இவற்றை, tamilconcordance.in என்ற என் இணையதளத்தில் தொடரடைவுகள் என்ற பெருந்தலைப்பின் கீழ், பக்தி இலக்கியங்கள் என்ற உள்தலைப்புனுள், சீறாப்புராணம் என்ற தலைப்பினைச் சொடுக்கிக் காணலாம்.

நன்றி,

ப.பாண்டியராஜா

முனைவர்.ப.பாண்டியராஜா
முன்னாள்:
துணைமுதல்வர், தலைவர்,கணிதத்துறை
இயக்குநர், கணினித்துறை

அமெரிக்கன் கல்லூரி, மதுரை

http://tamilconcordance.in/

News

Read Previous

கல்வி உதவித் தொகைகள் மற்றும் விண்ணப்பிக்கும் முறைகள் வழிகாட்டுதல் கருத்தரங்கம் – 2018

Read Next

அன்னை மடியில் அண்ணல் !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *