அவள் என் தேவதை

Vinkmag ad

மகளிர்  பக்கம்

அவள் என் தேவதை          (சிறுகதை)

 

மாலை ….மனதுக்கு மிகவும் ரம்மியமாக  இருந்தது. கடலில் தொடரும் அலைகள் என் தாயின் சேலை மடிப்போ, என கவிதை பாடும் நீலாம்பரி இன்று அந்நிலையில் இல்லை.

அலைகள் ஆக்ரோசமாய் வந்து,வந்து சிறு பிள்ளையின் விளையாட்டை போல,சில நிமிடங்களில் சிதறி போயிற்று.

சிந்தனை ரேகைகள் முகத்தில் கோடு போட நீலக்கடலை வெறித்தபடியே நீலாம்பரி.

அவள் தோள் சோ்ந்தபடி கணவன் கோபிநாத்.

என்ன நீலு என்ன யோசனை…? ப்ளீஸ் சொல்லுடா..

கோபி உங்கம்மா எடுக்கிற எந்த முடிவானாலும் எனக்கு ஓகே கோபி” நீலாம்பரியின் குரல் பிசிறடித்தது.

நீலு எனக்கு குழந்தை வேண்டும் என்கிறது நிஜம்!ஆனா அம்மா சொல்ற மாதிரி ,திருமண முடிவு எடுக்க என்னால முடியாது.இந்த ஏழு வருட தாம்பத்தியத்தில்,  அம்மா குழந்தைக்காக காத்திருந்த நாட்கள் கானல் நாட்களாயிடுச்சி.

இனியும் அவங்களை ஏமாற்ற முடியாது நீலு.கோபியின் தீா்க்கமான பதிலில் உடைந்து போனாள்.

கோபி உங்கம்மா சொன்னபடி இன்னொருத்தியை உங்களுக்கு உரிமையாக்க தகுதியிருக்கு.நான் என்னிக்குமே இதற்கு தடையா இருக்க மாட்டேன் எனி.வே ஐ டோன்ட் கோ்! திரும்பி நடந்தவளை பின் தொடா்ந்தான் கோபி.

காலை டிபன் முடித்து அலுவலகம் விரைந்தான் கோபி. குட்மார்னிங் சார் சில ஃபைலில் உங்கள் கையெழுத்து வேண்டும் வேகமாக வந்தாள் சுகந்தி. அவள் கோபியின் செகரட்டரி.

அம்மா கோமதி சுகந்தியை அவன் வாழ்க்கையின் செகரட்டரி ஆக்க முடிவு செய்து விட்டாள்.

கோபிக்கு தான் இருதலை கொள்ளி நிலை.மனித வாழ்க்கையில் இரு நிலைகள் உண்டு.படுத்து கிடப்பவன் தூங்க முடிவதில்லை, தூங்க நினைப்பவன் படுக்க முடிவதில்லை!

கோமதியின் விருப்பம் இல்லாமல்,கல்லூரிக்காதலில் கரம் பிடித்தான் நீலாம்பரியை!அதனால்தானோ என்னவோ கோமதி நீலாம்பரியிடம் கோபமதியாகவே காட்சி தருவாள்.

அதற்கு ஏற்றார்போல,குழந்தை இல்லாத குறை வேறு!

கோபியும் நீலாம்பரியும் ஆதா்ச தம்பதிகள்தான்.கோமதி ஒரு ஹார்ட்பேஷண்ட்.அவளை எதிர்த்து பேச முடியாத நிலை.

கோபி…  எங்கேப்பா கிளம்புறே..?

ஊட்டியில் ஒரு கான்பரன்ஸ் இருக்கும்மா.அதை முடிச்சிட்டு வந்து சுகந்தியோ,சாந்தியோ  உன்னிஷ்டபடி பார்க்கலாம்.உதடு சொன்னாலும் உள்ளம் மறுத்தது.

இரவு ஊட்டி போகும் ரயிலில் தான் முன்பதிவு செய்திருந்த பெட்டியில் போய் அமா்ந்தான்.ரயில் நகர துவங்கியதுமே ஜன்னல்அருகே அமா்ந்தான். தூரத்தில் வெளிச்சப்புள்ளிகள் தெரிந்து மறைந்தது.அந்த தனிமை பிடித்தது கோபிக்கு!

அடுத்த கம்பார்ட்மெண்டில் குழந்தைகளின் கரகோசமும்,கைத்தட்டலும் காதைப் பிளந்தது.கோபி எழுந்து அடுத்த பெட்டியை நோக்கி முன்னேறினான். வாண்டுகள் இவனை ஒரு மாதிரி பார்த்தது. ஹலோ,யூ ஆா் வெல்கம் ஸ்டூடன்ஸ் எந்த ஸ்கூல் பசங்க நீங்க…?கேட்டவனை “நீங்க எந்த ஸ்கூல்” ஒரு வாண்டு திருப்பி கேட்டது.

வாட் ஹேப்பண்ட் …?கேட்டபடி வந்தவள் இவனை இமைக்காமல் பார்த்தாள்.

“ஹாய் கோபி எப்படிப்பா இருக்கே?என்னை தெரியலே..ஐ ஆம் சாதனா!

அந்த தெற்றுப்பல் குறும்பு சிரிப்பு அடையாளம் காட்டியது.சாதனா நீயா..?உன்னையே கட்டுப்படுத்த முடியாது.நீ ஸ்டூடன்சை கட்டுப்படுத்துறியா?

“ ந்நோ,இவங்க என்னோட குழந்தைகள்” சொல்லும் போதே அவள் முகத்தில் ஒரு சுடரின் வெளிச்சம்.

சாதனா அப்போ நீ மேரேஜ்..?

கல்யாணம் எத்தனை முறை வேணாவரும்.ஆனா காதல்ஒரு முறை தாம்பா வரும். காட்டில் எத்தனை பூ பூக்குது வெளியே தெரியாமலே மொட்டு விட்டு மலர்ந்து,பின் உதிர்ந்து அந்த மண்ணுக்கு உரமாகுது.அந்த மாதிரி எனக்குள்ளே ஒரு பூ பூத்தது.யாருக்கும் தெரியாம உதிர்ந்தது கோபி.

ஆமா நீலு எப்படி இருக்கா.? என்ன கோபி பார்க்கிற..?

கல்வி என்கிற சூரியன் என்கிட்டே இருக்கு.அது எனக்கு வழிகாட்டும்.நான் ஆா்பனேஜ் நடத்திட்டே இன்னும் படிக்கிறேன்.

இமைக்காமல் பார்த்தவனை,பார்த்து விழிகளை தாழ்த்திக்கொண்டாள்.

சாதனா…கல்லூரி வாழ்க்கையில்ஒரு கலக்கல் புயல். பல பேர் அவளுக்கு ஏங்கினாலும் அவள் ஏங்கியது கோபிக்காகதான். கோபியும் நீலாம்பரியும் காதலா்களாய் வளைய வந்தபோது,நட்பு என்கிற எல்லையிலே நின்றுகொண்டாள்

கோபி நீ அம்மா சொன்ன மாதிரி,இன்னொரு கல்யாணம் பண்ணப்போறியா..?கோபி.

என் நீலாம்பரியை விட்டுட்டா.?நோ முடியாது சாதனா.

கோபி நீ ஊட்டிக்கு தானே வர்றே.?என்னோட ஆா்பனேஜ்க்கு நீ ஏன் வரக்கூடாது..?

“ஷ்யூா் நிச்சயமாக வருவேன் சாதனா.எனக்கும் மாற்றம் வேணும்.”சொன்னவன் அதை செயல்படுத்தி காட்டினான்.

ஆா்பனேஜ் வாசலில்இறங்கும் போதே, மனம் அவன் வசம் இழந்தது.ஊட்டியின் வண்ண பூக்களின் நடுவே இன்னொரு மலர்க்குவியலாய் மழலைப்பூக்கள் .

வாங்க கோபி,சீதாம்மா இரண்டு டீ உள்ளே குரல் கொடுத்தாள்.

சொல்லு கோபி என்னோட குட்டிஆசிரமம் எப்படி இருக்கு.அப்பா எனக்காக விட்டுட்டு போன சொத்தையெல்லாம்  ஒரு நல்லகாரியத்துக்கு  பயன்படுத்துறேன். இங்கே தாயால் மறுக்கப்பட்ட குழந்தைகள் உண்டு.

மத்திய அரசு எனக்கு மூன்று அவார்டு தந்திருக்கு.பல சங்கங்கள் தமிழகத்தின் சிறந்த பெண்ணாய் என்னை தேர்ந்து எடுத்திருக்கு.வெள்ளையாய் சிரித்தாள்.

சாதனா நீசாதிச்சுட்டே,இன்னொரு நைட்டிங்கேலா,இன்னோரு தெரசாவா உலகம் உன்னை புகழ ,ரொம்ப நாள் இல்லை.நானும் ஒரு முடிவுக்கு வந்திருக்கேன், எஸ்…   என்னோட நீலாம்பரிக்கு பெண் குழந்தைன்னா ரொம்ப பிடிக்கும். எனக்கு ஒரு தேவதையை செலக்ட் பண்ணி தா சாதனா.

சொன்ன கோபியை புன்னகையோடு பார்த்தாள் சாதனா.!

—-

 

உமா ஆதிநாராயணன்.

குமரி உத்ரா. துபாய்.

aumaasj@gmail.com

News

Read Previous

திமுக செயல்வீரர்கள் கூட்டம்

Read Next

முதுகுளத்தூரில் முஸ்லிம் லீக் 68 வது நிறுவன தின கொடியேற்று விழா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *