இறையச்சம் மேலோங்கிட இதயத்தை குர்பானி கொடுப்போம்!

Vinkmag ad
இறையச்சம் மேலோங்கிட இதயத்தை குர்பானி கொடுப்போம்!
ஈதுல் அள்ஹா என்னும் தியாக திருநாளாம் பெருநாள் கொண்டாடும் எனது அன்பு மக்களே,நமது இஸ்லாமிய வரலாற்றின் மகத்தான நிகழ்வினை நினைவு கூறும் இந்நாளில் நபி இப்றாகீம்(அலை)அவர்களின் இறையச்ச தியாக உணர்வினை நம் இதயத்தில் ஏந்தி கொள்வோமாக.
இவ்வுலக வாழ்வென்பது முற்றிலும் நம்மை படைத்த இறைவனுக்கானது என்ற ஓர்மை சிந்தனையை நாம் உள் வாங்கி கொண்டால்,இவ்வுலக சோதனை யாவும் நமக்கான நாளை மறுமையின் இலாபம் தரும் நல்ல வியாபாரமே.
தன்னை படைத்த இறைவனுக்காக தனது பிள்ளையையே அறுத்து பலி கொடுக்க துணிந்த இப்றாகீம்(அலை).ஹாஜரா(அலை)ஆகியோர் முதலில் தங்களின் இதயத்தை தான் குர்பானி கொடுத்தார்கள்.
ஆம்,தான் பெற்ற பிள்ளையை தனது கைகளால் அறுக்க துணிவதற்குரிய தியாக சிந்தனைக்கு ஏற்ப தனது உள்ளத்தில் இருந்த இரக்கம் என்னும் உயிர் சிந்தனையை குர்பானி கொடுத்ததினால் தான்,அந்த தியாக வரலாற்றை உறுதி படுத்த முடிந்தது.
அல்லாஹ்வின் திருப்திக்காக உன்னை அறுக்க போகிறேன் என தனது தந்தை கூறிய போது,மறுப்பேதும் கூறாமல் அல்லாஹ்வின் அருளுக்குரிய செயல் இதுவென்றால்…அதற்கு நானும் முழு மனதோடு சம்மதிக்கிறேன் என கூறிய இஸ்மாயீல்(அலை)அவர்களும் தனது உள்ளத்தை தான் முதலில் குர்பானி கொடுத்தார்கள்.
இறையச்சத்தின் பக்கம் நம்மை நெருக்கி கொள்ள முதலில் நம் இதயத்தை  தியாகம்(குர்பானி )என்னும் பக்குவப்படுத்திடல் வேண்டும்.
நமது உயிர்,உடல்,உடைமை,குடும்பம்,சொத்து,சுகம் இவை யாவுமே நம்மை படைத்த அல்லாஹ்வுக்குரியதே என்னும் ஓர்மை சிந்தனையை உள்வாங்கி கொண்டு அதற்கான தியாகத்தை(குர்பானி)முன்னெடுக்க தயாராவோம்.
இறையச்சம் மேலோங்கிட இதயத்தை குர்பானி கொடுப்போம்!
அனைவருக்கும் எனது இனிய தியாக திருநாள் வாழ்த்துக்கள்.
-கீழை ஜஹாங்கீர் அரூஸி.

News

Read Previous

தியாகத் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

Read Next

மின்மினி இதழ் ஆசிரியர் தில்லை சிதம்பரப்பிள்ளை

Leave a Reply

Your email address will not be published.