திமுக வேட்பாளர் அறிமுகக் கூட்டம்
முதுகுளத்தூரில் செவ்வாய்க்கிழமை திமுக வேட்பாளர் அறிமுகக் கூட்டம் யாதவர் திருமண மஹாலில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்டச் செயலர் சு.ப.தங்கவேலன் தலைமை வகித்தார். ஒன்றியச் செயலர் முனியசாமி, தலைமை செயற்குழு உறுப்பினர் முத்துராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் மாநில இளைஞரணி துணைச் செயலர் சு.ப.சம்பத், மாவட்ட துணைச் செயலர் கருப்பையா உள்பட பலர் கலந்து கொண்டனர்.