அர்னாப் கோஸ்வாமிவின் மனுக்களை மட்டும் உச்சநீதிமன்றம் உடனடியாக விசாரணைக்கு எடுத்துக் கொள்வது எப்படி?

Vinkmag ad

அர்னாப் கோஸ்வாமிவின் மனுக்களை மட்டும் உச்சநீதிமன்றம் உடனடியாக விசாரணைக்கு எடுத்துக் கொள்வது எப்படி?

 

ரிபப்ளிக்’ டிவி முதலாளியும்இந்துத்துவா ஆதரவாளருமான அர்னாப் கோஸ்வாமி தாக்கல் செய்யும் மனுக்களை மட்டும் உச்சநீதிமன்றம் உடனடியாக விசாரணைக்கு எடுத்துக் கொள்வது எப்படிஅவருக்கு மட்டும் ஏன் இந்தச் சலுகைஎன்று உச்ச நீதிமன்ற பார் அசோசியேஷன் (Supreme Court Bar Association – SCBA) தலைவரும் மூத்த வழக்கறிஞருமான துஷ்யந்த் தவே கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக கடிதம் ஒன்றையும்உச்சநீதிமன்றத்தின் செயலாளர் ஜெனரலுக்கு (secretary general) துஷ்யந்த் தவே அனுப்பியுள்ளார்.

 

அந்தக் கடிதத்தில்அவர் கூறியிருப்பதாவது: கொரோனா தொற்றுக் காலத்தில்கடந்த மாதங்களாக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பல மனுக்கள்வாரக்கணக்கில்மாதக்கணக்கில் பட்டியலிடப்படாமல்- விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படாமல் உள்ளன. இதனால்,சிறையில் அடைக்கப்பட்ட ஆயிரக்கணக்கானோர் ஜாமீன் கோரி காத்திருக்கின்றனர்.

ஆனால்ஒவ்வொரு முறையும் அர்னாப் கோஸ்வாமி தாக்கல் செய்யும் மனுக்கள் மட்டும் உடனடியாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படு கின்றனவேஇது எவ்வாறு?பொதுவாகஇதுபோன்ற அசாதாரணமான அவசர மனுக்கள்விசாரணைக்கு பட்டியலிடப்படுவதுதலைமை நீதிபதியின் குறிப்பிட்ட உத்தரவுகள் இல்லாமல் நடக்காது என்பது அனைவரும் அறிந்ததே. அந்த வகையில்இந்திய தலைமை நீதிபதியிடம் இருந்தோநிர்வாகத் தலைவராகிய உங்களிடமிருந்தோ அல்லது பதிவாளரிடம் இருந்தோ அர்னாப் கோஸ்வாமி மனுக்களுக்கு மட்டும் ஏதும் முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளதா என்பதை அறிய விரும்புகிறேன்.

 

வழக்கு பட்டியலிடப்படுவது தொடர்பான விஷயங்கள் கணினிமயம் ஆக்கப்பட்டதாகக் கூறப்படும்போதும் இதுபோன்ற முன்னுரிமை விஷயங்கள் எவ்வாறு நடைபெறுகின்றனசாமானிய குடிமகன்கள் பலர் சட்டவிரோதமாக சிறையில் இருக்கும் நிலையில்அர்னாப் கோஸ்வாமிக்கு மட்டும் ஏன் இந்த சிறப்புச் சலுகைமத்திய முன்னாள் அமைச்சரும்மூத்த வழக்கறிஞருமான ப. சிதம்பரத்தின் ஜாமீன் மனு கூட அவசரமாக பட்டியல் இடப்படவில்லை. அது தாமதிக்கப்பட்டது.ஆனால்அர்னாப் கோஸ்வாமியின் மனு மட்டும்தாக்கலான ஒரே நாளில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டு இருப்பது வேதனை தருகிறது. எனக்கு அர்னாப் கோஸ்வாமியுடன் தனிப்பட்ட பிரச்சனை ஏதுமில்லை. உச்சநீதிமன்றம் மற்ற குடிமகன்களைப் போல் அர்னாப் கோஸ்வாமியையும் நடத்த வேண்டும் என்பதற்காகவே இக்கடிதத்தை எழுதுகிறேன். 

அர்னாப் கோஸ்வாமி-யின் ஜாமீன் மனு மீதான விசாரணையின்போதுஎனது இந்த கடிதத்தைத் தாங்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்” இவ்வாறு துஷ்யந்த் தவே கூறியுள்ளார்.மும்பையைச் சேர்ந்த கட்டட உள்வடி வமைப்பாளர் அன்வாய் நாயக்கை (53) தற்கொலைக்குத் தூண்டியதாகஅர்னாப் கோஸ்வாமிகடந்த நவம்பர் 4-ஆம் தேதி கைது செய்யப்பட்டுநவிமும்பை தலேஜா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பதும்அவரது மனுவை செசன்ஸ் நீதிமன்றமும்மும்பை உயர் நீதிமன்றமும் ஏற்கெனவே நிராகரித்து விட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.

(தற்போது அர்னாப் கோஸ்வாமி ஜாமீன் பெற உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது என்பது கடைசிச் செய்தி)

News

Read Previous

கலைஞர் எனும் கருணாநிதியின் வாழ்க்கை வரலாறு

Read Next

பள்ளிவாசல் தொடக்கப்பள்ளி

Leave a Reply

Your email address will not be published.