குர்ஆனில் தலைமுடி வருகிறதா?

Vinkmag ad

குர்ஆனில் தலைமுடி வருகிறதா?வெள்ளிக்கிழமை ஜும்ஆ நேர சிந்தனை!

1990 அல்லது 1991 என்றே நினைக்கிறேன்?அப்போது நான் அரபி கல்லூரியில் ஓதி கொண்டிருந்த நேரம்.திடீரென ஒரு வதந்”தீ”யை கிளப்பி விட்டனர் சிலர்.

அதாவது குர் ஆனின் யாசீன் சூரா மற்றும் சூரத்துல் வாகிஆ போன்ற பகுதிகளில் தலைமுடி வருதாம்.இது கியாமத் நாளின் அடையாளம் என்று பேசிக்கொள்கிறார்கள் என்பதே அந்த வதந்தீ.

தொழும் போதும் குர்ஆன் ஓதும் போதும் ஆணோ,பெண்ணோ தங்களின் தலையை மூடி மறைக்காமல் இருந்தால் தொழுகின்ற முஸல்லா அல்லது ஓதும் போது குர்ஆனிலோ தலைமுடி விழுவதற்கு வாய்ப்புகள் அதிகம் உண்டு என்பதை தீர்மானித்து விட்டு அந்த வதந்தீ குறித்து யோசிப்போம்.

குர்ஆன் ஓதும் போது பெரும்பாலும் நம்மில் பலரும் தலையை சொறிவது எதார்த்தம் அந்த நேரத்தில் தலைமுடி குர்ஆனில் விழுவதை நாம் கவனிப்பதில்லை.

சரி அந்த முடி ஏன் யாசீன் சூரா,வாகிஆ சூரா,அர்ரஹ்மான் சூரா,கஹ்ஃபு சூரா பக்கங்களில் விழ வேண்டும்? என்ற நமது கேள்விக்கு நம்மிடமே பதில் உள்ளது.மேற்கண்ட சூராக்களை அதிகம் ஓதி வந்த காலங்கள் அது.அதனால் அந்த பக்கங்களில் கண்டிப்பாக தலைமுடி இருக்கும்?

இந்த வதந்தீ குறித்து என்னிடம் ஒரு பெண் கேட்ட போது நானும் அதை தெரிந்து கொள்ள குர்ஆனின் குறிப்பிட்ட அந்த பக்கங்களை ஆய்வு செய்த போது அதை உணர முடிந்தது.

கியாமத் நாளின் அடையாளத்துக்கும் இதற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று அந்த பெண்ணிடம் கூறி விட்டு இனிமேலாவது குர்ஆன் ஓதும் போதும்,தொழும் போதும் கூடுமானவரை தலையை மூடி மறைத்து செயல்படுங்கள் அல்லாஹ் போதுமானவன் என்று நகர்ந்தேன்.
-கீழை ஜஹாங்கீர் அரூஸி.

News

Read Previous

குழந்தைகளின் திரைநேரத்தைக் குறைப்பது எப்படி?

Read Next

அறத்தான் வருவதே..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *