அன்னை மடியில் அண்ணல் !

Vinkmag ad
நாயகம் எங்கள் தாயகம்
–வலம்புரிஜான்
 
7.  அன்னை மடியில் அண்ணல் !
 
 
(பக்கம் 121-123)
 
 
போர்க்களம் புகுந்த புண்ணியன்
அரேபியாவில்
குறைஷி வம்சத்தாரும்
கீஸ் வம்சத்தாரும்
வாளை உருவினர்.
உறையிலே கிடந்தால்
துருப்பிடித்திடும் என
வீர வாட்களை
விடுதலை செய்தனர் !
நெருப்புப் பெட்டிக்குள்
உறங்கிய குச்சிகள்
தலைகளில் மருந்து
விழித்தே இருப்பதை
உரசிக் காட்டின !
அரபுப் பெருமணல் …
குருதிச் சேறாய்
குலைந்து புரண்டது !
அரபுச் சரித்திரம்
இந்தப் போரை …
ஹர்புல் ஃபிஜ்ஜர் !
என்றே அழைக்கும்.
குறைஷிக் குலத்தில்
ஒருவர் ஆதலால்
அபுதாலீஃப்பும்
போர்முனை நின்றார் !
சொல்லவே வேண்டாம் …
கை நீளும் போது
காப்பும் நீள்வது போல்
முகம்மது பெருமான்
முன்னே நின்றார் !
அப்போதவருக்கு
ஆனவயது – இருபது !
சண்டைக் களத்தைச்
சார்ந்த போதிலும்
படைக்கலன் தாங்கி – அவர்
போரிடவில்லை !
நினைவின்றி மங்கை
நீராடிய பின்னரும்
நிலைத்தே இருக்கும்
ஒட்டுப் பொட்டுப் போல் …
போர்முனை நின்றாலும்
மாறினாரில்லை ;
வாளை எடுத்து …
காற்றுக்கு –
வகிடு எடுக்கிற வேலையை
மற்றவர்களுக்கு
விட்டு விட்டார்
தாம் தனித்து நின்றார் !
அரபு மண்ணில்
அடிக்கடி நடக்கும்
வீரவிளையாட்டுக்களால் …
வெள்ள மழையில்
வேரழுகிச் சாகும்
கீரைப் பாத்திகள் போல் …
கிழிந்தன குடும்பங்கள் !
பார்த்தனர் தலைவர்கள் ;
பதைத்தனர் சில பேர்.
பட்டுப்புடவை முழுவதுமாக
சரிந்திருந்தாலும் …
சரிகை உறுத்தலை
உணராத உடல்களே
இங்கு – அதிகம் !
பரிசோதிக்கப்பட வேண்டிய
பழந்தமிழ் உடல்கள் இங்கே
அதிகம் என்பேன் …
[தொடரும் . . . ]
___________________________________________________
http://www.tamilvu.org/slet/l4100/l4100pd2.jsp?bookid=82&pno=123

News

Read Previous

சீறாபுராணத்துக்கு தொடரடைவு

Read Next

உங்கள் குழந்தைகளின் நலன் உங்கள் கையில்…..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *