ஏரிகள் நகரம்

Vinkmag ad

ஏரிகள் நகரம் – நைனிதால் – வெங்கட் நாகராஜ்

வெங்கட் நாகராஜ்21030536505_a4a017570d_b
மின்னூல் வெளியீடு : http://FreeTamilEbooks.com

வெங்கட் நாகராஜ்…..  என் பெயரில் பாதியும் அப்பா பெயரில் முக்காலும் சேர்த்து வலைப்பூவுக்காக வைத்துக் கொண்ட பெயர்.  அதுவே இப்போது பழகி விட்டது! நெய்வேலி நகரத்தில் பிறந்து வளர்ந்து கல்லூரி முடித்த வருடத்திலேயே இந்தியத் தலைநகர் தில்லிக்கு வந்துவிட்டவன்! கிட்டத்தட்ட 25 ஆண்டுகளாக தில்லி வாசி. பயணம் செய்வது மிகவும் பிடித்த விஷயம்.  கடந்த 2009-ஆம் ஆண்டிலிருந்துwww.venkatnagaraj.blogspot.com எனும் வலைப்பூவில் எழுதி வருகிறேன்.  சென்று வந்த பயணங்கள், அதில் கிடைத்த அனுபவங்களை வலைப்பூவில் எழுதி வருகிறேன். இந்தியாவின் பல மாநிலங்களுக்குச் சென்று வந்திருக்கிறேன்.   இது வரை எழுதிய பயணக் கட்டுரைகளில் சிலவற்றை மின்புத்தகமாக வெளியிட நண்பர்கள் சிலர் சொன்ன யோசனையின் பேரில், இது எனது கன்னி முயற்சி…  ஆமாம் இது முதல் மின்புத்தகம்!

 

 

உத்திராகண்ட் மாநிலத்தில் உள்ள நைனிதால்…..  அழகிய பல ஏரிகளைக் கொண்ட நகரம் என்பதால் இந்நகரை ஏரிகள் நகரம் என்றே அழைக்கிறார்கள்.  கடும் குளிர்காலத்தில் நானும் நண்பர்களும் இங்கே பயணம் செய்த போது பார்த்த இடங்கள், எங்களுக்கு கிடைத்த அனுபவங்கள் ஆகியவற்றினை எனது வலைப்பூவில் எழுதினேன்.

பொதுவாகவே பனிப்பொழிவு இரவு நேரங்களில் தான் அதிகம் இருக்கும். அறிவியல் ரீதியாக உண்மையோ பொய்யோ, மிகவும் ரசனையோடு சிலர் சொல்வது இது தான்.  பனிப்பொழிவினை இரண்டு விதமாக பிரிக்கலாம் –  ”ஒன்று பனிக்கட்டி மழை மற்றொன்று பஞ்சு போன்ற பனி மழை – அதிலும் பஞ்சு போன்ற பனிக்கு வெட்கம் அதிகம் அதனால் யாரும் பார்க்காத இரவு வேளையில் தான் பஞ்சு போன்ற பனி அதிகம் பொழியும்”

இப்படி சுவாரஸ்யமான பல விஷயங்களை இப்பயணத்தில் நாங்கள் தெரிந்து கொண்டோம்…  அப்படி பார்த்த, கேட்ட, ரசித்த விஷயங்கள் ஒரு தொகுப்பாக…….

 

 

 

ஆசிரியர் – வெங்கட் நாகராஜ் – venkatnagaraj@gmail.com

மின்னூலாக்கம் –வெங்கட் நாகராஜ்

 

அட்டைப்படம் – மனோஜ் குமார் – socrates1857@gmail.com

creative commons attribution Non Commercial 4.0 international license

உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.

 

பதிவிறக்க*

 http://freetamilebooks.com/ebooks/lake-city-nainital/

 

News

Read Previous

செப்.13 ராமநாதபுரத்தில் மகாகவி பாரதி விழா

Read Next

அவர்தான் இவர் !

Leave a Reply

Your email address will not be published.