ஒற்றுமையின் அவசியம்

Vinkmag ad

பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மான் நிர்ரஹீம்

எனது அன்பிற்கினிய எழுச்சிமிகு சகோதர சகோதரிகளே !!!

அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ்…)

“ நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாக பற்றி

 பிடித்துக் கொள்ளுங்கள் ; நீங்கள் பிரிந்தும் விடாதீர்கள் ” ( திருமறை வசனம் 3:103)

கண்ணியமிக்க அல்லாஹ்வின் நல்லடியார்களே,  நாம் அனைவரும் “லாயிலாக இல்லல்லாஹ் முஹம்மது ரசூலுல்லாஹ்”- என்ற திருக்கலிமாவை உள்மனதாலும்,  முழு ஈமானுடனும் உறுதிபடுத்தி உள்ளோம். இன்ஷா அல்லாஹ் நாளை மறுமை நாளில் நமக்காக சிபாரிசு செய்யக்கூடிய முஹம்மது நபி (ஸல்) அவர்கள் , இவ்வுலகில் வாழும் பொழுதும் , நாளை மறுமை நாளிலும் என் உம்மத்,  என் உம்மத், என் உம்மத் என்று மற்ற நபிமார்களை விட , உம்மத்தின் மீது பெரும் பாசம் வைத்துக்கொண்டு நமக்காக சிபாரிசு செய்யக்கூடிய நபி  ( ஸல் ) அவர்களின் உம்மத்தார்கள் நாம்! ஆனால் இப்போது பல பிரிவுகளாக சிதறிக் கிடக்கின்றோம் ஏன் சகோதரர்களே?,

மேற்கண்ட இறைமறையில் வல்ல நாயகன் கூறுகின்றான் : “ஒன்றாக இணைந்தும் , பிறிந்தும் விடாதீர்கள் என்று , இவ்வசனதிற்க்கும், அல்லாஹ்வின் சொல்லிற்கும் நம்மால் மாறு செய்ய முடியுமா சகோதரர்களே ? பல ஹதீஸ்களின்  மூலமாகவும் முஹம்மது நபி ( ஸல் ) அவர்களும் ஒற்றுமையை வலியுறுத்தி உள்ளார்கள் , ஆனால் இப்போது பல பிரிவுகளாக பிறிந்து உள்ளோம் ஏன் சகோதரர்களே?, .

நாளை அல்லாஹ்வின் அர்சின் கீழ் தனி தனி  பிரிவுகளாகவா நிற்க போகிறோம் , இல்லையே சகோதரர்களே?, .

இக்காலக் கட்டத்தில் ஒருவரை ஒருவர் குறை கூறிக்கொண்டு , பல பிரிவுகளாக பிரிய வேண்டும் என்பது சைத்தானின் சூழ்ச்சி . அதனை பல வகையில் எதிரிகளின் மூலமாக அமல் படுத்துகின்றான். வல்ல நாயனிடம் சவால் விட்டு வந்திருக்கும் சைத்தானின் சூழ்ச்சியிலிருந்து வல்லோனிடத்தில் பாதுகாப்பு பெற்று எல்லோரும் ஒரு குடையின் கீழ் ஒன்று சேர்வோமாக!! ஆமீன்!! போதும் சகோதரர்களே! , முஸ்லிம் உம்மத்தார்கள் பல கூறுகளாக பிரிந்து , பல இன்னல்களை சந்தித்தது போதும் சகோதரர்களே!

“ஆதமுடைய மக்கள் அனைவரும் தவறு செய்யக்கூடியவர்களே !!”

நம்மிடையே நிகழும் கறுத்து வேறுபாடுகளுக்கான தீர்வை இன்ஷா அல்லாஹ் ஏக இறைவனிடமிருந்து பெற்றுக்கொள்வோம். அதற்காக இறைவனிடத்தில் துஆ செய்வோமாக ஆமீன் , அதனை வல்ல நாயன் ஏற்றுக்கொள்வானாக ஆமீன்!.

இயக்கங்கள் வெவ்வேறாக இருப்பினும் , நமது நோக்கங்கள் ஒன்றாக இணைந்து வெற்றியை பெறுவதாக இருக்க வேண்டும் , இன்ஷா அல்லாஹ்!

 

 

  • நாம் தெரிந்தவர்களைவிட .. தெரியாதவர்களுக்கு சலாம் கூறும்போது அதிக நன்மையை பெறுகின்றோம் .
  • மற்றவர்கள் தும்மும்போது “யார்ஹமுஹல்லாஹ்” என்று கூறும்போது அதிக நன்மையை பெறுகின்றோம் .
  • பக்கத்து வீட்டார் பசித்திருக்கும் போது நாம் வயிறு நிறம்ப சாப்பிடக்கூடாது என்று இஸ்லாம் கூறுகின்றது .
  • நாம் விரும்புவதையே நம் சகோதரனுக்கும் விரும்பு

என்று இஸ்லாம் கூறுகின்றது .

இன்னும் திருமறையின்  வாயிலாகவும்  பல ஹதீஸ்கள் வாயிலாகவும் வல்ல நாயன் ஒற்றுமையை வலியுருதிகின்றான் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.

நாம் அனைவரும் பிறக்கும்போதே இரக்ககுணம் , மனிதாபிமானம் , மற்றும் பல நற்குணங்களை ஈமானுடன் வல்ல நாயன் தந்து தான் அனுப்பி உள்ளான். முஹம்மது ( ஸல் ) அவர்கள் மற்ற உம்மத்தைவிட என் உம்மத் அதிகமாக இருப்பதை விரும்புகின்றேன் என்றார்கள் . ஆனால் குஜராத்திலும்  மற்ற மாநிலங்களிலும் , மற்ற நாடுகளிலும் எத்தனை பேர் எதிரிகளால் கொன்று முஹம்மது நபி (ஸல்) உம்மத்தார்களை அழித்துள்ளர்கள் . நம் சகோதரனோ  , சகோதரியோ எதிரிகளால் தாக்கப்பட்டு , இறந்தார்கள் என்றால் அதன் மூலம் எத்தனை தலைமுறைகளை இழக்கின்றோம்.இவ்வாழ்கையானது கொசுவின் இறக்கையைவிட மிக மெல்லியது . ஆனால் இந்த சிறு வாழ்க்கைக்காக நமக்குள்ளேயே தர்க்கித்து , ஒருவரை ஒருவர் குறை கூறிக்கொண்டு பிரிந்து கிடப்பது என்பதை நினைக்கும்போது மனதிற்கு வேதனையை அளிக்கின்றது சகோதரர்களே !!

நம் சகோதரர்கள் , எந்த இயக்கத்தை சார்ந்தவர்களாக இருந்தாலும்  சரி,  அந்த சகோதரரின் கண் முன்னே நம் சகோதர சகோதரிக்கோ அல்லது மாற்று மத சகோதர சகோதரிக்கோ துன்பங்கள் ஏற்பட்டால் உடனே அவர்களுக்கு உதவிட நம் உணர்சிகளை வல்ல நாயன் தூண்டிவிட்டு . உதவிட செய்வான். ஏன் என்றால் அந்த உதவிடும் மனப்பான்மையை அவன்தான் நமக்கு தந்துள்ளான். ஆகவே நம் அனைவருக்கும் வல்ல நாயன் வைத்த பெயர் மூமின் , இன்ஷா அல்லாஹ் இதை படிக்கும் ஒவ்வொரு சகோதர சகோதரிகளும் கிப்லாவை முன்னோக்கி இரண்டு ரகாத் நபில் தொழுதுவிட்டு வல்ல நாயனின் முன்பாக

( என் இயக்கம் இஸ்லாம், ஒன்றுதான் , மூமின்கள் நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்த உறுப்பினர்கள். இனி என் சகோதர சகோதரிகளிடம் ஒன்றிணைந்து எதிரிகளின் சூழ்ச்சிக்கு ஒருபோதும் வழி வகுக்காமல் என்னுடன் அரவணைத்து கொள்வேன் என்று ” )

நிய்யத் செய்து கொள்வோமாக … வல்ல நாயன் நம் ஒற்றுமையை மறுமை நாள் வரை நீடிக்க வைத்து  ஈருலகிலும் வெற்றியை தருவானாக ஆமின்

குறிப்பு : இந்த தகவலை அனைத்து இயக்கங்களுக்கும் அனுப்பி உள்ளேன் , தாங்கள் இதனை அந்தந்த கிளைகளுக்கும் ஒவ்வொரு சகோதர சகோதரிகளுக்கும் அறிய படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.

­இங்ஙனம்

ஒற்றுமையை விரும்பும் உங்கள் சகோதரன்

M. ஹாஜா மாலீம் – நாகூர் (from DubaiFROM DUBAI :  00971 55 9427087 ) 

haja.bcom@gmail.com

News

Read Previous

ரமழானைத் திட்டமிட்டுக் கொள்ள சில வழிகாட்டல்கள்

Read Next

ஜூன் 24……. கவியரசரின் பிறந்த நாள்….

Leave a Reply

Your email address will not be published.