சிறந்த தமிழ் நூலுக்கு ரூ.6 லட்சம் ரொக்கப் பரிசு

Vinkmag ad

சிறந்த தமிழ் நூலுக்கான சர்வதேச விருது மற்றும் ரூ.6 லட்சம் ரொக்கப் பரிசுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மலேசியாவின் தேசிய நில நிதி கூட்டுறவு சங்கம் அறிவித்துள்ளது.

இது குறித்து அச் சங்கத்தின் செய்தித் தொடர்பாளரும், மலேசியத் தமிழ் எழுத்தாளர்கள் சங்கத் தலைவருமான பி.ராஜேந்திரன் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியது:

தமிழர்கள் 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் வசித்து வந்தாலும் கூட, தமிழ் நூல்களுக்கான சர்வதேச விருது என்று இதுவரை எதுவும் வழங்கப்படவில்லை. அந்தக் குறையை போக்கும் நோக்கில் எங்கள் அமைப்பு இந்த விருதினை வழங்குகிறது.

இணையம், தொலைக்காட்சி, வானொலி என ஊடகங்களின் எண்ணிக்கை பெருகி வரும் வேளையில் அச்சு ஊடகத்தின் ஆர்வத்தைக் குறையாமல் பாதுகாக்கவும், தமிழ் எழுத்தாளர்களுக்கு சர்வதேச அங்கீகாரத்தை ஏற்படுத்தித் தரவும் இந்த விருதினை வழங்குகிறோம். சி

றந்த தமிழ் நூலுக்கான விருது 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை வழங்கப்படும். இந்த ஆண்டு விருது பெற 2012 மற்றும் 2013-ஆம் ஆண்டுகளில் தமிழில் எழுதி, பதிப்பிக்கப்பட்ட நாவல்கள், வரலாற்று நூல்கள், ஆய்வு நூல்கள் ஆகியவை இந்த விருதுக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவை. குறைந்தபட்சம் 100 பக்கங்களை கொண்டதாக அவை இருக்க வேண்டும். மேலும், இந்த நூலை எழுதியவர் தற்போது வாழ்பவராக இருக்க வேண்டும். மொழி பெயர்ப்பு நூல்கள் ஏற்கப்பட மாட்டாது.

இந்தத் தேர்வுக்கான விவரங்கள் மற்றும் விண்ணப்பப் படிவத்தை “http://tansrisomabookaward.org/’ என்ற இணையதள முகவரியிலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் மற்றும் நூலின் 3 படிகளை “The Secretary, TAN Sri K.R.Soma Book Award, National Land Finance Co-operative Society Limited, Level 10, Wisma Tun Sambanthan, NO:2 Jalan Sultan Sulaiman, P.O.Box 12133, 50768 Kuala Lumbur, Malaysia ‘ என்ற முகவரிக்கு 2014 மார்ச் 31-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

போட்டியில் வெற்றி பெறும் சிறந்த தமிழ் நூலுக்கு பரிசுத் தொகையாக 10 ஆயிரம் அமெரிக்க டாலர் (இந்திய ரூபாயில் சுமார் ரூ.6 லட்சம்) ரொக்கப் பரிசு வழங்கப்படும்.

போட்டி முடிவுகள் சங்கத்தின் இணையதளம் வழியாகவும், ஊடகங்கள் வழியாகவும், வெற்றியாளர்களுக்கு மடல் வழியாகவும் அறிவிக்கப்படும். 2014-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கோலாலம்பூரில் நடைபெறும் விழாவில் பரிசு வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு +601336 09989 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்றார் ராஜேந்திரன்.

News

Read Previous

அரசு – கல்லூரி பஸ்கள் மோதல்

Read Next

கல்ஃப் நியூஸ் ஆங்கில வார இதழில் டாக்டர் எஸ் அப்துல் காதர் பேட்டி

Leave a Reply

Your email address will not be published.