காயலர்கள் மொழிபெயர்த்த நூல்கள் அறிமுக விழா!

Vinkmag ad
துளிர் பள்ளியில் மார்ச் 16 அன்று நடைபெறுகிறது!!
அறிமுகம் மற்றும் ஆய்வுரை விழா
“The Road to Makkah” எனும் தலைப்பிலான நூலை, காயல்பட்டினத்தைச் சேர்ந்த ஹாஜி எஸ்.ஓ.அபுல்ஹஸன் கலாமீ – “எனது பயணம்” எனும் தலைப்பிலும், “Roots” எனும் ஆங்கில புதினத்தை, காயல்பட்டினத்தைச் சேர்ந்த எம்.எஸ்.அப்துல் ஹமீத் – “வேர்கள்” எனும் தலைப்பிலும் தமிழாக்கம் செய்துள்ளனர்.
உலகப் புகழ் பெற்ற இந்த நூல் மொழியாக்கங்களின் அறிமுகம் மற்றும் ஆய்வுரை விழா, இம்மாதம் 16ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமையன்று 16.30 மணிக்கு, துளிர் பள்ளி காணொளிக் கூடத்தில் நடைபெறுகிறது.
நூலாய்வுரை நிகழ்த்துபவர்கள்:

“வேர்கள்” – முனைவர் A. அஷ்ரஃப் அலீ (இணை பேராசிரியர், வரலாற்றுத் துறை, ஸதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, நெல்லை)
“எனது பயணம்” – முனைவர் A. நிஃமத்துல்லாஹ் (தலைவர், ஆங்கிலத் துறை, ஸதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, நெல்லை)

அனைவரும் கலந்து கொள்வீர்!
மேலும் விவரங்களைக் காண:
Inline image 1
Inline image 3
Inline image 4

News

Read Previous

முதுகுளத்தூர் அருகே வாகனச் சோதனையில் ரூ. 1.75 லட்சம் பறிமுதல்

Read Next

பன்னாட்டு ஆய்விதழ் – கட்டுரைகள் அனுப்புக!

Leave a Reply

Your email address will not be published.