கொரோனாவின் இரண்டாவது அலை

Vinkmag ad

கொரோனாவின் இரண்டாவது அலை ஆபத்து நிறைந்ததென்றும் வருகின்ற நான்கு வாரங்கள் அதன் பரவல் உச்சத்தில் இருக்கும் என மத்திய அரசு எச்சரித்தாகிவிட்டது.
நோயாளிகளின் எண்ணம் கூடிக்கொண்டிருக்கிறது.
விழாக்களின் போது நம்மவர்களுக்கு கொரோனாவைப் பற்றிய சிந்தனையே இல்லை!
தேர்தலின்போது அதை அடியோடு மறந்தோம்!
டாஸ்மாக் கடைகளைக் கண்டால் கோவிட் பயந்து ஓடிவிடும் எனப் புதிய கொள்கை வகுத்தோம்!
சமூக இடைவெளியைப் பொருட்படுத்தவில்லை!முகக்கவசத்தை முற்றிலும் மறந்தோம்!
இந்த இக்கட்டான நேரத்தில் பிறந்த நாள் விழா போன்றவற்றிற்கு விடைகொடுக்கலாம்.நடத்துவதென்றால் வீட்டுக்குள் நடத்தலாம்.
ஊரையெல்லாம் அழைத்து உபத்திரவப்படுத்தலாமா?
விருப்பும் வெறுப்பும் அற்றவர் கடவுள்.அவர் பெயரால் சமூக இடைவெளியை மறக்கலாமா?
விலை மதிப்பற்றது உயிர்.போனால் வராது.
அரசு கூறும் விதிகளைப் பின்பற்றுவோம்!தடுப்பூசியை எடுப்போம்!கொரோனாவை அகற்ற உறுதியேற்போம்.!!!

News

Read Previous

கீழக்கரை வரலாறு

Read Next

இலவச இணைய வளங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *