கவியரசு கண்ணதாசன் பாடல்கள் – காலத்தை வென்றவை

Vinkmag ad

Kalathai Vendravai - Kavirimaindhan's Second Book on Kannadhasanகாவிரிமைந்தன் எழுதிய நூல் – வானதி வெளியீடு

‘கண்ணதாசனின் மறைவுக்குப் பிறகு தமிழுலகம் அவனுடைய பாடல்களில் புதிய புதிய அர்த்தங்களைக் கண்டு மகிழும்’ என்றார் ஜெயகாந்தன். நண்பர் காவிரிமைந்தன் ஜெயகாந்தன் சொன்னதைத்தான் சிறப்பாக இத்தொகுப்பில் செய்திருக்கிறார்.

கண்ணதாசனை ஒரு காதலியின் பரிசுத்த உணர்வுகளோடு நேசித்து,அவருடைய ஒவ்வொரு எழுத்திலும் தன்  ஆன்ம தரிசனம் கண்டு. அதிலேயே கரைந்து விடத் துடிக்கும் காவிரிமைந்தனின் இத்தொகுப்பு கவியரசரின் பாடல்களில் புதைந்துகிடக்கும் வகைவகையான வாழ்க்கை அனுபவங்களை இனிய தமிழில், சுகமான நடையில், அழகான மொழியில் படம் பிடித்துக் காட்டுகிறது.  காவிரிமைந்தனுக்கு என் அன்பும் வாழ்த்தும்!!

அன்புடன்.. தமிழருவி மணியன்  20.02.2013

தமிழ்த் திரையில் முடிசூடாச் சக்கரவர்த்தியாகத் திகழ்ந்த கவியரசு கண்ணதாசனின் பாடல்களில் தன்னுள்ளத்தைப் பறிகொடுத்து அவர் புகழ் பரவ முயற்சி எடுத்து வரும் காவிரிமைந்தன் என்கிற மு. இரவிச்சந்திரன் எங்கள் குழுமத்தில் பனி புரிகிறார் என்பதிலே மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்!

அன்புடன்..  சையது எம். சலாஹூதீன் …  துபாய்.

 

கவியரசின் தமிழ் இவரது உயிருள் கலந்துள்ளது.  அதுவே எழுத்தை உருவாகிறது.  சிரிப்பாக சிந்துகிறது.. கருத்தாகப் பிரவகிக்கிறது. மந்திரச் சொல்லாகிறது.  கலைக்கோயிலின் தரிசனம் காட்டுகிறது.

‘உள்ளந்தான் கள்வெறி கொள்ளுதடா ‘ என்று படிப்பவரை ரசிக்கவும் உருக்கவும் செய்கிறது.

சிந்தனைப் பொழிவை, திரைப்பாடல்களின் சாறு எனப் பிழிந்து சுவைக்க வைக்க, எழுதும் முறை – வெளிப்பட்டுத்திறன் என்னும் இரண்டிலும் பொருந்தும் அழுத்தமும் நேர்த்தியும் துனையாவதால், இந்நூல் இன்பத் தமிழ்ச் சுரங்கம் ஆகிறது!  கவியரசின் உணர்ச்சி பொங்கும் உள்ளத்தை அப்படியே தன்எழுத்தால் பிரதியெடுக்கும் காவிரிமைந்தனின் இதயமே ஒரு நகல் (Xerox Machine) எடுக்கும் எந்திரமோ?

தெளிவான – சுருக்கமான – பெருக்கம் உள்ளடங்கிய உயிர்ப்புத் தமிழைப் படித்த பின் – எழுத்துத் தாலாட்டில் ஒரு சுகம்! கிறக்கம்! அறியாத பல சுவைகளை அறிந்திட்ட நிறைவு!

கவியரசு என்னும் கவிப்பூவிற்கு – காவிரி என்னும் உயிர்ப்பூ, நெகிழ்வுடன் அருச்சிக்கும் காலத்தை வென்றிடும் காணிக்கைப்பூ இந்நூல்!

காவிரித்தமிழின் அருமை போற்றும் ..

முனைவர் கமலம் சங்கர் – மதுரை

நூல் கிடைக்குமிடம் – வானதி பதிப்பகம் –  23  தீனதாயாளு தெரு – தி.நகர்,  சென்னை 600 075  – 24342810 விலை –   ரூபாய் 140/-

News

Read Previous

நடைப் பயிற்சி: உடல் தன்னைத் தானே அறியும் முயற்சி

Read Next

வேலைக்கு சென்ற முதியவர் மாயம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *