வெளிநாடுகளில் வாழும் தமிழர்களுக்கு ராமநாதபுரம் ஆட்சியர் யோசனை

Vinkmag ad

வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் தங்களது குறைகளை நிவர்த்தி செய்து கொள்ள ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரை தொடர்பு கொண்டு பலனடையுமாறு ஆட்சியர் க.நந்தகுமார் வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பது.

வெளிநாடு வாழ் தமிழர்கள் தொடர்புடைய அலுவல்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அவர்களால் கவனிக்கப்படுகிறது. எனவே தேவையுள்ளவர்கள் அவரை அணுகி குறைகளை

நிவர்த்தி செய்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது. மாநில அளவில் தொடர்பு கொள்ள விரும்புவோர் அகதிகள் மறுவாழ்வு மற்றும் தமிழகத்திற்கு வெளியே வாழும் தமிழர்கள் நலவாழ்வு ஆணையரகம்,எழிலகம் வளாகம் (இணைப்பு) 4ஆவது தளம், சேப்பாக்கம்,சென்னை-600005. தொலைபேசி எண்:044-28515288 பேக்ஸ் எண்-044-28591135.

வெளிநாடுகளில் வேலைவாங்கித் தருவதாகக் கூறும் முகவர்களின் உண்மைத்தன்மையை தெரிந்து கொள்ள மத்திய அரசின் அலுவலகத்தை அணுகலாம். தொலைபேசி மற்றும் பேக்ஸ் எண்-044-24891137  என்ற முகவரியில் தொடர்பு கொண்டு தெரிவித்து பயன்பெறுமாறும் ஆட்சியர் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News

Read Previous

திருக்குர்ஆன் தெளிவுரை : அறிவுக்கு அறை கூவல் !

Read Next

மன வயல் செழிக்க வந்த மா மழை

Leave a Reply

Your email address will not be published.