போட்டி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு

Vinkmag ad

இறைவனின் திருப்பெயரால்

சேலம் பொருளாதார கூட்டமைப்பின் ( Salem Economic Chamber) சார்பாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) போட்டி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெறுகின்றன.
முன்னாள் குடியரசு தலைவர் A.P.J. அப்துல் கலாம் அவர்களின் கனவான இந்தியா வல்லரசுடன் நல்லரசாக மாற, நாடு முன்னேற்றம் பெற பொருளாதாரரீதியில் நலிவடைந்த அனைத்து சமுதாய மக்களும் அனைத்து அரசு துறைகளிலும் வேலை வாய்ப்பு பெற்று சிறப்புடன் பணியாற்றிடவும் நாட்டு முன்னேற்றத்திற்கு தமது பங்கினை செலுத்திடும் நோக்கில் இப்பயிற்சி வகுப்புகள் ஆரம்பிக்கப்படுகின்றன.

அனுபவமிக்க பயிற்சியாளர்களைக்கொண்டு பயிற்சி வகுப்புகள் ஆரம்பிக்கப்படுகின்றன.

TNPSC குருப் I, II, IIA, IV மற்றும் VIII ஆகிய போட்டி தேர்வுகளுக்கு சிறப்பான பயிற்சி அளிக்கப்படும்.

தேர்வை பொறுத்து குறைந்தபட்ச கல்வித்தகுதி 10 ம் வகுப்பு முதல் ஏதேனும் ஒரு கல்லூரி பட்டப்படிப்பு.

கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் விதவைகள் இப்பயிற்சியில் கலந்து கொண்டு தேர்வில் வெற்றி பெற்று இறைவன் அருளால் தமது வாழ்வாதாரத்தை உயரத்தும் இந்த நல்ல வாய்ப்பை பயன்படுத்திட வேண்டுகிறோம்.

பயிற்சி வகுப்புகள் சனிக்கிழமை மற்றும்
ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும்.

நேரம் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை.

வகுப்புகள் ஆரம்பம் ஞாயிற்றுக்கிழமை 27.12.2020 அன்று 11 மணியளவில் தொடக்க விழாவுடன்.

பயிற்சி நடைபெறும் இடம் : ஜாமியா பள்ளிவாசல் வளாகம், சேலம்-1.

பெண்களுக்கு தனி இடவசதி செய்யப்பட்டுள்ளது.
இந்த பயிற்சி வகுப்புகள் அனைத்து சமுதாய மக்கள் அரசாங்க அதிகாரிகளாக உருமாறி கல்வி மற்றும் பொருளாதார ரீதியில் நல்ல நிலையை அடைய ஆரம்பிக்கப்படுகின்றன. இப்பயிற்சி வகுப்புகள் தொடர்ந்து சிறப்புடன் நடைபெற எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்தனை செய்யுமாறு பணிவுடன் வேண்டுகிறோம்.

பதிவு செய்ய தொடர்புக்கு:

இஸ்மாயில் – 90430 00360.

News

Read Previous

இந்திய ஹஜ் அசோஷியேசன் தலைவர் பிரசிடெண்ட் அபூபக்கர் வெளியிட்ட அறிக்கை

Read Next

பண்பாட்டுப் பேரறிஞர் தொ.பரமசிவன் மறைவு தமிழினத்திற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு! வைகோ இரங்கல்

Leave a Reply

Your email address will not be published.