உலகின் முதல் விஞ்ஞான பயணமே, மிஃராஜ் என்னும் நபிகளாரின் விண்ணுலக பயணம்!

Vinkmag ad

உலகின் முதல் விஞ்ஞான பயணமே, மிஃராஜ் என்னும் நபிகளாரின் விண்ணுலக பயணம்!

நபிகள் நாயகத்தின் மிஃராஜ் என்னும் விண்ணுலக பயணம் குறித்த இரண்டு சிறுமிகளின் விவாதங்களில் மிக முக்கியமான கேள்வி இதுதான்?
லுப்னா: இறைவன் தூணிலும் இருப்பான்,துரும்பிலும் இருப்பான் என்று சொல்லும் போது,நபிகள் நாயகம்(ஸல்)அவர்களின் மிஃராஜ் பயணம் விண்ணுலகத்தில் ஏற்பாடாகியது ஏன்?
ஷஹானா: உலகில் தோன்றிய ஒவ்வொரு நபிமார்களுக்கும் இறைவன் ஒவ்வொரு சிறப்பினை கொடுத்து கண்ணியப்படுத்தினாலும்,நமதருமை நாயகம்(ஸல்)அவர்களுக்கு மட்டும் அனைத்து நபிமார்களுக்கும் கொடுத்த எல்லா சிறப்பினையும் வழங்கி உயர்வு படுத்தியுள்ளான்.
நபி மூஸா(அலை)அவர்கள் தூர்சீனா மலையில் அல்லாஹ்வுடன் பேசினார்கள். நபி ஈஸா(அலை) அவர்கள் நான்காம் வானம் உயர்த்தப்பட்டார்கள். எனவே பெருமானார் (ஸல்)அவர்கள் நான்காம் வானம் தாண்டிச் சென்று அல்லாஹ்வை சந்திக்க வேண்டியதால் விண்ணகம் சென்றார்கள்.
லுப்னா: நபிகள் நாயகம்(ஸல்)அவர்கள் அர்ஷில் போய் அல்லாஹ்வை சந்திக்க வேண்டிய அவசியம் ஏன் வந்தது?
ஷஹானா: மண்ணுலகில் இருந்து விண்ணுலகம் வரைக்குமான அனைத்தும் பெருமானார்(ஸல்) அவர்களின் ஒளியிலிருந்து அவர்களுக்காகவே படைக்கப்பட்டன.
படைப்பினங்களின் முதலானவரான பெருமானார்(ஸல்) அவர்கள் படைப்பினங்களின் அவசியத் தேவைகள் எதிலும் படைப்பினங்கள் பால் தேவையற்றவர்கள் என்பதையும் படைத்தவனிடம் மட்டுமே அவர்கள் தேவையுள்ளது என்பதையும் எடுத்துக் காட்டவேண்டி ஏற்பட்டதால் அர்ஷுக்கும் மேலாக செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டதால் விண்ணகம் சென்றார்கள்.
லுப்னா: மற்ற நபிமார்களைப்போல நபிகள் நாயகம்(ஸல்)அவர்களுக்கும் வானவர் கோமான் ஜிப்ரயீல்(அலை)அவர்கள் அல்லாஹ்வின் செய்தியை வந்து சொல்லியிருப்பார்கள் தானே?பிறகு ஏன் நேரடியாக நமது நபியவர்கள் அல்லாஹ்வை சந்திக்கனும்?
ஷஹானா: நபிமார்கள் அனைவரும் வானவர் தூதர் ஜிப்ரீல் (அலை)அவர்களின் மூலமே அல்லாஹ்வைப் பற்றியும், சொர்க்கம், நரகம் பற்றியும் அறிந்து மக்களுக்கு விளக்கம் கூறினார்கள்.
ஆனால் பெருமானார் (ஸல்) அவர்கள் ஏனைய நபிமார்களைப் போன்று இரண்டாம் தரப்பு செய்திகளைக் கூறாமல் நேரடியாகவே அல்லாஹ்வையும், சொர்க்கம், நரகம் முதலியவற்றையும் நேரில் கண்டு கூறும் சாட்சியாளராக இருக்க வேண்டும் என்று அல்லாஹ் விரும்பினான். அதனால் விண்ணகம் நோக்கிய பயணத்திற்கு ஏற்பாடு செய்தான்.
லுப்னா: நபியவர்கள் மிஃராஜ் பயணத்தில் அல்லாஹ்வை சந்தித்ததின் அடையாளங்கள் எவ்வளவோ இருக்கலாம்?அதில் நமக்கு உதவக்கூடிய புரியக்கூடிய ஏதேனும் ஒன்றை தெரிந்து கொள்ளலாமா?
ஷஹானா: நாம் தற்போது தொழுது வரும் 5 வக்து தொழுகையும் நபியவர்களின் விண்ணுலக பயணத்திற்காக தனது நினைவு பரிசாக அல்லாஹ் கொடுத்தது தான்.
லுப்னா: நபியவர்களுக்கு கிடைத்ததை போல நமக்கும் அந்த விண்ணுலக பயணம் கிடைத்தால்…நாமும் அல்லாஹ்விடம் ஒரு பரிசை வாங்கியிருக்கலாமே?
ஷஹானா: லுப்னா மச்சி,இப்படியெல்லாம் நாம் ஆசைப்படுவோம் என்பதை உணர்ந்து கொண்டதினால் தான்,நமது நபியவர்கள் தொழுகை தான் முஃமீன்களுக்கு மிஃராஜ் என்று உறுதி படுத்தி சொல்லியிருக்காங்க.
லுப்னா: ஷஹானா மச்சி,அப்ப நாம் தினமும் 5 நேரமும் தொடர்ந்து தொழுதால்…5 முறையும் மிஃராஜ் செய்த பாக்கியம் கிடைக்குமே?
ஷஹானா: ஆமா,கண்டிப்பாக நமக்கு அந்த பாக்கியம் கிடைக்கும்.
லுப்னா: ஒரு முறை மிஃராஜ் பயணம் போன நமதருமை நாயகம்(ஸல்)அவர்களால்,ஒரு நாளைக்கு 5 முறை மிஃராஜ் செல்லும் நன்மையை தனது அடியார்களுக்கு கொடுத்துள்ள இறைவனின் அருட்கொடைக்கு நிகர் எதுவுமே இல்லை மச்சி.
ஷஹானா: அடியார்கள் இந்த உண்மையை புரிந்து மிஃராஜின் மகத்துவத்தை உணர்ந்திருந்தால்…ஒவ்வொரு வக்து தொழுகையிலும் பள்ளிவாசல்கள் நிரம்பி வழிந்திருக்கும்?
லுப்னா: சரி மச்சி,மற்றவர்கள் எப்படியோ?ஆனால்,நாம் இனிமேல் ஒரு வக்து தொழுகையை கூட விட்டு விடாமல் தொழுவோம்.ஒவ்வொரு நாளும் 5 முறை மிஃராஜ் என்னும் அருளை பெறுவோம்.
ஷஹானா:நல்லது மச்சி,இன்ஷா அல்லாஹ்….அப்படியே செய்வோம்.
-கீழை ஜஹாங்கீர் அரூஸி.

News

Read Previous

உரத்தகுரலை எழுப்புவோம் !

Read Next

ஏரோசால் தெளிப்பதால் அதிகரிக்கும் மழைப்பொழிவு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *